என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் 17-வது வார்டு பகுதியில் காந்தி ஜெயந்தி விழா:  பிரகாஷ் எம்.எல்.ஏ.- மேயர் சத்யா பங்கேற்பு
    X

    ஓசூர் 17-வது வார்டு பகுதியில் காந்தி ஜெயந்தி விழா: பிரகாஷ் எம்.எல்.ஏ.- மேயர் சத்யா பங்கேற்பு

    • குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
    • காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி 17 -வது வார்டுக்குட்பட்ட காந்தி நகரில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    காந்தி நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் ரமேஷ், தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேஷ் மற்றும் பொருளாளர் பாலமுருகன் வரவேற்றனர்.

    சிறப்பு விருந்தினர்களாக ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் துணை மேயர் ஆனந்தய்யா, 17-வது வார்டு கவுன்சிலர் நாகராஜ், சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.

    முன்னதாக பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியருக்கும், விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பிரகாஷ்எம்.எல்.ஏ. மேயர் சத்யா, துணைமேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர் நாகராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    விழாவையொட்டி நடனம், நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×