என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்சில் மயங்கி விழுந்த பெண்ணை  துரிதமாக செயல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த டிரைவர்
    X

    பஸ்சில் மயங்கி விழுந்த பெண்ணை துரிதமாக செயல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த டிரைவர்

    • பஸ்சில் மயங்கி விழுந்த பெண்ணனை ஆஸ்பத்திரியில் சேர்த்த டிரைவரை பொதுமக்கள் பாராட்டினர்
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு

    பெங்களூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி, நேற்று மாலை அரசு பஸ் ஒன்று ஓசூர் வழியாக சென்றது. இதில் 60 பயணிகள் இருந்த னர். இதனை முருகன் என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த நிலையில், கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூர் அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் பஸ் சென்ற போது, அதில் பயணம் செய்த 50 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து, பஸ்சை, டிரைவர் சாலையோரமாக நிறுத்தினார். மேலும், 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து, ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், அந்த பெண்ணின் உயிரை காக்க டிரைவர் துரிதமாக செயல்பட்டு, 60 பயணிக ளுடன் பேருந்தை சூளகிரி யில் உள்ள 24 மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்தார்.

    அந்தப் பெண், மருத்துவ மனையில் சிகிச்சை அளித்த தில் அவர், உணவு சாப்பிடா ததால் குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக மயங்கியிருக்கலாம் என கூறப்பட்டது. மேலும், அவர், திருப்பத்தூரை சேர்ந்த பாக்யலட்சுமி (55) எனவும் தெரியவந்தது. ஆஸ்பத்திரியில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அரசு பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்ட ரின், துரித நடவடிக்கை மற்றும் மனிதாபிமான செயலை பொதுமக்கள் மிகவும் பாராட்டினர்.

    Next Story
    ×