என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கெலமங்கலத்தில்ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
    ராயக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாளம்மன் தேர்திரு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. 
    அதனை சுற்றி உள்ள 11 கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த திருவிழாவில் கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

     சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோ வில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. 
    இதில் கெலமங்கலம், ஜுபி, தொட்டே காணப் பள்ளி, செட்டிபள்ளி, குந்துமாரணப்பள்ளி, ஜக்கேரி உட்பட 11 கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த திருத்தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. 

    பிறகு அம்மனுக்கு நேர்த்திக் கடனாக சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்கள் வெட்டி படையல் இட்டு வழிபாடுகள் நடைபெற்றன. 
    இதனை எடுத்து அலங்கரித்து வைக்க ப்பட்டிருந்த உற்சவ அம்மனை திருத்தேரில் அமர்த்தி மங்கள ஆரத்தி நடைபெற்றது. 

    தொடர்ந்து, தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பேராட்சி தலைவர் கே.பி. தேவராஜ், அறநிலைதுறை அதிகாரிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது.

    இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம், நீர்மோர், பானக்கம் வழங்கப்படது.
    தொடர் மழையால் 100 டன் கத்திரிக்காய் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளி, தின்னகழனி, பூசாரிப்பட்டி, வடுக்கம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அணையின் நீர்மட்டம் குறையும் போது நீர்தேக்க பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக குறுகிய காலங்களில் அறுவடை செய்யப்படும் முள்ளங்கி, கத்திரிக்காய், ராகி, நெல் உள்ளிட்டவை பயிரிடுவது வழக்கம். தற்போது 2&ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 40 அடிக்கு கீழ் சென்றது.

     இதனால் விவசாயிகள் அணையின் நீர்தேக்க பகுதியில் சுமார் 5 ஏக்கரில் கத்திரிக்காய் சாகுபடி செய்திருந்தனர். சாகுபடி செய்து 3 மாதத்தில் மகசூல் தரக்கூடிய கத்தரிக்காய் செடிகள் நடவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கி, 50 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் நீர்தேக்க பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், 5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கத்திரிக்காய் செடிகள் நீரில் மூழ்கி சேதமானது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
    குறைந்த காலத்தில் அதிக லாபம் ஈட்டக்கூடிய கத்தரி செடிகள் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ஏக்கருக்கு ஒரு லட்சம் விதம் செலவிட்டு சாகுபடி செய்தோம். 3 மாதத்தில் மகசூல் தரக்கூடிய நிலையில் மாதத்திற்கு உரம் மருந்து என ரூ-.30 ஆயிரம் செலவு செய்யப்பட்டது. தற்போது கத்தரிக்காய் அறுவடை தொடங்கி உள்ளது.

     ஒரு ஏக்கருக்கு ஒரு அறுவடைக்கு இரண்டு டன் அளவிற்கு கத்தரிக்காய் மகசூல் கிடைக்கும்.  வாரத்திற்கு ஒரு அறுவடை என மூன்று மாதத்திற்கு 12 முதல் 15 முறை வரையில் அறுவடை செய்யலாம். இதன் மூலம் சுமார் ஏக்கருக்கு 25 டன் அளவிற்கு கத்திரிக்காய் மகசூல் கிடைக்கும். தற்போது முதல் அறுவடையில் 2 டன் கத்தரிக்காய் மகசூல் கிடைத்துள்ளது. 

    இங்கு உற்பத்தியாகும் கத்தரிக்காய் ராயக்கோட்டை மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.12க்கும்,  ஒரு டன் ரூ. 12 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யபடுகிறது. தற்போது நீரில் மூழ்கி கத்திரிக்காய் செடிகளால், ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 100 டன் அளவிற்கு கத்தரிக்காய் மகசூல் பாதிக்கப்பட்டு, ரூ-.12 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஓசூர், 

    பொதுவாக கோடைகாலம் என்றாலே, சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்துவிடும். குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டாலே, மக்கள் அலறுவார்கள். ஆனால் இந்தாண்டு, கோடைகாலத்திலும், அதிலும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலேயே பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து, பொதுமக்களின் வாட்டத்தை போக்கி, நிம்மதியை தந்துள்ளது. 

    தொடர்ந்து வெப்பச்சலனம் காரணமாக, கடந்த சில நாட்களாக  மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை மற்றும் பரவலாகவும் மழை பெய்து வருகிறது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலையில் பலத்த காற்று வீசி சாரல் அடிக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கி, நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்து சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.

