search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அரசு மருத்துவமனையில்  கைவிடப்பட்ட 2 பச்சிளங்குழந்தைகள்  மாவட்ட அலுவலரிடம் ஒப்படைப்பு
    X

    ஓசூர் அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட 2 பச்சிளங்குழந்தைகள் மாவட்ட அலுவலரிடம் ஒப்படைப்பு

    • 48 நாட்களும் ஆன நிலையில், 2 குழந்தைளும் பச்சிளங் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.
    • இதில் ஒரு குழந்தைக்கு கண்ணில் குறைபாடு இருந்ததால், அந்த குறைபாடும் சரி செய்யப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கைவிடப்பட்ட 2 கைக்குழந்தைகளை போலீசார் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

    இந்த குழந்தைகளில் ஒன்று பிறந்து 62 நாட்களும், மற்றொன்று 48 நாட்களும் ஆன நிலையில், 2 குழந்தைளும் பச்சிளங் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.

    மேலும், இதில் ஒரு குழந்தைக்கு கண்ணில் குறைபாடு இருந்ததால், அந்த குறைபாடும் சரி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட போது எடை குறைவாக இருந்த நிலையில், ஊட்டச்சத்து, சிறந்த பராமரிப்பு மூலம் தற்போது 2 குழந்தைகளும் எடை கூடியுள்ளன.

    இதனைத் தொடர்ந்து, நேற்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவானந்தத்திடம், ஓசூர் அரசு மருத்துவமனையின் முதன்மை அலுவலர் டாக்டர். ஞானமீனாட்சி, 2 குழந்தைகளையும் ஒப்படைத்தார்.

    இந்த நிகழ்ச்சியின்போது, அரசு மருத்துவமனை டாக்டர்கள் ராஜசேகர், சக்திவேல், விஜயன், அசோக்,மூத்த மருந்தா ளர் ராஜசேகர் மற்றும் மருத்துவனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×