என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • காருக்குள் பெட்டி,பெட்டியாக கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
    • மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே மாநில எல்லையான சிப்காட் பகுதியில், நேற்று ஓசூர் கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையில்,போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக, ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் காருக்குள் பெட்டி,பெட்டியாக கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில், பெங்களூருவில் இருந்து அவற்றை திருப்பத்தூருக்கு காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையத்து கர்நாடக மது பாட்டில்களை கடத்திச்சென்ற திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே துக்கியம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (34), குமார் (30), வாணியம்பாடி அருகே சின்ன களியம்பட்டு பகுதியை சேர்ந்த பிரபு (33) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கீரனப்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 1லட்சம் மதிப்புள்ள 15 பெட்டி கர்நாடக மாநில மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மாநிலத் துணைத் நடைபெற்றது.
    • ,கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மாநிலத் துணைத் தலைவர் நல்லா கவுண்டன் தலைமையில் நடைபெற்றது.

    கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ், மாநில பொருளாளர் முத்துச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் ஈ அடங்கலை எளிமையாக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்டம் மாறுதலை அனைவருக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும்,கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பணிவரம் முறையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக அறிவழகன், மாவட்ட தலைவராக லட்சுமணன், மாவட்ட பொருளாளராக ராம்சுரத்குமார் உள்ளிட்ட 10 பேர் பொறு ப்பேற்று க்கொண்டனர்.

    • விளையாட்டின் போது இரு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
    • தாக்கப்பட்ட நிலையில் பிளஸ் டூ மாணவன் உயிரிழப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த சக்கில் நத்தம் கப்பல்வாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை சக்கில் நத்தம் கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் பள்ளியில் சமையல் செய்ய வைக்கப்பட்டிருந்த தென்னம் பாளையால் மாணவன் கோபிநாத்தை உடன் படிக்கும் மாணவன் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோபிநாத் அங்கேயே சுருண்டு விழுந்தார். மேலும் மாணவன் கோபிநாத்திற்கு வலிப்பு நோய் ஏற்பட்டு துடிதுடித்துள்ளார். இதனை அறிந்த அங்கிருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் மாணவனை அங்கிருந்து மீட்டு பர்கூர் அரசு பொது மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, வழியிலேயே மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் மருத்துவமனையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவன் கோபிநாத்தை தாக்கிய மற்றொரு மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இறந்த மாணவன் மற்றும் அவனை தாக்கிய மாணவனும் அடுத்தடுத்த வீடுகளைச் சார்ந்தவர்கள் என்பதால் கிராமத்தில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    • குழந்தை திருமணங்களை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • பாதிப்புகள் குறித்தும், சமூக நலத்துறையின் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வளரிளம் பருவத்தினர்கள் தன்னுரிமை மேம்பாடு, குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் மற்றும் குழந்தை திருமணங்களை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    இதில் மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சரண்யா சதீஷ், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி, வழக்கு பணியாளர்கள், விரிவாக்க அலுவலர், ஊர்நல அலுவலர்கள் பங்கேற்று, வளர் இளம் பெண்ணகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சமூக நலத்துறையின் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினர்.

    மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்த உதவி எண்களான 1098, 181, 14567, 14417 ஆகியவை குறித்து விரிவாக எடுத்து கூறப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு வார விழாவையொட்டி கூட்டுறவுத்துறை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
    • மொத்தம் 25 பேர் ரத்த தானம் வழங்கினார்கள்.

    பர்கூர்,

    பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், 69- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி கூட்டுறவுத்துறை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இதில் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்பிரமணி, பயிற்சியாளர்கள், கூட்டுறவாளர்கள் மற்றும் ரத்த தானம் செய்வோரை வரவேற்றார்.

    இதில் கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப் பதிவாளர் சுந்தரம், கிருஷ்ணகிரி நகர வங்கி துணைப் பதிவாளர் தமிழரசு ஆகியோர் பங்கேற்று, கூட்டுறவு வார விழா குறித்து சிறப்புரையாற்றினர். அத்துடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ரத்த தானம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.

    இதில் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலை 5 பெண் பயிற்சியாளர்கள், 19 ஆண் பயிற்சியாளர்கள், ஒரு பயிற்சி அலுவலர் என மொத்தம் 25 பேர் ரத்த தானம் வழங்கினார்கள்.

    • போச்சம்பள்ளியை முன் மாதிரி கிராமமாக மாற்ற தத்தெடுத்து கொண்டார்.
    • அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுக் காவின் தலைமையிடமாக இருந்து வருகிறது. இருந்தாலும் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்கள் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் அப்பகுதியில் உள்ள மக்கள் எவ்வித வளர்ச்சியும் அடையாமல் இருந்து வருகின்றனர்.

    இதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற எம்.பி. தம்பிதுரை மத்திய அரசின் சன்சேடு ஆதர்ஸ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் போச்சம்பள்ளியை முன் மாதிரி கிராமமாக மாற்ற தத்தெடுத்து கொண்டார்.

    இதில் தனது எம்.பி. நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையையும் மேலும் அப்பகுதி மக்களின் வளர்ச்சி, அடிப்படை தேவைகளான கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்தும், அதேபோல் அரசின் திட்டங்களான வேலை வாய்ப்பு மற்ற விவசாயம், கூட்டுறவு சங்கங்களின் பயன்கள் மற்றும் கல்வி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்படுத்தி அவர்களுக்கு சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் எனவும், இதனால் சுற்று வட்டார பகுதிகள் வளர்ச்சி அடையும் என்று தம்பிதுரை எம்.பி. கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வந்தனாகார்க் மற்றும் அரசு துறைச் சார்ந்த பல்வேறு அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரங்களை அமைத்து அங்கு தங்கி சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.
    • இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்திற்கு திரும்பினர்.

    தேன்கனிக்கோட்டை.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தின் அருகே 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளால் அப்பகுதியில் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது.

    குவாரிக்கு வரும் வாகனங்களால் சாலைகள் சேதமடைகிறது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குவாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கொரட்டகிரி கிராம மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி னர்.

    இதனிடையே கடந்த 11-ந்தேதி ஊரை காலி செய்து குழந்தைகள், மூட்டை முடிச்சுகள் மற்றும் கால்நடைகளுடன் காலி செய்து அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரங்களை அமைத்து அங்கு தங்கி சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

    அதிகாரிகள், போலீசார் கிராம மக்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதனால் நேற்று 8-வது நாளாக கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கிராமத்திற்கு திரும்பினர் இந்தநிலையில் அங்கு வந்த குவாரி மற்றும் கிரசர் ஓனர் பெடரேசன் தலைவர் சம்பங்கி, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ், தனி தாசில்தார் சரவணன் ஆகியோர் நேற்று மாலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாற்று வழியில் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்திற்கு திரும்பினர்.

    போலீசார் கிராமமக்களை பாதுகாப்புடன் கிராமத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து கடந்த 8 நாட்களாக நடந்த கிராம மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிசை அளித்து ஆலோசனை வழங்கினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகாமிற்கு வட்டார மருத்துவர் ரங்கசாமி தலைமை வகித்து நோய்கள் வருமுன் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் பொதுமக் களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார். இம்முகாமில் சிறுநீர் பரிசோ தனை, நீரிழிவு பரிசோதனை, சளி பரிசோதனை, இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, இதயம் சம்பந்தமான பரிசோதனை, இ.சி.ஜி.பரிசோதனை, கர்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனை செய்து நோய் செய்து நோயின் தரம் குறித்து நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிசை அளித்து ஆலோசனை வழங்கினர்.

    முன்னதாக முகாமை களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து தொடக்கி வைத்தார். முகாமில் மத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், துணைத் தலைவர் பர்வின்தாஜ் சலீம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் மகேஸ்வரி மாதப்பன் மற்றும் மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியா ளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பாக பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
    • 1000-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை செய்து காட்சிப்படுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனபள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பாக பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

    இவ்விழாவில் கல்லூரி யின் தலைவர் முன்னாள் எம்.பி. பெருமாள்,தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் முன்னிலை வகித்தனர்.

    பெரியார் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்,கலைக்கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனை வரையும் வரவேற்றார். தாஜ் ஹோட்டல்களின் முன்னாள் சமையல் நிபுணர் கிருஷ்ணகிரியை சார்ந்த பேராசிரியர் மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "ஆரோக்கிய வாழ்விற்கு நெருப்பில்லா சமையல்" எனும் கருத்தை ஒட்டி மாணவர்கள் சிறுதானியங்கள், முளைகட்டிய பயிறு வகைகள், இயற்கை குளிர்பானங்கள், சத்து மாவு வகைகள் என 1000-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை செய்து காட்சிப்படுத்தினர்.