     இதன் காரணமாக தாழ்வான பகுதிகளி மழைநீர் தேங்கியும், ஓசூர்-பாகலூர் ரோடு சர்க்கிள், ராயக்கோட்டை சாலை சர்க்கிள், பழைய நகராட்சி அலுவலக முன்புறம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் முழங்கால் அளவு தேங்கி நின்றதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதியடைந்தனர். 
    இதே போல், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் , தனியார் கம்பெனி எதிரில் உள்ள பாலத்தில் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளித்து, சாலையே தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கி நின்றது. 

    இதனால் வாகன ஓட்டிகள், வண்டிகளை ஓட்டிச்செல்ல தடுமாறினார்கள். மேலும் வாகனங்களும் மழைநீரில் தத்தளித்தவாறு சென்றன. ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில், பரவலாகவும், விட்டுவிட்டும் இரவு வரை மழை பெய்தவாறு இருந்தது. ஓசூரில் நேற்று 17 மி.மீ மழை பெய்தது.

    அதே போல் நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்தது நேற்று மதியம் 2 மணி அளவில் சூளகிரி சுற்றுவட்டாரமான பேரிகை, அத்தி முகம், மாரண்டபள்ளி, மருதாண்டபள்ளி, காமன்தொட்டி, வேம்பள்ளி, சென்னப் பள்ளி, மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருவதால் விளைநிலங்களில் தக்காளி, கோஸ்,கொத்தமல்லி, பூதினா, மற்றும்தோட்டக்களில்   மழை நீர் தேங்குவதால் சேதமாகிவருகிறது பொதுவாக கீரை,காய்கறி விலை எகிறியது.

     இந்த நிலையில் தொடர்மழையால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மற்றும் கத்திரி வெயில் ஆரம்பநாள் முன்பே மழை பெய்துவருவதால் வெயில் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ச்சிஏற்ப்பட்டு வருகிறது.

    இதே போல் தருமபுரி மாவட்டத்திலும் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்துள்ளது. தொடர்ந்து கடந்த சில தினங்களாக பெய்து வரும் இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஒசூர் மாநகராட்சி பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜையை பிரகாஷ் எம்.எல்.ஏ- மேயர் சத்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட  வெங்கடேஷ் நகர் பகுதியில் 15- வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் சுமார் 25 லட்சம் மதிப்பில் புதிதாக. சிமெண்ட் சாலை,  கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.

    இதையொட்டி, நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ் மற்றும் மாநகர  மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இதேபோல், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அந்திவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக_நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திட்டத்தின் கீழ், ரூ. 5.36 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சமையலறைக் கட்டிடத்திற்கு, பிரகாஷ் எம்.எல்.ஏ, மற்றும் மேயர் சத்யா ஆகியோர்  பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொறியாளர்கள் ராஜேந்திரன், பிரபாகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் சென்னீரப்பா, ஆஞ்சி,பாக்கியலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்  ரமேஷ், மாவட்ட தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன்.
    மண்டல தலைவர் அரசனட்டி ரவி, மற்றும் , சென்னீர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ஓசூர் பி.எம்.சி.டெக் கல்லூரியில் விளையாட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
    சூளகிரி. 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக், ஐடிஐ, மற்றும் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா இரண்டு நாட்கள் மிக சிறப்பாக நடைபெற்றது.

    விழாவில் தேசிய தடகள குழுத் தலைவரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வாரிய தூதருமான சார்லஸ் பொரோமியோ ஹோலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் சுடர் தீபத்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மாணவ மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    விழாவிற்கு பி.எம்.சி.டெக்  கல்வி  நிறுவனத்தின் செயலாளர் குமார் தலைமை தாங்கினார். அறங்காவலர்  மலர், பாலிடெக்னிக் ஐ.டி.ஐ இயக்குனர் பேராசிரியர் சுதாகரன், பொறியியல் கல்லூரி முதல்வர் சித்ரா,  பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் மற்றும் ஐடிஐ முதல்வர்  பாபு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு விருந்தினர் உரையாற்றுகையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 

    ேமலும் அவர் விளையாட்டு துறையில் சாதித்த தருணங்களையும் நினைவு கூர்ந்து பேசுகையில் விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கு தற்போது அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. படிப்போடு விளையாட்டையும் திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டும். அது உங்களுக்கு வாழ்க்கையில் தேவையான வெற்றியை தரும் என்று பேசினார்.

    இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பல்வேறு வகையான போட்டிகளில் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர். 
    விளையாட்டு விழா ஏற்பாடுகளை பாலிடெக்னிக் உடற்கல்வி இயக்குநர் கைலாசம் மற்றும் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அன்பழகன்  செய்திருந்தனர். 
    கிருஷ்ணகிரியில் மீன்வியாபாரியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை பக்கிரி மஸ்தான் தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது24). மீன்வியாபாரியான இவர் நேற்று மேல்தெருவில் தனது நண்பர்கள் தனஸ் (22), சுரேஷ் ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். 

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சதீஸ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து தனஸ், சுரேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    காவேரிப்பட்டணம் பஸ்நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி ஆவின்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜெயசந்திரா (வயது46). இவர் கிருஷ்ணகிரியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
    இந்த நிலையில் அவர் காவேரிப்பட்டணம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். 

    அப்போது அங்கு பைக்கில் வந்த  2 பேர் ஜெயசந்திராவிடம் சில்மிஷம் செய்துள்ளனர்.  இது குறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பெண்ணிடம் சில்மிஷம் செய்த  2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

    அவர்கள் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள சூடப்பட்டியை சேர்ந்த தனஸ் (வயது18), கலைமணி (18) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    மத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த கண்ணுகானூர் பகுதியில் அரசு மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கண்ணுகானூர் பகுதியை சேர்ந்த ராஜா  (51) அவரது மனைவி வேடியம்மாள் (37) ஆகிய இருவரும் வீட்டில் அரசு மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களை கைது செய்து ராஜா வை கிருஷ்ணகிரி கிளைச் சிறையிலும், அவரது மனைவி வேடியம்மாளை சேலம் பெண்கள் சிறையிலும்  அடைத்தனர்.
    மத்திகிரி அருகே பூச்சி மருந்து குடித்த தொழிலாளி பலியானார்.
    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அடுத்துள்ள அஞ்செட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேஸ் (வயது39). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
    இதனால்  மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 4-ந்தேதி அன்று வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். 

    இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக நாகேஸ் உயிரிழந்தார்.
    இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகலூரில் சிகிச்சை பலனின்றி 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர்  பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ். இவரது மகன் ஸ்ரீதர் (வயது14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இந்த மாணவன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 

    இதனால் அவரை கடந்த 6-ந்தேதி அன்று சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    10 ஆண்டுகளாக மூடி க்கிடந்த உழவர் சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் 10 ஆண்டுகளாக உழவர் சந்தை செயல்படாமல் பூட்டியே கிடந்தது. அதிகாரிகள் உழவர் சந்தையை திறந்தாலும் உள்ளே காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகள் பாலக்கோடு ரோட்டிலேயே ரோட்டை ஆக்கிரமித்து காய்கறி வியாபாரம் செய்து வந்தனர்.

    இதனால்  இப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனை அறிந்த காவேரிப்பட்டினம் பேரூராட்சித் தலைவர் அம்சவேனி செந்தில்குமார், துணை இயக்குனர் காளிமுத்து, வேளாண்மை அலுவலர் மாதேஷ், வேளாண்மை துணை அலுவலர் பரமசிவம் உள்ளிட்ட அதிகாரிகள் உழவர் சந்தையை பார்வையிட்டனர்.

    இதுகுறித்து  காவேரிபட்டினம் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில் குமார் கூறும்போது முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்த இந்த உழவர் சந்தையை பல காரணங்களுக்காக காவேரிப்பட்டணத்தில் இதுவரை செயல்படாமல் வைத்துள்ளனர்.

    எனவே உழவர் சந்தையில் சீரமைத்து உழவர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை காலி செய்துவிட்டு உழவர் சந்தையில் கடைகளை வைத்து பயன்பெற வேண்டும் என்று கூறினார்.

    இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த், பேரூராட்சி துணை தலைவர் மாலினி மாதையன், கோகுல்ராஜ் உள்பட பலர் உள்ளனர்.
    அரசம்பட்டியில் ஊராட்சி தலைவரை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அரசம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட புட்டன் கடை பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிக்கான புதிய அட்டை வழங்க கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை நாடியுள்ளனர். 

    இதை சாதகமாக்கி பஞ்சாயத்து நிர்வாகம் பிரதம மந்திரியின் ஜல் ஜீவன் திட்டத்திற்கான ரூ.1000 டெபாசிட் தொகையை கட்டினால் தான் 100 நாள் வேலை அட்டை வழங்குவதாக கூறினர். 

    இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் 50_ற்கும் மேற்பட்டோர் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் புட்டன்கடை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    பின்னர் அங்கு வந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் இளங்கோ மற்றும் பாரூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடத்தை கலைத்தனர்.
    ×