என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
காவேரிப்பட்டணம் பஸ்நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த 2 வாலிபர்கள் கைது
காவேரிப்பட்டணம் பஸ்நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி ஆவின்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜெயசந்திரா (வயது46). இவர் கிருஷ்ணகிரியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் காவேரிப்பட்டணம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர் ஜெயசந்திராவிடம் சில்மிஷம் செய்துள்ளனர். இது குறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பெண்ணிடம் சில்மிஷம் செய்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள சூடப்பட்டியை சேர்ந்த தனஸ் (வயது18), கலைமணி (18) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
Next Story






