என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை படத்தில் காணலாம்.
கிருஷ்ணகிரியில் தொடங்கியது: வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்
- கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் தொடங்கியது.
- மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிகளில் கலந்து கொள்பவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக்கல்விதுறை சார்பில் வருவாய் மாவட்ட அளவி லான 2 நாள் தடகளப் போட்டி நேற்று தொடங்கி யது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் பரிதாநவாப், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனி ராஜ், தொடக்க கல்வி அலுவலர் ஆனந்தன், மாவட்ட உடற்கல்வி ஆய்வா ளர் துரை, பெருமாள் மணிமேகலை கல்லூரி இயக்குனர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில், 100, 200, 800, 1500, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த 1450-க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங் கப்பட உள்ளன. முதலிடம் பெறும் மாணவ, மாண விகள் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுகின்றனர். நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆய்வாளர் துரை, உடற் கல்வி இயக்குனர்கள் கிருஷ்ணன், ஜான்பாய், உடற்கல்வி ஆசிரியர்கள் சத்தியநாதன், பார்த்தீபன், அருளரசு, ரகுசரவணன், ஜோதி ஆகியோர் கவுர விக்கப்பட்டனர்.
இதில், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி தேவி, கவுன்சி லர்கள் ஜெயகுமார், பிர்தோஷ்கான், செந்தில்கு மார், சுனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் மாணவ, மாண வியர் மற்றும் ஆசியர்களுக்கு மதிய உணவு வழங் கப்பட்டது.






