என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை& பணத்தை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத் துள்ள கொட்டு காரம்பட்டி பகுதியை சேர்ந்த வர் மல்லிகா (வயது50). இந்த நிலையில் இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுள்ளனர். 

    நேற்றுமுன்தினம் நள் ளிரவு வீட்டின் கதவு பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உட னே இதுபற்றி மல்லிகாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் நேற்று காலை வந்து வீட்டை பார்த்தார். 

    அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

    மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திட்டம்போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மல்லிகா சிங்காரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    யானைகளை பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற வனத்துறை அதிகாரிகள் நேற்று இரவு மகாராஜகடை மலை வனப்பகுதியில் தங்கியிருந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் மகாராஜகடை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாம் உள்ளது. இந்த யானைகளை விரட்டும் பணியில் தமிழக வனத்துறை அதிகாரிகள் யானைகளை பின் தொடர்ந்து விரட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மகராஜ கடை வனபகுதியில் இருந்து வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து விட்டு சென்றது. இந்த யானைகளை பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற வனத்துறை அதிகாரிகள் நேற்று இரவு மகாராஜகடை மலை வனப்பகுதியில் தங்கியிருந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது வனக் காப்பாளர் ரகமத்துல்லா தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது யானைகளை விரட்ட வன ஊழியர் சிலம்பரசன் பட்டாசை வானத்தை நோக்கி விட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கையில் பட்டாது வெடித்தது. இதில் அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிலம்பரசனை அங்கிருந்து வனத் துறை ஊழியர்கள் மீட்டு உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கொரட்டகிரி கிராமத்தில் உள்ள கல்குவாரிகளில் வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது.
    கிருஷ்ணகிரி,

     கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கொரட்டகிரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:&

    கொரட்டகிரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றி சுமார் ஐந்து கல் கிரஷர் குவாரிகள் இயங்கி வருகிறது. இங்கு கல் உடைப்பதற்காக சக்திவாய்ந்த போர் பிளாஸ்டிங் வெடி வைக்கப்படுகிறது. 

    இதன் காரணமாக அருகாமையில் உள்ள எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது கல் அரவை செய்யப்படுவதால் அதில் இருந்து வெளியேறும் தூசு விளைநிலங்களில் படர்ந்து விவசாயமும் பாதிக்கப் படுகிறது. இதனால் விவசாயத்தையே நம்பியுள்ள அப்பகுதி மக்களாகிய எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், பயங்கர வெடி சத்தம், சிதறும் கற்கள் என இதனை சமாளித்து தான் குழந்தைகள் அந்த பகுதி சாலையை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலையில் கடந்த 15 நாட்களாக குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து தொடர்ந்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. 

    தொடர்ந்து எங்களின் மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, எங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மற்றும் வாக்காளர் அடையாளர் அட்டை ஆகியவற்றை சாலையில் வீசி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மஹராஜாகடை கிராமத்தில் 9 காட்டு யானைககள் முகாமிட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அடுத்த மஹராஜகடை கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் 9 யானைகள் முகாம் - பொதுமக்கள் வனப்பகுதிக்கு சொல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊடேதுர்க்கம், சானமாவு, தேன்கனிக்கோட்டை, தளி, வேப்பனப்பள்ளி மற்றும் மகாராஜகடை ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதியில் 100&க்கும் மேற்பட்ட யானை உள்ளன. இந்த யானைகள் கோடை காலங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம்.

    அந்தவகையில் மகாராஜகடை கிராமம் அருகே உள்ள அங்கனாமலை வனப்பகுதியில் உள்ள துரை ஏரியில் குட்டியுடன் 9 யானைகள் முகாமிட்டு உள்ளது. 

    தமிழக&ஆந்திர மாநிலத்தை இணைக்ககூடிய இந்த வனப்பகுதியில் முகாமிட்டு உள்ள யானைகள் காட்டூர், பூங்கொர்த்தி, ஏக்கல்நத்தம் மற்றும் ஆந்திர மாநிலம் நடுமூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றது. 

    இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விலை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது.

    இந்த யானைகள் கூட்டம் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து யானைகளின் நடமாட் டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 9 யானைகள் வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் யாரும் கால்நடை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் தாளப்பட்டி கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது36) என்பவரை  பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
    சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பு
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி அடுத்த செட்டிமாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 24). லாரி டிரைவர். இவர் அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் கடந்த, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14&ந் தேதி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்படி இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து, போக்சோ சட்டத்தின் கீழ் பிரபாகரனை கைது செய்தனர். 

    இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று நீதிபதி லதா தீர்ப்பு வழங்கினார்.

    அவர் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபாகரனுக்கு சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக, 20 ஆண்டு சிறை தண்டனைம் ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைதண்டனையும், சிறுமியை கடத்திய குற்றத் திற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம்  கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதித்தார். மேலும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தர விட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி விளையாட்டு அரங்கத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் உடற்பயிற்சி கூடம் அமைய உள்ளது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடி விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு சார்பில் ரூ.3 கோடியே 69 லட்சத்து, 50,000 மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், கூடைப்பந்து மைதானம் மற்றும் நடைபாதை ஆகியவற்றை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

    இதையடுத்து, ஓசூர் அந்திவாடி புதிய விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் நலன்கருதி இந்த விளையாட்டு அங்கத்தில் கூடைப்பந்து மைதானம் அமைக்கவும் உள்விளையாட்டு அரங்கம் அமைத்து அதில் கைப்பந்து, டேபிள் டென்னிஸ், இறகு பந்து விளையாட தேவையான கட்டமைப்பு அமைக்கவும், உடற்பயிற்சி கூடம் மற்றும் நடைபாதை அமைக்க இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு, நேற்று பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

    இங்கு 177.65 சதுர மீட்டர் பரப்பளவில் உடற்பயிற்சி கூடம், 608 சதுர மீட்டர் பரப்பளவில் கூடைப்பந்து மைதானம் மற்றும் 800 மீட்டர் நீளத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிகழ்ச்சியில் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட விளையா அலுவலர் உமாசங்கர், மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்களும், மாநகராட்சி கவுன்சிலர் பாக்கியலட்சுமி குப்புசாமி, பூனப்பள்ளி கிளை செயலாளர் மஞ்சுநாதப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி அருகே காயமடைந்த 2 மயில்கள் மீட்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அதிக வனப்பகுதிகளை கொண்ட பகுதியாகும் இங்கு யானை, கரடி, சிறுத்தை, மயில் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் உள்ளது. இந்த வன உயிரினங்கள் அவ்வப்போது கிராம பகுதிகளுக்கு வரும் பொழுது காயமடைந்து பாதிக்கப் படுகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி அருகே உள்ள பொன்மலைகுட்டை மலை பகுதியில் வழித்தவறி வந்த பெண் மயில் ஒன்று காயமடைந்து பறக்க இயலாமல் இருந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

    அதன் அடிப்படையில் வனத்துறையினர் விரைந்து சென்று காயமடைந்த மயிலை மீட்டு, கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உரிய சிகிச்சை அளித்து வன அலுவலகத்தில் தண்ணீர்,உணவு  வழங்கி பாதுகாத்து வருகின்றனர். 

    அதே போல் என்.தட்டகல் கிராமத்தில் அடிப்பட்டு காயமடைந்த ஆண் மயிலையும் வனத்துறையினர் மீட்டு உரிய சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகின்றனர்.

    இது குறித்து கிருஷ்ணகிரி வனச்சரகர் மகேந்திரன் கூறுகையில், கிருஷ்ணகிரி பகுதியில் மயில்களின் இனப்பெருக்கம் அதிகரித்துவிட்டது. தற்போது வனப்பகுதியில் இருந்து கிராமப்புறங்களுக்கு உணவு தேடி வருகிறது. அவ்வாறு வரும் மயில்களை நாய்கள் துரத்துவதால் அடிப்பட்டு விடுகிறது. 

