என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரையில்  விவசாய தொழிலாளர் சங்கம்   சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊத்தங்கரையில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • 100 நாள் வேலையை 150 நாட்களாக மாற்ற வேண்டும்.
    • தினக்கூலியை 381 உயர்த்தி வழங்கிட வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பி.டி.ஓ.,அலுவலகம் முன்புஅகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை சிதைக்காமல் செயல்படுத்திட,100 நாள் வேலையை 150 நாட்களாகவும். தினக்கூலியை 381 உயர்த்தி வழங்கிட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அ.இ.வி.தொ.ச.வட்டச் செயலாளர் வரதராஜி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி,மாவட்ட பொருளாளர் செல்வராசு, சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் வேலு, மாவட்ட துணைச்செயலாளர் எத்திராஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

    Next Story
    ×