என் மலர்
கிருஷ்ணகிரி
- ஒசூர் 37-வது வார்டில் ரூ.67.70 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளை பிரகாஷ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
- மேயர் எஸ். சத்யா கலந்து கொண்டார்.
ஓசூர் மாநகராட்சி 37-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்பிஎம் காலனி, ஜவகர் நகர் ,அம்பாள் நகர், மிடுகரப்பள்ளி பகுதிகளில் ரூ.67.70 மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், அங்கன்வாடி மையம், , ஆழ்துளை கிணறு, கல்விக் கட்டிடம் பணிகளுக்கு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ஜவகர் நகர், அம்பாள் நகரில் திறந்த வெளி உடற்பயிற்சி மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, 37-வது வார்டு கவுன்சிலர் சென்னீரப்பா, கவுன்சிலர் மாதேஸ்வரன் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஓசூர் எம்ஜிஆர் கல்லூரி வணிக மேலாண்மை துறை சார்பில், தொழில் முனை வோர் கருத்தரங்கம் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, எம்ஜிஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி பேசுகையில், இன்றைய காலக்கட்டத்தில் வேலை யில்லாமல் இருப்பது மிகவும் கடினம். ஒரு குடும்பம் நிலையான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்றால் ஆண், பெண் பாகுபாடு இன்றி தொழில்துறையில் முன்னேறுவது அவசியமாக உள்ளது என்று கூறினார்.முன்னதாக, வணிக மேலாண்மை துறைத் தலைவர் மஞ்சுநாத் வர வேற்று பேசினார். இதில், சிறப்பு விருந்தி னராக சுரேஷ் கலந்து கொண்டு, ஸ்டீல் டியுப்ஸ் குறித்த கருத்துரை களை மாணவர்களிடையே தெளிவு படுத்தினார்.
மற்றுமொரு சிறப்பு விருந்தினராக, கார்த்திக் ஏழுமலை கலந்து கொண்டு, தொழில் முனை வோருக் கான தகுதிகள், நோக்கங்கள், அதனால் உண்டாகும் பயன்கள் பற்றிய சிந்தனை களையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் முனைவோர் அமைப்புகள் எங்கெல்லாம் உள்ளன? என்றும், அந்த அமைப்பு களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் நிகழ்ச்சியில் பேசினார். இந்நிகழ்ச்சியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில், வணிக மேலாண்மை துறை பேராசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.
தொழில் முனை வோர் கருத்தரங்கிற்கான ஏற்பாடு களை, வணிக மேலாண்மை துறை பேராசி ரியர்கள் செய்திருந்தனர்.
- தேன்கனிக்கோட்டையில் அருகே அரசு பள்ளியில் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது
- வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே எஸ்.குருபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. தெலுங்கு ஆங்கில வழியில் 20 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக நாராயணப்பா பணிபுரிந்து வருகிறார்.
இப்பள்ளி வளாகத்தில் கடந்த 20 வருடங்களாக பல்வேறு மரங்கள் அப்பகுதி மக்கள் நட்டு மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள 3 மரங்களை தலைமை ஆசிரியர் நாராணப்பா ஆட்களை வைத்து வெட்டி அகற்றினார். இதையறிந்த கிராம மக்கள் தலைமை ஆசிரியரிடம் மரங்களை ஏன் வெட்டினீர்கள், மரங்களை வெட்ட அனுமதி பெற்றுள்ளீர்களா என சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு அவர், பொதுமக்களிடம் உரிய பதில் கூறாமல் சென்றார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர், வட்டார கல்வி அலுவலர் கோவிந்தப்பா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் வட்டார கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தலைமையா சிரியரிடம் நேற்று விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று தாசில்தார் பரிமேலழகர், தலைமை யாசிரியர் நாரா ணப்பாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது பள்ளி சுற்று சுவரில் மரங்கள் சாய்ந்து விழும் நிலையில் இருந்ததால், அந்த மரங்களை வெட்டியதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,
- மாணவிகளுக்கு பாதுகாப்பு கையேடு வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சோபனா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பி, டி, ஒ, விமல் ரவிக்குமார், வட்டார விரிவாக்க அலுவலர் சமுக நலம் ஜெயம்மா, ஐ.சி.டி.எஸ். விரிவாக்க அலுவலர் சிவ அமிர்தவல்லி, ஒருங்கினைந்த சேவை மைய அலுவலர் சர்வகலா, ஊர்நல அலுவலர் ஜோதிலட்சுமி, மற்றும் அலுவலர்கள் சுகந்தா அமுதா ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் போஸ் எக்பர்ட் (கூல்) , நிறுவனம் மூலம், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், குறித்த விழிப்புணர்வை, அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர்கள், ஐ.சி.டி, எஸ்- பணியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
ஐ.சி.டி, எஸ், சிறப்பு விரிவாக்க அலுவ லர்சிவ அமிர்த வல்லி பேசியாதவது;-
பணி செய்பவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் . புகார் குழு அமைக்கப்பட வேண்டும். ஆண் பெண் பணியாளர்களுக்கு சட்டம் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடத்த வேண்டும் புகார் குழுவுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும்.