    அதன்படி, தற்போது 2 மயில்கள் அடிப்பட்ட தகவல் அறிந்து அவற்றை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பின் எங்கள் பாதுகாப்பில் மயில்களை வைத்துள்ளோம். முற்றிலும் காயம் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின், மீண்டும் எந்த பகுதியில் மயில்கள் மீட்கப்பட்டதோ, அந்த பகுதியில் உள்ள வனத்தில் விடப்படும் என்றார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே எருது விடும் விழா நடந்தது.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே அந்தேவணபள்ளி அடுத்துள்ள மல்லிகார்ஜூன ஸ்வாமி  கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலில் தேர் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் அதே போல் நேற்று முன் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.தேர் திரு விழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெறும்.

    இதேபோல் இந்த  ஆண்டு நடந்த விழாவிற்கு தேன் கனிக் கோட்டை, அஞ்செட்டி, ஓசூர், சூளகிரி, கெல மங்கலம், பகுதிகளில் இருந்தும் மேலும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் விழாவிற்கு காளை கள் அழைத்து வரப்பட்டனர். காளையின் உரிமையாளர்கள் காளை களின் கொம்பு களுக்கு வர்ணம் தீட்டி அதன் மேல் வண்ண தட்டிகளை கட்டி வண்ணத் துணி களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 

    அலங்கரிக்கப்பட்ட காளைகளின் கயிற்றினை அவிழ்த்து விட்டனர். கூட்டத்தில் நடுவில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடிக்க முற்பட்டனர். சீறிபாய்ந்து சென்ற சில காளைகளின் தட்டி களை சில இளைஞர்கள் பறித்தனர். விழாவினை காண பல ஆயிரம் பேர் வந்திருந்தனர். இளைஞர்கள் நடுவில் சீறி பாய்ந்து சென்ற காளைகளை கண்டு இளைஞர்கள் ஆரவாரத்துடன் கை தட்டி ரசித் தனர் விழாவில் நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கினர்.
    தொழிற்சாலைகளை அமைக்க விளைநிலங்களை அரசு கையகப்படுத்தக்கூடாது என்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
    ஓசூர், 

    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனபள்ளி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி, உத்தனபள்ளி, அயர்ன பள்ளி உள்ளிட்ட  3 ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், மக்களை நேரில் சந்தித்து  குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    பின்னர், நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட உத்தனப்பள்ளி, அளேசீபம் உள்ளிட்ட 3 ஊராட்சிகளில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் நான்காவது சிப்காட் அமைக்க அரசு, நிலம் கையகப்படுத்தி வரும் நிலையில், தங்களது விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்திவிடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்க அரசு முன்வரவேண்டும்.

    விளைநிலங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதை,  கைவிட்டு, மேட்டுப்பகுதிகளில் மட்டுமே தொழிற்சாலைகள் அமைக்க, அரசு முன் வர வேண்டும். எந்த சூழ்நிலையிலும், விவசாய நிலங்களை கையகப்படுத்த, அரசு முன்வரக்கூடாது.

     இவ்வாறு அவர் கூறினார். 
    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
    கிருஷ்ணகிரி,

    கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.அள்ளியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 34). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவர் ஊத்தங்கரையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் காளிதாஸ், கிருஷ்ணகிரி அணைக்கு வந்த அவர், அணையில் இறங்கி குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கி பலியானார். 

    இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசுக்கும்,தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, நீரில் மூழ்கி பலியான காளிதாசின் உடலை மீட்டனர்.

    இதைத் தொடர்ந்து உடலை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நீரில் மூழ்கி பலியான காளி தாசிற்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள அச்செட்டிப்பள்ளியை சேர்ந்தவர்சுரேந்திர குமார் (வயது 33). பூ வியாபாரம் செய்து வந்தார். 

    உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இதற்காக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். ஆனாலும் குணமடையவில்லை. இதனால் மன வேதனை அடைந்த சுரேந்திரகுமார் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேந்திரகுமார் இறந்தார்.

    இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×