என் மலர்
உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எம்.பி .தம்பிதுரை.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் போச்சம்பள்ளியை முன் மாதிரி கிராமமாக தத்தெடுத்த தம்பிதுரை எம்.பி.
- போச்சம்பள்ளியை முன் மாதிரி கிராமமாக மாற்ற தத்தெடுத்து கொண்டார்.
- அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுக் காவின் தலைமையிடமாக இருந்து வருகிறது. இருந்தாலும் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்கள் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் அப்பகுதியில் உள்ள மக்கள் எவ்வித வளர்ச்சியும் அடையாமல் இருந்து வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற எம்.பி. தம்பிதுரை மத்திய அரசின் சன்சேடு ஆதர்ஸ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் போச்சம்பள்ளியை முன் மாதிரி கிராமமாக மாற்ற தத்தெடுத்து கொண்டார்.
இதில் தனது எம்.பி. நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையையும் மேலும் அப்பகுதி மக்களின் வளர்ச்சி, அடிப்படை தேவைகளான கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்தும், அதேபோல் அரசின் திட்டங்களான வேலை வாய்ப்பு மற்ற விவசாயம், கூட்டுறவு சங்கங்களின் பயன்கள் மற்றும் கல்வி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்படுத்தி அவர்களுக்கு சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் எனவும், இதனால் சுற்று வட்டார பகுதிகள் வளர்ச்சி அடையும் என்று தம்பிதுரை எம்.பி. கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வந்தனாகார்க் மற்றும் அரசு துறைச் சார்ந்த பல்வேறு அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.