புகார் குழு செயல்பட போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். தவறுகள் நடந்தால் இந்திய தண்டனைச் சட்டப்படி தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர். இதில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- பஸ்சில் மயங்கி விழுந்த பெண்ணனை ஆஸ்பத்திரியில் சேர்த்த டிரைவரை பொதுமக்கள் பாராட்டினர்
- 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு
பெங்களூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி, நேற்று மாலை அரசு பஸ் ஒன்று ஓசூர் வழியாக சென்றது. இதில் 60 பயணிகள் இருந்த னர். இதனை முருகன் என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த நிலையில், கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூர் அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் பஸ் சென்ற போது, அதில் பயணம் செய்த 50 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, பஸ்சை, டிரைவர் சாலையோரமாக நிறுத்தினார். மேலும், 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து, ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், அந்த பெண்ணின் உயிரை காக்க டிரைவர் துரிதமாக செயல்பட்டு, 60 பயணிக ளுடன் பேருந்தை சூளகிரி யில் உள்ள 24 மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்தார்.
அந்தப் பெண், மருத்துவ மனையில் சிகிச்சை அளித்த தில் அவர், உணவு சாப்பிடா ததால் குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக மயங்கியிருக்கலாம் என கூறப்பட்டது. மேலும், அவர், திருப்பத்தூரை சேர்ந்த பாக்யலட்சுமி (55) எனவும் தெரியவந்தது. ஆஸ்பத்திரியில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்ட ரின், துரித நடவடிக்கை மற்றும் மனிதாபிமான செயலை பொதுமக்கள் மிகவும் பாராட்டினர்.
- காவேரிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலை முன்பு நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மெழுகுவர்த்தி ஏந்தி கோஷமிட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் காந்தி பிறந்த நாளையொட்டி முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மகாத்மா காந்தி, பேரறிஞர் அண்ணா, காமராஜர் ஆகியோரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து காவேரிப்பட்டணத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு மண்டபத்தை மீட்க கோரியும் வட்டார நகர இந்திய தேசிய காங்கிரஸ் அலுவ–லகத்தின் அவல நிலையை தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் தவமணி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட செயலாளர் கோவிந்தன், காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மீனவர் அணி செயலாளர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் ராதா, முன்னாள் நகர தலைவர் வின்சன்ட் உள்ளிட்ட ஏராள–மான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மகசூலின் அடிப்படையில் காப்பீட்டு தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
- ஏக்கர் 1க்கு அதிகபட்ச இழப்பீடாக, நெல் பயிருக்கு ரூ.36,700 வழங்கப்படும்.
திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 24 பருவ பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அவர்கள் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டு தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுதிட்டம் 2023 சிறப்பு பருவம் அரசாணை பெறப் பட்டுள்ளது. சிறப்புபருவம் நெல்- ஐ பயிருக்கு அறிவிப்பு செய்யப்பட்டு காப்பீட்டு கட்டணம் செலுத்து வதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கடன் பெறும் மற்றும் கடன்பெறா விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்ப டுத்தும் இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீக ரிக்கப்பட்ட முகவர்கள் மூலமா கவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். ஏக்கர் 1க்கு அதிகபட்ச இழப்பீடாக, நெல் பயிருக்கு ரூ.36,700 வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில்; ஏற்படும் இழப்புகளுக்கும் பிர்கா வாரியாக சோதனை அறுவடை செய்து இழப்பின் அளவை கணித்து பயிர் காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இழப்பின் போது காப்பீட்டு தொகை தவறாமல் கிடைக்கும்.
விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள மக்கள் கணினி மையங்களை அணுகி நெல் பயிறுக்கு ஏக்கருக்கு ரூ.550.50- செலுத்தி இத்திட்டத்தில் தங்களது பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் எண், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை மக்கள் கணினி மையத்திற்கு சென்று பதிவேற்றம் செய்து பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மது விற்கும் சந்து கடைகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனியாக இடம் தேர்வு செய்து காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சூளகிரி போலீசார் உரிமையியல் வழக்குகளில் தலையிட்டு பொதுமக்களுக்கு தேவையின்றி தொல்லைக் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும். கிருஷ்ணகிரி நகராட்சியில் ஏற்கனவே பணிபுரிந்த ஆணையாளர் கடந்த காலங்களில் நடை பெற்ற முறைகேடுகளை கண்டறிந்து தவறு செய்தவர்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து எடுத்தார். பின்னர் காரணம் இன்றி ஆணையாளர் பணியிடை மாற்றப்பட்டார்.
இந்த முறைகேடு வழக்குகளை மத்திய அமலாக்க பிரிவு, மத்திய புலனாய்வு துறையும் விசாரித்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும். கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணத்தில் குண்டும், குழியுமான சாலைகளை புதுப்பித்து, மது விற்கும் சந்து கடைகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி நகரில் ரவுண்டானா அருகில், காய்கறி கடைகள் வைத்துள்ளதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தனியாக இடம் தேர்வு செய்து காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் தியாகராஜ நாயுடு வரவேற்றார். மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மேகநாதன், மாவட்ட அமைப்புத் தலைவர் திம்மராயன், மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் சோமசுந்தரம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அருள், மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர் மோகன்ராம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இஸ்மாயில், மாவட்ட துணைத் தலைவர் சின்னபையன், மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி வரதராஜன், மாவட்ட துணை செயலாளர் பொன்னப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, ராமலிங்கம் மற்றும் ஒன்றிய செயலா ளர்கள், தலைவர்கள், நகர தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 60-க்கும் மேற்பட்டோர் தொடர் விடுப்பு கோரி மனு அளித்தனர்.
- நெற்கதிர் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகள் கொள்முதல் செய்து விவ சாயிகளுக்கு வாடகைக்கு விட வலியுறுத்துகின்றனர்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தொடர் விடுப்பு கோரி மனு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் தனபால் தலை–மையில் மாவட்ட செயலா–ளர் செந்தில், பொருளாளர் ராஜதுரை உள்பட 60-க்கும் மேற்பட்டோர் தொடர் விடுப்பு கோரி மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
கூட்டுறவு சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் அல்லது விவசாய உள் கட்டமைப்பு நிதி திட்டத்தை அனைத்து சங்கங்களும் அமல்படுத்த வேண்டுமென செயலாட்சியர் மற்றும் களமேலாளர் மூலம் நெருக்–கடி கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, 40 கிராம் நகைக்கடன் தள்ளு படி, மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி அறிவிக்கப் பட்டது. இதில், சங்கத்தின் சொந்த நிதி அரசிடமிருந்து முழுமையாக வரவில்லை. இதனால் லாபத்தில் இயங்கும் சங்கங்கள் கூட நஷ்டத்தை சந்தித்து வரு கின்றன.
கடந்த காலங்களில் பல்வேறு விவசாய உபகர ணங்கள், கிடங்குகள் போன்ற பணிகளில் சங்கங் கள் பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் அல்லது விவசாய உள் கட்டமைப்பு நிதி திட்டத்தில் டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகள் கொள்முதல் செய்து விவ சாயிகளுக்கு வாடகைக்கு விட வலியுறுத்துகின்றனர்.
