என் மலர்
கிருஷ்ணகிரி
- குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
- காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 17 -வது வார்டுக்குட்பட்ட காந்தி நகரில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
காந்தி நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் ரமேஷ், தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேஷ் மற்றும் பொருளாளர் பாலமுருகன் வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் துணை மேயர் ஆனந்தய்யா, 17-வது வார்டு கவுன்சிலர் நாகராஜ், சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.
முன்னதாக பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியருக்கும், விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பிரகாஷ்எம்.எல்.ஏ. மேயர் சத்யா, துணைமேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர் நாகராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
விழாவையொட்டி நடனம், நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- காணாமல் போன தனது ஆடுகளும் உள்ளது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- இன்ஸ்பெக்டர் முருகன் இதில் சாமர்த்தியமாக தீர்வு கண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மலர். இவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதில் சில ஆடுகள் திருடு போய் விட்டன.
இந்நிலையில் அருகேயுள்ள போச்சம்பள்ளியில் வாரம்தோறும் ஆட்டு சந்தை நடைபெறும். நேற்று நடந்த சந்தையில் சந்தூர் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் தொப்படிக்குப்பத்தை சேர்ந்த சின்னப்பாப்பா என்பவர் விற்ற 4 ஆடுகளை வாங்கினார்.
அப்போது காணாமல் போன தனது ஆடுகளை யாராவது விற்கிறார்களா என்று பார்க்க மலரும் அந்த சந்தைக்கு வந்தார்.
சின்னசாமி வாங்கி வந்த ஆடுகளை பார்த்த மலர் அதில் காணாமல் போன தனது ஆடுகளும் உள்ளது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மலர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சின்னசாமி தான் ஆடு வாங்கிய சின்னப்பாப்பாவையும் அழைத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்றார்.
ஒரே ஆட்டுக்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய விவகாரம் குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் முருகன் இதில் சாமர்த்தியமாக தீர்வு கண்டார்.
புகார் தந்த மலரை ஒருபுறமும், அந்த ஆட்டை விற்ற சின்னப்பாப்பாவை ஒருபுறமும் நிற்க வைத்தார். பின்னர் அந்த ஆட்டை அவிழ்த்துவிட சொன்னார். ஆடு நேராக சின்னப்பாப்பாவிடம் ஓடிச்சென்று அவரை சுற்றிச்சுற்றி வந்தது. பின்னர் அந்த ஆடு அவரின் மடியில் படுத்தது.
இதனால் அந்த ஆடு சின்னப்பாப்பா வளர்த்தது தான் என்பது உறுதியானது.இதனால் மலர் திரும்பி சென்றார். இந்த சம்பவம் மத்தூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
- 2022-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
- அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி அகாடமியில் 2022ம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதில் 720&க்கு 655 மதிப்பெண் பெற்ற சந்தோஷ்குமார் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதே போல் ஹரிஷ்வரன்(628) இரண்டாம் இடத்தையும், பெலினா தேஜல் (621) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மேலும், தனுஷ் ஆதித்யா (620), மாயா(617), தமிழரசு (616), தமிழரசன்(601) மதிப்பெண் பெற்றுள்ளனர். 7 மாணவர்கள் 600க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், இந்த அகாடமியில் தேர்வு எழுதியவர்களில் 50க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர்.இந்த மாணவர்களுக்கு பர்கூர் வேளாங்கண்ணி அகாடமியில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு அகாடமியின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். விழாவில் வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை பங்கேற்று, நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி. ராஜேந்திரன், பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன், அகாடமி பொறுப்பாளர் யுவராஜ், ஒருங்கிணைப்பாளர் வேமுலாசந்திரசேகர், பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
- காந்தி சிலைக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- விற்பனை குறியீடாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இலக்கு எய்தப்பட்டது.
கிருஷ்ணகிரி,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நகராட்சி வளாகத்தில் அமைத்திருந்த கதர் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கலெக்டர் நிரு பர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கதர் விற்பனை ஊக்குவிக்கும் பொருட்டு தீபாவளி சிறப்பு கதர் விற்பனைக்கென கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி அனு மதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடாக ரூ.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இலக்கு எய்தப்பட்டது.
