search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி மாணவர்"

    • மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.
    • மாணவர் ரவுல்ஜானின் இந்த படைப்பு அவர் தொடங்கிய யூ-டியூப் சேனலின் மூலமாக தெரிய தொடங்கியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளி அமர்தநகரை சேர்ந்த தம்பதி அஜூ ஜோசப்-ஷெபா ஆன். இவர்களது மகன் ரவுல் ஜான். எடப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர் ரவுல் ஜான், எதிர்கால தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமாக இருந்தார். இதன் காரணமாக அவர் மீபோட் என்ற பெயரில் ரோபோ ஒன்றையும் தயாரித்து வைத்துள்ளார்.

    பல மரங்களை பயன்படுத்தி தனது வகுப்பு தோழன் சையத் உதவியுடன் அதனை உருவாக்கி இருக்கிறார். பல மாதங்களுக்கு பிறகு உருவாகியிருக்கும் அந்த ரோபோ, தொடக்கத்தில் கம்ப்யூட்டர் கேம் போன்றே வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்பு அதில் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் மாணவர் ரவுல்ஜான் உருவாக்கியிருக்கிறார்.

    மாணவர் ரவுல் ஜான் தயாரித்துள்ள அந்த ரோபோ, நாம் கேட்கும் கேள்வியின் தன்மைக்கு தகுந்தாற்போல் பதிலளிக்கும் வகையில் உள்ளது. அதாவது ஆத்திர மூட்டும் கேள்வியாக இருந்தால் அதே தொணியிலும், சந்தேகத்தின் அடிப்படையில் பணிவாக இருந்தால் அந்த தொணியிலும் பதில் கொடுக்கும்.

    மாணவர் ரவுல்ஜானின் இந்த படைப்பு அவர் தொடங்கிய யூ-டியூப் சேனலின் மூலமாக தெரிய தொடங்கியது. வெளி நாட்டில் உள்ள படிப்பு தளங்கள் கலந்துரையாடலின் போது ராவல் ஜானின் திறமையை அங்கீகரித்தது. இதன்மூலம் மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் பலர் கூகுள் மீட் மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.

    அதன் மூலமாக அமெரிக்க மாணவர்களுக்கு அவர் வகுப்பு எடுத்து வருகிறார். ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் வரை பங்கேற்று ரவுல் ஜானிடம் பல்வேறு கேள்விகளை கேட்கின்றனர். பெரும்பாலும் 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் அவரிடம் யோசனைகளை கேட்கிறார்கள்.

    சில நேரங்களில் இரவு நேரத்திலும் மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் தொடர்பு கொள்கிறார்கள். அப்போது அவர் தூங்கிவிட்டால் அவருக்கு பதிலாக அவர் தயாரித்துள்ள ரோபோ பதிலளிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆளில்லா விமானம் தயாரிப்பதே தனது அடுத்த இலக்கு என்று மாணவர் ரவுல் ஜான் தெரிவித்திருக்கிறார்.

    • 6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது.
    • முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    நாகர்கோவில்:

    2022-23-ம்ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கலைவடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்க ளின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒருபகுதி யாக கலைப்பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைசார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்க ளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 9 மற்றும் 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் தனிநபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம். மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1. கவின் கலை-நுண்கலை, 2. இசை (வாய்பாடு), 3. கருவி இசை, 4. நடனம், 5. நாடகம், 6. மொழித்திறன் என்னும் 6 தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது. 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1. கவின் கலை-நுண்கலை, 2. இசை (வாய்பாடு), 3. கருவி இசை – தோற்கருவி, 4. கருவி இசை துளைக்காற்றுக்கருவிகள், 5. கருவி இசை தந்தி கருவிகள், 6. இசை சங்கமம், 7. நடனம், 8. நாடகம், 9 . மொழித்திறன், என்னும் 9 தலைப்புகளில் நடைபெறுகிறது.

    அதேபோல் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 1. காண் கலை-நுண்கலை, 2. இசை (வாய்பாடு), 3. கருவி இசை, தோற்கருவி, 4. கருவி இசை, துளைக்காற்றுக்கருவிகள், 5. கருவி இசை தந்தி கருவிகள், 6. இசை சங்கமம், 7. நடனம், 8. நாடகம், 9. மொழித்திறன் என்னும் 9 தலைப்பின் கீழும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் தனிநபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம். ஒருவர் ஏதேனும் 3 தனி போட்டி மற்றும் 2 குழு போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்கு பெற முடியும்.

    பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாண வர்களை (முதலிடம்) வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் (முதலிடம் மற்றும் 2-ம் இடம்) மாவட்ட அளவிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டி களிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    மாநில அளவிலான கலைத்திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் மற்றும் மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்ப டுத்தப்படும்.

    மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழ்காணும் அட்டவணையின் படி கலைத்திருவிழா போட்டிகள் நடை பெற உள்ளது. பள்ளி அளவில் நாளை (23-ந் தேதி) முதல் 28-ந் தேதிக்குள்ளும், வட்டார அளவில் 29-ந் தேதி முதல் 05-ந் தேதிக்குள்ளும், மாவட்ட அளவில் 06-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள்ளும் வட்டார மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் இக்கலை திருவிழா போட்டிகளில் பெருமளவு பங்கேற்க பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். பள்ளிக்கல்வித்துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×