என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழுதான தார்சாலை சேறும், சகதியுமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
பழுதான தார் சாலையால் பொதுமக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- ஊத்தங்கரை அருகே பழுதான தார் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 5 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாசனூர் முதல் மாரம்பட்டி கூட்ரோடு சாலை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தார் சாலை மிகவும் மோசமாக பழுதாகி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்த சாலையை சாசனூர் உள்ளிட்ட 5 கிராம பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையாகும். பாம்பாறு அணை கிழக்கு புற கால்வாய் ஓரம் அமைந்துள்ள தார்சாலை கடந்த 5 ஆண்டுகளாக காலமாக பழுதாகி குண்டு குழியமாக காட்சியளிக்கிறது.இப்பகுதி பஸ் வசதி இல்லாத கிராம பகுதியாகும்.
எனவே அப்பகுதி கிராம மக்கள் அனைவரும் தங்களது அத்தியாவசிய தேவையான மருத்துவமனை , பள்ளி மற்றும் கல்லூரிக ளுக்கு செல்லவும், உணவு பொருட்கள் வாங்கவும், விவசாய இடு பொருட்களை நகர் பகுதியில் விற்பனை செய்ய கொண்டு செல்லவும், சிரமபட்டு வருகின்றனர்.
மேலும் தங்களது முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய ஊத்தங்கரை போன்ற நகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அனைவரும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி இந்த சாலைவழியாக தான் செல்ல . அப்போது அவர்கள் அந்த சாலையில் சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.பெரும்பாலான நேரங்க ளில் உரிய நேரத்திற்கும் உரிய பணிகளை செய்து முடிக்காத அவல நிலைக்குதள்ளபட்டுள்ளதாக இபபகுதி மக்கள் புலம்புகின்றனர்.
எனவே இந்த பழுதான தார் சாலையை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






