என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திகிரி அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.2.68 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல் -தப்பி ஓடிய ஆசாமிக்கு போலீஸ் வலை
- ஆசாமி அங்கிருந்துதப்பி ஓடிவிட்டான்.
- 396 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சென்னை சாலையில் வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர்.
இதனால் காரை நிறுத்திவிட்டு அதை ஓட்டிவந்த ஆசாமி அங்கிருந்துதப்பி ஓடிவிட்டான்.
இதையடுத்து அந்த காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான 396 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ரூ.2 லட்சம் மதிப்பிலான கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






