என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்றின் கரையோர மக்களுக்கு தண்ேடாரா மூலம் வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை
கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளிலும், மற்றும் ஓசூர் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஓசூர்,
ஓசூர் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் அணையை ஒட்டிய கிராம மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஒசூர் கெலவரப்பள்ளி அணை அருகேயுள்ள ஆற்றங்கரையோர கிராமங்களான தட்டனப்பள்ளி, பெத்த குள்ளு, ,முத்தாலி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், நேற்று வருவாய்த்துறை சார்பில், தண்டோரா மூலம் ஆற்றில் குளிக்கவோ,கால்நடைகளை குளிப்பாட்டவோ ஆற்றில் இறங்கக்கூடாது,, மேலும், ஆபத்தை உணராமல் ஆற்றை கடக்கவும் கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டது.
கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி ஆகும். அணையில் 39.85 அடி நீர் இருப்பு உள்ள நிலையில், இன்று அணைக்கு, வினாடிக்கு 560 கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 560 கன அடிநீரும் வெளியேற்றப்பட்டது.
இதனிடையே, தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில்,ரசாயன கழிவுகள் கலந்து நுரைப்பொங்கி, தொடர்ந்து 6 நாட்களாக, ரசாயன நுரை மலைபோல் குவிந்து காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது.
Next Story