    சிறந்த உணவு வகைகள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றி தழ்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவில், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

    • வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நட்நதது.
    • தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    பர்கூர் தாலுகா ஜெகதேவி ஊராட்சியில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நட்நதது. இதற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 81 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் காந்தி வழங்கி பேசியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் பதவியேற்ற ஒன்றரை ஆண்டில் பொதுக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, பெண்களுக்கு இலவச பஸ் வசதி, புதுமை பெண் திட்டத்தின் கீழ் பட்ட படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையில், ஜெகதேவி ஊராட்சியை சேர்ந்த 81 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் வீடுமனை பட்டா வழங்கப்பட்டு பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் பிற மாநில முதல் அமைச்சர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு எண்ணற்ற திட்டங்களை முதல் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சதீஸ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், தாசில்தார் பன்னீர் செல்வி, துணை தாசில்தார் பத்மா, நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி.ஜி.ராஜேந்திரன், ஜெகதேவி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி, துணை தலைவர் சரவணன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஜெகதேவி கிராம பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    • இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக மாக கொண்டாடப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமரும் இரும்பு பெண்மணி என அனைவ ராலும் போற்றப்படும் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி தலைமையில் பழையப்பேட்டை ஆட்டோ நிறுத்தும் இடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக மாக கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவிற்கு முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்திரி, மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத்தலைவர் சேகர், எஸ்.சி. எஸ்.டி. மாநில பெறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, முன்னால் நகர தலைவர் முபாரக், மாநில பொதுசெயலாளர் ஹரி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஊடக பிரிவு கமலகண்ணன், பிலால் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

    • மம்தா தனது 2 குழந்தைகளுடன், தாய் வீடான பல்லூருக்கு சென்று விட்டார்.
    • என் மகன் கண்டிப்பாக வேண்டும் என கூறி மகனை கொடுக்க மறுத்துள்ளார்.

    ஓசூர்,

    கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜெய்நகரைச் சேர்ந்தவர் பாலாமணி. பெயிண்டர். இவர் கடந்த 2012-ம் ஆண்டு கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே பல்லூரைச் சேர்ந்த மம்தா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு முதலில், மாற்றுத்திறனுடன் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், 2-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சுமந்த் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

    இந்நிலையில், கருத்து வேறுபாட்டால் கடந்த 2020-ம் ஆண்டு கணவனை பிரிந்த மம்தா தனது 2 குழந்தைகளுடன், தாய் வீடான பல்லூருக்கு சென்று விட்டார்.

    கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன், பாலாமணி தனது குழந்தைகளை பார்ப்பதற்காக, பல்லூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது, ​​மனைவியுடன் மகள் மட்டுமே இருந்துள்ளார். மகனை காணவில்லை. அதற்கு மம்தா சரியான பதில் கூறவில்லை.

    மேலும் மக்களை கணவரிடம் ஒப்படைத்து விட்டு மாயமாகிவிட்டார். இதன் பின்னர், பாலாமணி தனது மகளுடன் ஜெய்நகருக்கு சென்று விட்டார். பின்னர் தனது மகன் எங்கே இருக்கிறான் என தொடர்ந்து தேடி வந்துள்ளார்.

    இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு மம்தா தனது மகனை விற்பனை செய்தது, அந்த குழந்தை ஈரோடு அருகே ஒரு கிராமத்தில் இருப்பதாகவும், பாலாமணிக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து, பாலா மணி, பாஸ்கர் ராவின் உதவியுடன் கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி காவல் நிலையத்தில், தனது மகனைக் கண்டுபிடித்து கொடுக்க புகார் அளித்தார்.

    அந்த புகாரின் பேரில் அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், ஈரோடு சென்று பாலாமணியின் மகன் சுமந்தை மீட்டுள்ளனர். ஒன்றரை வயது குழந்தையாக இருந்த போது விற்கப்பட்ட சுமந்துக்கு தற்போது 5 வயதாகி உள்ளது. அவனது வளர்ப்பு பெற்றோர், அவனுக்கு செல்வமணி என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர்.

    இதையடுத்து, அந்த குழந்தை, அவனை வளர்த்தவர்கள் மற்றும் சிறுவனின் பெற்றோரான பாலாமணி, மம்தா ஆகியோரை அத்திப்பள்ளி போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது, ​​குழந்தையை வாங்கியவர்கள் தாங்களே அவனை நன்றாக வளர்க்க எனக்கூறி பாலாமணி மற்றும் மம்தா ஆகியோரின் கால்களில் விழுந்து கதறி அழுதனர்.

    ஆனால், பாலாமணியோ ஊனமுற்ற தனது மகளுக்கு சகோதரன் தேவை. அதனால் எனக்கு என் மகன் கண்டிப்பாக வேண்டும் என கூறி மகனை கொடுக்க மறுத்துள்ளார்.

    நீண்டநேர பேச்சு வார்த்தைக்கு பின் சிறுவனை வளர்த்தவர்கள் அவனை பெற்றோரிடம் விட்டு சோகத்துடன் சென்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×