என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் காய்கறி வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடிய 2 பெயிண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 55 )இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அன்று உதயசூரியன் வீட்டிற்கு தேன்கனிக்கோட்டை அருகே லக்க சந்திரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (45) , திம்மசந்திரம் கிராமத்தை சேர்ந்த முருகேஷ் (43) ஆகிய இருவரும் பெயிண்ட் அடிக்க வந்துள்ளனர். பெயிண்ட் அடித்து விட்டு வீட்டில் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை திருடி விட்டுச் சென்றனர்.

    பின்னர் வீட்டிற்கு வந்த உதயசூரியன் பீரோவைத் திறந்து பார்த்துள்ளார். பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து தேன்கனிக் கோட்டை  போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பெயிண்ட் அடிக்க வந்தவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் நகையும் பணமும் திருடியதை ஒப்புக்கொண்டனர். உடனே 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த இரண்டு போல் தங்க நகையும் 40 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்தனர். மீதி பணம் 60 ஆயிரம் செலவு செய்துவிட்டதாக கூறினர். பின்னர் கைது செய்த இருவரையும் ஓசூர் சிறையில் அடைத்தனர்

    வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த தொழிளாளர்கள் 2 பேர் பணமும் நகையும் திருடிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வாட்டர் டேங்க் ஆப்ரேட்டரை அடித்துக்கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அண்ணா நகரை சேர்ந்தவர் முத்தப்பன் (வயது 55). தண்ணீர் டேங்க் ஆபரேட்டர் ஆவார். இவரது சொந்த ஊர் போகிபுரம் ஆகும். அண்ணா நகரில் முத்தப்பனின் மகன் முரளி, மருமகள் சுமித்ரா வசித்து வருகிறார்கள். வீட்டின் தரைத்தளத்தில் அவர்கள் வசிக்கிறார்கள். முதல் தளத்தில் முத்தப்பன் தங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை முத்தப்பன் தங்கி தள அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் மருமகள் சுமித்ரா அங்கு சென்று பார்த்தார். அப்போது அறையில் தரையில் இறந்த நிலையில் முத்தப்பன் கிடந்தார். அவரை சுற்றி ரத்தமாக காணப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது முத்தப்பன் பின்புற தலையில் காயத்துடன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை மர்ம நபர்கள் யாரோ பின் தலையில் தாக்கி கொலை செய் துள்ளனர். அவர் இறந்து 2 நாட்கள் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதையடுத்து போலீசார் முத்தப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை யார் கொலை செய்தார்கள் என சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே வாகனம் மோதியதில் விவசாயி பலியானார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோனேரிப் பள்ளியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 33), விவசாயி.

    சம்பவத்தன்று, ஸ்கூட்டரில் அவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். வழியில், பேரண்டப்பள்ளி காட்டுப்பகுதி அருகே சென்றபோது,  அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது.

    இதில், பார்த்தசாரதி தலையில் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

    இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் கொரோனா நோய் தொற்றுக்கு பெண் பலியானார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 57 வயது பெண் கொரோனா பாதிப்புடன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 698 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    இதுவரை மாவட்டத்தில் 57 ஆயிரத்து 790 கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 51 ஆயிரத்து 476 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 5 ஆயிரத்து 946 பேர் சிகிச்சையில் உள்ளன. இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 368 ஆக உள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி துவார காபுரியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 28). இவர் ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதை தனது பெற்றோருக்கு தெரிவித்தார். இவரது காதலை பெற்றோர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலாஜி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒற்றை யானை தாக்கி இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெலமங்கலம் பகுதிகளில் ஒற்றை யானை சுற்றி வருவதால் கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த நார்ப்பனப்பட்டியை சேர்ந்தவர் சின்ன சின்னப்பா (வயது 70). இவர் ஆடு, மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்து சென்று மேய்ச்சல் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை இவர் மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி சென்றார். பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், வனப்பகுதிக்கு சென்று தேடி பார்த்தனர்.

    அப்போது அங்கு சின்ன சின்னப்பா , பிணமாக கிடந்தார். உடனே உறவினர்கள், அருகில் சென்று பார்த்த போது அவர், ஒற்றை யானை தாக்கியதில் பலியானது தெரிய வந்தது.

    இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் நாகராஜன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கெலமங்கலம் போலீசாரும் சென்று விசாரித்தனர்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒற்றை யானை தாக்கி இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெலமங்கலம் பகுதிகளில் ஒற்றை யானை சுற்றி வருவதால் கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

    இதனால் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்பவர்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளயே வரவேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    கிருஷ்ணகிரி மாவட்ட சூளகிரி அருகே செல்போன் டவர் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாசில்தார் அலுவலக முன்பு செல்போன் டவர் அமைக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடந்தது. 

    கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா காளிங்காவரம் ஊராட்சி பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செல்போன் டவர் அமைக்க கோரி  சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் சூளகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.  

    இதில் மாநிலத் தலைவர் சாமி தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாலத்தில் மோட்டார் சைக்கிளில் மோதியதில் வாலிபர் பலியானார்.
    மத்தூர்:

    கள்ளகுறிச்சி மாவட்டம் குலத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் செழியன் (வயது 23). இவர் பெங்களுரு செல்ல குலத்துமேட்டு தெருவில் இருந்து நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில்  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை அருகே வந்த போது இரவு என்பதால் பாலத்தின் மீது மோதி பாலத்தின் அடியில் விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் போலீஸார் விரைந்து சென்று படுகாயமடைந்த செழியனை மீட்டு ஆம்பலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலே செழியன் பரிதாபமாக இறந்து விடுகின்றார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    ஓசூர்:

    ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 21). 

    இவருக்கு கடந்தஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. நவீன்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்தது.

    இதனால் மனமுடைந்த நவீன்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 567 பேர் பாதிக்கப்பட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 567 பேர் பாதிக்கப்பட்டனர். 614 பேர் சிகிச்சையில் குண மடைந்தனர். 57 ஆயிரத்து 298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 50 ஆயிரத்து 778 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    தற்போது 6 ஆயிரத்து 153 பேர் சிகிச்சையில் உள்ள னர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
    வேப்பனப்பள்ளி:

    கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா அருகே உள்ள காமசந்திரம் பக்கமுள்ளது கீர்மந்தா கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் ராமக்காள் (வயது 60).

    வேப்பனப்பள்ளி பகுதிக்கு வந்திருந்த அவர் வேப்பனப்பள்ளி & பேரிகை சாலையில் பூதிமுட்லு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அவர் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த ராமக் காளை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமக்காள் இறந்தார். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள வெற்றிலை கானூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பரத் (வயது 25). இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகின்றார். பின்னர் பரத் திருச்செங்கோடு பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்து மனமுடைந்த நிலையில் இருந்துள்ளதாக உறப்படுகிறது. 

    இந்நிலையில் வாலிபர் பரத் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து உறவினர்கள் பாரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் விரைந்து சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர் பரத்தின் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×