என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே   காதல் விவகாரத்தில் தருமபுரி மாணவி தற்கொலை
    X

    கிருஷ்ணகிரி அருகே காதல் விவகாரத்தில் தருமபுரி மாணவி தற்கொலை

    • காதல் விவகாரத்தில் தருமபுரி மாணவி தற்கொலை.
    • தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மனைவி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெரிந்தவுடன் மாணவியின் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் மனமுடைந்த அந்த மாணவி விஷம் குடித்து விட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    Next Story
    ×