என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.
சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
- சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,
- மாணவிகளுக்கு பாதுகாப்பு கையேடு வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சோபனா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பி, டி, ஒ, விமல் ரவிக்குமார், வட்டார விரிவாக்க அலுவலர் சமுக நலம் ஜெயம்மா, ஐ.சி.டி.எஸ். விரிவாக்க அலுவலர் சிவ அமிர்தவல்லி, ஒருங்கினைந்த சேவை மைய அலுவலர் சர்வகலா, ஊர்நல அலுவலர் ஜோதிலட்சுமி, மற்றும் அலுவலர்கள் சுகந்தா அமுதா ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் போஸ் எக்பர்ட் (கூல்) , நிறுவனம் மூலம், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், குறித்த விழிப்புணர்வை, அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர்கள், ஐ.சி.டி, எஸ்- பணியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
ஐ.சி.டி, எஸ், சிறப்பு விரிவாக்க அலுவ லர்சிவ அமிர்த வல்லி பேசியாதவது;-
பணி செய்பவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் . புகார் குழு அமைக்கப்பட வேண்டும். ஆண் பெண் பணியாளர்களுக்கு சட்டம் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடத்த வேண்டும் புகார் குழுவுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும்.
புகார் குழு செயல்பட போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். தவறுகள் நடந்தால் இந்திய தண்டனைச் சட்டப்படி தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர். இதில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