தமிழ்நாடு கதர் கிரா மத்தொழில் வாரியத்தால் தயாரிக்கப்படும் மென்மை யான கதர், கண்கவர்பட்டு மற்றும் வண்ண பாலி யஸ்டர் போன்ற உற்பத்திப் பொருட்களுடன், சகோதர நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், அரசு நிதியுதவி பெற்றோரின் உற்பத்திப் பொருட்களையும் விற்பனை செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் வாடிக்கை யாளர்களின் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்யும் நோக்குடன் கதர் உற்பத்திப் பொருட்களும் தருவிக்கப்பட்டு கிருஷ்ணகிரி கதர் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள், உள்ளாட்சி பணியா ளர்களின் வசதிக்கென கதர் அங்காடிகளுடன் அனைத்து ஊராட்சி ஓன்றிய அலுவலக வளாகத்திலும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தொடங்பட்டுள்ளன. மேலும், கதர் விற்பனை தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பணி யாளர்களின் வசதிக்காக 10 சம தவணைகளில் கதர் கடன் முறையில் விற்பனை செய்திடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, ஊட்டச்சத்து மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் தீபாவளி சிறப்பு விற்பனை காலத்தில் மத்திய மாநில அரசுகள் அளித்துள்ள தள்ளுபடியை பயன்படுத்தி அதிக அளவில் கதர் ரகங்கள கொள்முதல் செய்து பயனடையவும், ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி ஏழ கதர் நுற்பார்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், காதிகிராப்ட் விற்பனை மேலாளர் ஜானகிராமன், காதி கிராப்ட் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தாசில்தார் சம்பத், கவுன்சிலர்கள் சுனில்குமார், பாலாஜி, ஜெயகுமார், சந்தோஷ், சங்கர், மதன், தேன்மொழி, புவனேஸ்வரி, பிர்தோஸ்கான், விஜயா, சக்திவேல் முருகன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆசாமி அங்கிருந்துதப்பி ஓடிவிட்டான்.
- 396 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சென்னை சாலையில் வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர்.
இதனால் காரை நிறுத்திவிட்டு அதை ஓட்டிவந்த ஆசாமி அங்கிருந்துதப்பி ஓடிவிட்டான்.
இதையடுத்து அந்த காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான 396 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ரூ.2 லட்சம் மதிப்பிலான கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் அதிரடியாக ரோந்து சென்றனர்.
- கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அப்புகுதியில் போலீசார் அதிரடியாக ரோந்து சென்றனர்.
அப்போது அம்பேத்கர் நகரை சேர்ந்த முருகன் என்பவரது மகன் புருசோத்தமன்(வயது 26), சக்கரவர்த்தி(25) ஆகிய இருவரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 46 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
- காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது.
- காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது..
கிருஷ்ணகிரி,
காவேரிப்பட்டணம் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் தேவநாராயணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் கிருஷ்ணன், சேவாதள மாவட்ட தலைவர் தேவராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்.சுப்பிரமணியம் கலந்து கொண்டு காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாவித்கான், சுப்பிரமணி, முஸ்தபா, பச்சப்பன், சாப்பரம் சுரேஷ், ரகு, மாது, ஜெயபால், கோவிந்தசாமி, சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.. காமராஜர் சிலைக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மூத்த குடிமக்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரின் கடிதத்தை வழங்கினார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் சர்வதேச முதியோர் தின நிகழ்ச்சிக்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கி மூத்த குடிமக்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
மேலும் அவர்களுக்கு, வாக்காளர்களுக்கான இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரின் கடிதத்தை வழங்கினார்.
இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், நகர் நல அலுவலர் அஜிதா, மாநகராட்சி கவுன்சிலர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள மாருபள்ளி ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருபவர் சம்பத்குமார் (வயது 40). இந்த ஊராட்சிக்குட்பட்ட குனிகல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா (53). இவரது மனைவி சாந்தம்மா வார்டு உறுப்பினராக உள்ளார்.
சம்பவத்தன்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு மனைவியுடன் வந்த நாராயணப்பா பொது கழிப்பிடம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சம்பத்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தளி போலீசில் சம்பத்குமார் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் நாராயணப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- கிழங்கு ஒன்றை பறித்து தின்றுள்ளார்.
- கோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா அருகேயுள்ள வெலகளகள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 62).
இவர் கடந்த 29-ந்தேதி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது காட்டு பகுதியில் கிழங்கு ஒன்றை பறித்து தின்றுள்ளார். அது விஷக்கிழங்கு என்று தெரிகிறது.இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.
நேற்று கோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து அவரது மகள் கோவிந்தி கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திடீரென மரம் முறிந்து விழுந்தது.
- குடியிருப்பு பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
ஓசூர்,
ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் உள்ள முல்லை நகரில் குடியிருப்பு மீது திடீரென மரம் முறிந்து விழுந்தது.
இதனால் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று இரவு முதல் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
மரமும் இதுவரை அகற்றப்படவில்லை.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதில் கவனம் செலுத்துவார்களா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- இரண்டாம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது.
- அபிஷேக ஆராதனையுடன் அர்ச்சனை சிறப்பு பூஜையும் நடைபெற்றன.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர், திருப்பத்தூர் சாலையில் உள்ள சோமேஸ்வரர் ஜோதிலிங்கம் கோவிலில் இரண்டாம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு மஹாவேள்வியாக பூஜையும், சிவனடியார்களுக்கு மகேஸ்வர பூஜையும், சோமேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனையுடன் அர்ச்சனை சிறப்பு பூஜையும் நடைபெற்றன.
இச்சிறப்பு பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மெய்யண்பர்களும்,சிவனாடியார்களும், சக்தி மகளிர்களும், கன்னிபெண்களும், மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மத்தூர் சிவனடியார் குழுக்கள் செய்திருந்தன.






