என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    மாணவனை கத்தியால் குத்திய மற்றொரு மாணவன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே பண்ணிஅள்ளி புதூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கடந்த 14ந் தேதி 10ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவர்கள் 2 பேர் இடையே மாம்பழம் சாப்பிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு மாணவன் செல்போனில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் நல்லவேளை இன்று நீ பள்ளிக்கு வரவில்லை. நீ வந்து இருந்தால் உன்னை கிழித்து தொங்க விட்டு இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று சம்பந்தப்பட்ட 2 மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொரு மாணவனின் தோள்பட்டையில் குத்தினான்.

    இதுதொடர்பாக மாணவனை கத்தியால் குத்திய மற்றொரு மாணவன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர்.

    பின்னர் கைதான மற்றொரு மாணவரை கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஓசூரில்கி ழக்கு பகுதி அ.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    ஓசூர், 

    ஓசூர் காரப்பள்ளி அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இக்கட்டத்திற்கு, கிழக்கு பகுதி செயலாளர் ராஜி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் எம். நடராஜன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி கலந்துகொண்டு, ஆலோசனைகள் வழங்கி கூட்டத்தில் பேசினார். 

    மேலும், மாவட்ட துணைசெயலாளர் கே.மதன், முன்னாள் மாநகர செயலாளர் எஸ்.நாராயணன் உள்பட பலர் பேசினார்கள். மேலும் இதில், ஓசூர் மாநகர தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் மடிக்கணினி, பணம் திருடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓசூர்,

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அன்வர்த்திகான் பேட்டையை சேர்ந்தவர்நா கோஜனா (வயது 30). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா பகுதியில்வ சித்து வருகிறார்.  

    தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 29ந் தேதி ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஒரு பல்பொருள்அங்காடி உள்ள பகுதிக்கு தனது காரில் வந்தார். அங்கு காரை நிறுத்தி விட்டு தனது உறவினரை பார்க்க சென்றார். அந்த நேரம் நாகோஜனாவிடம் 5 பேர் பேச்சு கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பினார்கள்.

    மேலும் அவர் காரில் வைத்திருந்த மடிக்கணினி, நிறுவன ஐ.டி. கார்டு மற்றும்ரூ .9 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அவர்கள் எடுத்து சென்றனர். இந்த நிலையில்கா ரில் மடிக்கணினி, ஐ.டி. கார்டு, பணம் ஆகியவை திருட்டு போய் இருந்ததை கண்டு நாகோஜனா அதிர்ச்சி அடைந்தார். 

    அவர் இது குறித்து அட்கோ போலீசில்பு கார் செய்தார். அதன் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூரில், பாலாறு நதி பாதுகாப்பு விழிப்புணர்வு ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    ஓசூர், 

    அகில பாரதீய துறவிகள் சங்கம் மற்றும் பாலாறு மக்கள் இயக்கம் சார்பில் பாலாறு நதி பாதுகாப்பு விழிப்புணர்வு ரதயாத்திரை மற்றும் பாதயாத்திரை, சுவாமி ராமானந்தா, சுவாமி சாஸ்வதானந்தா மற்றும் சுவாமி சிவப்பிரமானந்த சரஸ்வதி ஆகியோர் தலை மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த ரத யாத்திரையானது, நேற்று கர்நாடக மாநிலம் நந்தி மலையில் தொடங்கியது. வழியில் ஓசூர் வந்த ரத யாத்திரைக்கு, நதிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தலைவர் டாக்டர் சண்முகவேல் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையொட்டி, ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள மண்டபத்தில், ரதத்திற்கும், பாலாறு அன்னைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, குருமகராஜ் சிவானந்தா வாரியார் சுவாமிகள், ரத மற்றும் பாதயாத்திரை நோக்கம் குறித்து பேசினார். இதில் 10-க்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் நதிகள் பாதுகாப்பு இயக்க செயலாளர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சுதா நாகராஜன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் நாகராஜ், தொழிலதிபர் நரசிம்மன், பி.எம்.சி.டெக் கல்வி நிறுவனங்களின் செயலாளர் குமார், வக்கீல் ஆனந்த்குமார், போத்திராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    இதனைத் தொடர்ந்து ஓசூரிலிருந்து புறப்பட்ட ரதயாத்திரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வேலூர் காணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களை கடந்து, அடுத்த (ஜூன்) மாதம் 6-ந்தேதி, பாலாறு நதி சங்கமிக்கும் செங்கை மாவட்டம்,கடலூர் சின்னகுப்பத்தில் நிறைவடைகிறது.
    கிருஷ்ணகிரியில் சாலையில் வந்த 10 அடி நீள பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் நேற்று மதியம்  1 மணிக்கு அங்குள்ள மேம்பாலத்தின் கீழ் 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று இருப்பதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர்.
     
    இதையடுத்து உடனடியாக இது குறித்து கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு அங்கிருந்த பொதுமக்கள் தகவல்கொ டுத்துள்ளனர். தொடர்ந்து பொதுமக்கள் அந்த பாம்பை பிடிக்கும் முயற்சில் ஈடுபட்டனர். அந்த நேரம் அவ்வழியாக வந்த தீயணைப்பு வீரர் ஒருவர், பாம்பை பிடித்து வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார். 

