என் மலர்
கிருஷ்ணகிரி
- மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, ஜே.சி.பி. பறிமுதல் செய்யப்பட்டது.
- இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள நடுப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நடுப்பட்டியில் அனுமதியின்றி மண் கடத்திய அதே பகுதிைய சேர்ந்த கோவிந்தராஜ் (வயது32), தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்துள்ள அரியகுளம் உண்ணியம்பட்டிைய சேர்ந்த மணிகண்டன் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே அவர்களை இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., டிப்பர் லாரி ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- சுமார் 40,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
- தீ விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, வடமலம்பட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி என்பவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார்.
இதில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பிரபாகரன் தலை மையிலான குழுவினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
சுமார் 40,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புள்ளிமான் நேற்று நெல்லு குந்தி கிராமத்தின் அருகே கம்பி வலையில் சிக்கியது.
- தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சுற்றி உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் , மான்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த மான்கள் அவ்வபோது உணவை மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியிலிருந்து வெளியே வருவது வழக்கம்.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நெல்லுக்குத்தி கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக வெளியேறிய புள்ளிமான் நேற்று நெல்லு குந்தி கிராமத்தின் அருகே கம்பி வலையில் சிக்கியது. படுகாயத்துடன் தவித்த மானை தெரு நாய்கள் கடித்து குதறி உள்ளது.
இதனை பார்த்த கிராம மக்கள் கம்பிவேலியில் சிக்கி தவித்த மானை மீட்டு தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை அடுத்து தேன்கனிக்கோட்டை வனசரகர் முருகேசன், வனக்காவலர் ராம்குமார் மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து இந்த புள்ளி மானை மீட்டு சிகிச்சை முடிந்து குணமடைந்த பின் வனப்பகுதியில் விடப்படும் என தெரிவித்தனர்.
- 100 நாள் வேலையை 150 நாட்களாக மாற்ற வேண்டும்.
- தினக்கூலியை 381 உயர்த்தி வழங்கிட வேண்டும்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பி.டி.ஓ.,அலுவலகம் முன்புஅகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை சிதைக்காமல் செயல்படுத்திட,100 நாள் வேலையை 150 நாட்களாகவும். தினக்கூலியை 381 உயர்த்தி வழங்கிட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அ.இ.வி.தொ.ச.வட்டச் செயலாளர் வரதராஜி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி,மாவட்ட பொருளாளர் செல்வராசு, சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் வேலு, மாவட்ட துணைச்செயலாளர் எத்திராஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
- காதல் விவகாரத்தில் தருமபுரி மாணவி தற்கொலை.
- தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மனைவி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெரிந்தவுடன் மாணவியின் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் மனமுடைந்த அந்த மாணவி விஷம் குடித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- பறிபோன செல்போன்களின் மதிப்பு ரூ.15,000- ஆகும்.
- மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்,
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது27), இவர், ஓசூர் அருகே பத்தலபள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் ஒரு அறையில், நண்பர்கள் 5 பேருடன் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அறைக்கதவு திறந்திருந்த நிலையில் 2 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கு கத்திமுனையில் ரொக்கப் பணம் ரூ.1,21,500 மற்றும் 4 செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பறிபோன செல்போன்களின் மதிப்பு ரூ.15,000- ஆகும்.
இதுகுறித்து செல்வம் உள்பட 6 பேரும், ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- 550 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.
- தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் முரளி மற்றும் போலீசார் முக்கிய சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஜீப் ஒன்றில் வந்த நபர் போலீசை கண்டவுடன் ஜீப்பை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து ஜீப்பில் சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 550 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.
அந்த பொருட்களையும், ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஜீப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமை தாங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசின் அக்னி பத் திட்டத்தை கண்டித்து, ஓசூரில் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமை தாங்கினார். , மாநில காங்கிரஸ் செயலாளர் வீர.முனிராஜ், மாவட்ட பொருளாளர் மகாதேவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர் .ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்தும் அக்னி பத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- 48 நாட்களும் ஆன நிலையில், 2 குழந்தைளும் பச்சிளங் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.
- இதில் ஒரு குழந்தைக்கு கண்ணில் குறைபாடு இருந்ததால், அந்த குறைபாடும் சரி செய்யப்பட்டது.
ஓசூர்,
ஓசூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கைவிடப்பட்ட 2 கைக்குழந்தைகளை போலீசார் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
இந்த குழந்தைகளில் ஒன்று பிறந்து 62 நாட்களும், மற்றொன்று 48 நாட்களும் ஆன நிலையில், 2 குழந்தைளும் பச்சிளங் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.
மேலும், இதில் ஒரு குழந்தைக்கு கண்ணில் குறைபாடு இருந்ததால், அந்த குறைபாடும் சரி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட போது எடை குறைவாக இருந்த நிலையில், ஊட்டச்சத்து, சிறந்த பராமரிப்பு மூலம் தற்போது 2 குழந்தைகளும் எடை கூடியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவானந்தத்திடம், ஓசூர் அரசு மருத்துவமனையின் முதன்மை அலுவலர் டாக்டர். ஞானமீனாட்சி, 2 குழந்தைகளையும் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, அரசு மருத்துவமனை டாக்டர்கள் ராஜசேகர், சக்திவேல், விஜயன், அசோக்,மூத்த மருந்தா ளர் ராஜசேகர் மற்றும் மருத்துவனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- அரசு ஊழியரான சீமோன் அருள்ராஜ் சி.எஸ்.ஐ., திருச்சபையில் பதவியில் இருந்ததாக புகார்.
- சீமோன் அருள்ராஜை வட்டார கல்வி அலுவலர் வெங்கட்குமார் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஓசூர்,
சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேக்கலப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சீமோன் அருள்ராஜ். அரசு ஊழியரான இவர் சி.எஸ்.ஐ., திருச்சபையில் பதவியில் இருப்பதாக, சாலமோன் என்பவர் சூளகிரி வட்டார கல்வி அலுவலருக்கு புகார் மனு அனுப்பினார்.
அதன் அடிப்படையில் ஆசிரியர் சீமோன் அருள்ராஜை வட்டார கல்வி அலுவலர் வெங்கட்குமார் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
- குடும்ப தகராறில் பெண் தூக்கில் தொங்கினார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பேரையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ஜோதி(வயது30).
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு நடந்தது. இதில் மனமுடைந்து ஜோதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது பற்றி தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தூக்கில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் உள்ள ஸ்ரீ பாம்பாற்று அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
பார்வதியின் மறு உருவாக்கம் திருவருளாக்கம், அகண்ட அண்டம் என பல வடிவங்களில் ஒன்றான பாம்பாற்று அம்மனின் திருக்கோவில் புனரமைப்பு நடைபெற்று அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கணபதி வழிபாடு, கோ பூஜை, சிறப்பு யாக வேள்விகள் செய்து அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை கலசங்களில் நிரப்பி பூஜைகள் செய்து ,வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் புண்ணிய தீர்த்தம் தெளிக்கபட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.






