என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  தீபாவளி சிறப்பு கதர் விற்பனை   ரூ.50 லட்சம் நிர்ணயம்   -கலெக்டர் தகவல்
    X

    கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் தீபாவளி சிறப்பு கதர் தள்ளுபடி முதல் விற்பனையை கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை ரூ.50 லட்சம் நிர்ணயம் -கலெக்டர் தகவல்

    • காந்தி சிலைக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • விற்பனை குறியீடாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இலக்கு எய்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நகராட்சி வளாகத்தில் அமைத்திருந்த கதர் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கலெக்டர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கதர் விற்பனை ஊக்குவிக்கும் பொருட்டு தீபாவளி சிறப்பு கதர் விற்பனைக்கென கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி அனு மதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடாக ரூ.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இலக்கு எய்தப்பட்டது.

    தமிழ்நாடு கதர் கிரா மத்தொழில் வாரியத்தால் தயாரிக்கப்படும் மென்மை யான கதர், கண்கவர்பட்டு மற்றும் வண்ண பாலி யஸ்டர் போன்ற உற்பத்திப் பொருட்களுடன், சகோதர நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், அரசு நிதியுதவி பெற்றோரின் உற்பத்திப் பொருட்களையும் விற்பனை செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அத்துடன் வாடிக்கை யாளர்களின் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்யும் நோக்குடன் கதர் உற்பத்திப் பொருட்களும் தருவிக்கப்பட்டு கிருஷ்ணகிரி கதர் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள், உள்ளாட்சி பணியா ளர்களின் வசதிக்கென கதர் அங்காடிகளுடன் அனைத்து ஊராட்சி ஓன்றிய அலுவலக வளாகத்திலும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தொடங்பட்டுள்ளன. மேலும், கதர் விற்பனை தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பணி யாளர்களின் வசதிக்காக 10 சம தவணைகளில் கதர் கடன் முறையில் விற்பனை செய்திடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, ஊட்டச்சத்து மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் தீபாவளி சிறப்பு விற்பனை காலத்தில் மத்திய மாநில அரசுகள் அளித்துள்ள தள்ளுபடியை பயன்படுத்தி அதிக அளவில் கதர் ரகங்கள கொள்முதல் செய்து பயனடையவும், ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி ஏழ கதர் நுற்பார்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், காதிகிராப்ட் விற்பனை மேலாளர் ஜானகிராமன், காதி கிராப்ட் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தாசில்தார் சம்பத், கவுன்சிலர்கள் சுனில்குமார், பாலாஜி, ஜெயகுமார், சந்தோஷ், சங்கர், மதன், தேன்மொழி, புவனேஸ்வரி, பிர்தோஸ்கான், விஜயா, சக்திவேல் முருகன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×