இதனால், நஷ்டத்தில் இயங்கும் சங்கங்கள் மேலும் சரிவை சந்திப்பதோடு, பணியாளர்களும் மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர். எனவே மாவட்டத்தில் உள்ள, 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், 105 சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் தொடர் விடுப்பு கோரி மண்டல இணைப்பதிவாளரிடம் மனு அளித்துள்ளோம். தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வனப்பகுதியில் உள்ள கண் பார்வை தெரியாத காட்டெருமை இரை தேடி கல்குவாரி பகுதிக்கு வந்துள்ளது.
- பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீர் குடிக்க சென்றுள்ளது. இதில் கால் தவறி 35 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்ட தேன்கனிக்கோட்டை அருகே அகல கோட்டை அடுத்துள்ள கும்ளத்துர் கிராம வனப்பகுதியையொட்டி செயல்படாத கல்குவாரி உள்ளது.
வனப்பகுதியில் உள்ள கண் பார்வை தெரியாத காட்டெருமை இரை தேடி கல்குவாரி பகுதிக்கு வந்துள்ளது. அங்கு பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீர் குடிக்க சென்றுள்ளது. இதில் கால் தவறி 35 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனால் கால்களில் முறிவு ஏற்பட்டும், உடலில் காயம் ஏற்பட்டும் வலியால் கத்திகொண்டிருந்து. இதை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து உடனடியாக ஜவளகிரி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை அறிந்த ஓசூர் உதவி வனபாதுகாவலர் மாரியப்பன், ஜவளகிரி வனசரக அலுவலர் முரளிதரன், வனவர் ரமேஷ், வனகாப்பாளர் கோவிந்தராஜ், மல்லேஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த காட்டெருமையை பள்ளத்தில் இருந்த தீவிர முயற்சியில் மீட்டனர்.
பிறகு வனவிலங்கு கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் கால்நடை மருத்து குழுவினர் விரைந்து வந்து கால்கள் முறிவு ஏற்பட்டிருந்ததால் அந்த இடத்திலேயே தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிலமணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.
- ஆவல் நத்தத்தில் தூய்மை பணி நிகழ்ச்சி நடைபெற்றது.
- பா.ஜ.கவினர் ஈடுபட்டனர்-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சி ஆவல்நத்தம் பசவேஸ்வர கோவில் அருகில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன் தலைமை தாங்கி, தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ஸ்ரீராமுலு, பொதுச் செயலாளர் பிரசாந்த், சந்திரன், முருகன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர நரேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கோவிந்தராஜ், பிரசார பிரிவு நிர்வாகி சந்திரன், மண்டல நிர்வாகி கள் சீனிவாச அய்யர், மதன், முருகன், ஸ்ரீகாந்த், வேடியப்பன், கிருஷ்ணன், லிங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்கள் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது.
- மாணவர்கள் கலந்து கொண்டனர்-
தூய்மை பாரதம் இயக்கத்தில் பங்கேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை தூய்மை செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதியமான் பப்ளிக் பள்ளி, அதியமான் மகளிர் கலைமற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரியை சேர்ந்த பாரதசாரண, சாரணியார்கள், குருளையார் மற்றும் நீலப்பறவையார், ஜுனியார் ரெட் கிராஸ் மாணவ, மாணவிகள், யூத் ரெட் கிராஸ் மாணவிகள் மற்றும் ஆசிரியார்கள், பேராசிரியார்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை 4 முனை சந்திப்பு, அரசு மருத்துவ மனை, பஸ் நிலையம், கல்லாவி சாலை, போலீஸ் நிலையம், பழைய கடைவீதி மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகிய பகுதிகளை அவர்கள் சுத்தம் செய்தனர்.
அதைதொடர்ந்து தூய்மை பாரதம் இயக்கத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு தூய்மையின் நோக்கம் மற்றும் அதன் நன்மைகளை பற்றி அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் சிறப்புரையாற்றினார்.






