என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி செயலரை தாக்கிய வார்டு உறுப்பினரின் கணவர் மீது வழக்கு"

    • வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள மாருபள்ளி ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருபவர் சம்பத்குமார் (வயது 40). இந்த ஊராட்சிக்குட்பட்ட குனிகல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா (53). இவரது மனைவி சாந்தம்மா வார்டு உறுப்பினராக உள்ளார்.

    சம்பவத்தன்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு மனைவியுடன் வந்த நாராயணப்பா பொது கழிப்பிடம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சம்பத்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தளி போலீசில் சம்பத்குமார் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் நாராயணப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ×