என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உழவர் சந்தையை காவேரிப்பட்டினம் பேரூராட்சித் தலைவர் அம்சவேனி செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
    X
    உழவர் சந்தையை காவேரிப்பட்டினம் பேரூராட்சித் தலைவர் அம்சவேனி செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    காவேரிப்பட்டணத்தில் 10 ஆண்டுகளாக மூடிக்கிடந்த உழவர் சந்தையை திறக்க நடவடிக்கை- பேரூராட்சி தலைவர் தகவல்

    10 ஆண்டுகளாக மூடி க்கிடந்த உழவர் சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் 10 ஆண்டுகளாக உழவர் சந்தை செயல்படாமல் பூட்டியே கிடந்தது. அதிகாரிகள் உழவர் சந்தையை திறந்தாலும் உள்ளே காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகள் பாலக்கோடு ரோட்டிலேயே ரோட்டை ஆக்கிரமித்து காய்கறி வியாபாரம் செய்து வந்தனர்.

    இதனால்  இப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனை அறிந்த காவேரிப்பட்டினம் பேரூராட்சித் தலைவர் அம்சவேனி செந்தில்குமார், துணை இயக்குனர் காளிமுத்து, வேளாண்மை அலுவலர் மாதேஷ், வேளாண்மை துணை அலுவலர் பரமசிவம் உள்ளிட்ட அதிகாரிகள் உழவர் சந்தையை பார்வையிட்டனர்.

    இதுகுறித்து  காவேரிபட்டினம் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில் குமார் கூறும்போது முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்த இந்த உழவர் சந்தையை பல காரணங்களுக்காக காவேரிப்பட்டணத்தில் இதுவரை செயல்படாமல் வைத்துள்ளனர்.

    எனவே உழவர் சந்தையில் சீரமைத்து உழவர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை காலி செய்துவிட்டு உழவர் சந்தையில் கடைகளை வைத்து பயன்பெற வேண்டும் என்று கூறினார்.

    இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த், பேரூராட்சி துணை தலைவர் மாலினி மாதையன், கோகுல்ராஜ் உள்பட பலர் உள்ளனர்.
    Next Story
    ×