என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில்  வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
    X

    மத்தூர் அருகே உள்ள களர்பதி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி கர்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குகிறார். அருகில் வட்டார மருத்துவர் ரங்கசாமி உள்ளிட்டோர்.

    மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

    • வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிசை அளித்து ஆலோசனை வழங்கினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகாமிற்கு வட்டார மருத்துவர் ரங்கசாமி தலைமை வகித்து நோய்கள் வருமுன் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் பொதுமக் களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார். இம்முகாமில் சிறுநீர் பரிசோ தனை, நீரிழிவு பரிசோதனை, சளி பரிசோதனை, இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, இதயம் சம்பந்தமான பரிசோதனை, இ.சி.ஜி.பரிசோதனை, கர்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனை செய்து நோய் செய்து நோயின் தரம் குறித்து நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிசை அளித்து ஆலோசனை வழங்கினர்.

    முன்னதாக முகாமை களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து தொடக்கி வைத்தார். முகாமில் மத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், துணைத் தலைவர் பர்வின்தாஜ் சலீம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் மகேஸ்வரி மாதப்பன் மற்றும் மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியா ளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×