    இதனால் அந்த பகுதியில் ஒரு நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே விபத்தில் அடிபட்ட கால் சரியாகாததால் தீக்குளித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    சூளகிரி,

    சூளகிரி அருகே உள்ள பீர்ப்பள்ளி பக்கமுள்ளது எர்ரண்டப்பள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் திம்மராயப்பா (வயது 95). 
    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் இவரது காலில் அடிபட்டது. அன்று முதல் அவதிப்பட்டு வந்த அவர், மன வேதனையில் கடந்த 13-ந் தேதி உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில்சே ர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் திம்மராயப்பா நேற்று முன்தினம் இறந்து விட்டார்.
     இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தளியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    தேன்கனிக்கோட்டை,

    தளியில் மாந்தோப்பு ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று முன்தினம் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தளி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் முஜித்கான் தளி போலீசில் புகார் செய்தார். 

    அதன் பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரையில் வெயில்சுட்டெரித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அக்னிநட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது.ஆனால் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில்மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள், குட்டைகளில் தண்ணீர் நிரம்பிவருகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்விடிய, விடிய மழை பெய்தது.

    தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 280 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று 741 கன அடியாக அதிகரித்தது. கே.ஆர்.பி.அணையின் கொள்ளளவு 52 அடியாகும். 

    நேற்று மாலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 48.05 அடியாகும். பொதுவாக அணை நீர்மட்டம் 48 அடியை எட்டினால்வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம்.தற்போது அணைக்கு நீர்வரத் அதிகமாக உள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் எந்தநேரமும் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி,தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில்தென்பெண்ணை ஆற்று கரையோரங்களில் வசிக்க கூடிய மக்களுக்கு 2-வது நாளாகநேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் யாரும் தென்பெண்ணை ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்றும்,தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உஷாராக இருக்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிநிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பாரூர் 73, பெனுகொண்டாபுரம் 55.40, தேன்கனிக்கோட்டை 54, சூளகிரி 40, கிருஷ்ணகிரி  38.80, ஓசூர்37, போச்சம்பள்ளி  30.20, நெடுங்கல் 30, ராயக்கோட்டை27, ஊத்தங்கரை  13, அஞ்செட்டி 8.60, தளி 5 என மொத்தம் 412 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளிலும், மற்றும் ஓசூர் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    ஓசூர், 

    ஓசூர் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் அணையை ஒட்டிய கிராம மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு   மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி   எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து, ஒசூர்  கெலவரப்பள்ளி  அணை அருகேயுள்ள ஆற்றங்கரையோர கிராமங்களான தட்டனப்பள்ளி, பெத்த குள்ளு, ,முத்தாலி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், நேற்று  வருவாய்த்துறை சார்பில், தண்டோரா மூலம் ஆற்றில் குளிக்கவோ,கால்நடைகளை குளிப்பாட்டவோ  ஆற்றில் இறங்கக்கூடாது,, மேலும், ஆபத்தை உணராமல் ஆற்றை கடக்கவும் கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டது.

    கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி ஆகும். அணையில் 39.85 அடி நீர் இருப்பு உள்ள நிலையில், இன்று அணைக்கு, வினாடிக்கு 560 கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 560 கன அடிநீரும் வெளியேற்றப்பட்டது. 

    இதனிடையே, தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில்,ரசாயன கழிவுகள் கலந்து நுரைப்பொங்கி, தொடர்ந்து 6  நாட்களாக, ரசாயன நுரை மலைபோல் குவிந்து காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது.
    போச்சம்பள்ளியில் விளைச்சல் அதிகரிப்பால் காலிபிளவர் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
    போச்சம்பள்ளி, 

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் காலிபிளவர் சாகுபடியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காலிபிளவர் விளைச்சல் அதிகரித்துள்ளது. 

    இதனால் டன் கணக்கில் டேம்போ மூலம் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மலைபோல் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாலிபிளவர் விலை ரூ.10 கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் விளைச்சல் அதிகரிப்பால் காலிபிளவர் விலை குறைந்துள்ளது. ஒரு ஏக்கரில் பயிரிட ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவாகிறது. இதனால் எதிர்பார்த்த கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் பெண்கள் போட்டி போட்டி வாங்கி சென்றனர் என்றார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    ஓசூர், 

    ஓசூர் அருகே பாகலூரை சேர்ந்தவர் மது (வயது26). கட்டிட மேஸ்திரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது. 
    சிறுமியை காணாத அவரது பெற்றோர் இதுகுறித்து பாகலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சிறுமியை தீவிரமாக தேடினர். 

    அப்போது சிறுமி கர்நாடக மாநிலம் சர்ஜாபுரம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. பாகலூர் போலீசார் சர்ஜாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சிறுமியை மீட்டனர். 

    சிறுமி அளித்த தகவலில் அடிப்படையில் அவரை கடத்தி சென்ற மதுவை பாகலூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒப்புகொண்டார். 

    இதை தொடர்ந்து வழக்கு ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த மதுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ஊத்தங்கரை அருகே விஷம் குடித்த தொழிலாளி பலியானார்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொட்டுக்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர்  இளங்கோவன் (வயது38). கூலி தொழிலாளியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. 

    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த 4-ந்தேதி அன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதில் மனமுடைந்து காணப்பட்ட  இளங்கோவன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.

    இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    இது தொடர்பாக சிங்காரபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×