என் மலர்
கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
- ஊராட்சி மன்ற துணை தலைவர் பாஸ்கர், நாட்டார் மாது, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் இமாசல பிரதேச காங்கிரஸ் வெற்றி பெற்றதின் விழா ஆகியவை கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, ராகுல் பேரவை தலைவர் குட்டி என்கின்ற விஜயராஜ், நிர்வாகிகள் சரவணகுமார், அஜித் பாஷா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதாம், மாரியப்பன், ஏழுமலை, அமாவாசை, அஜிசுல்லா, பாண்டுரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷபிக் அகமத், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சிவலிங்கம், கமால்கான், நசிம், விஜய், சின்னசாமி, திம்மராயன், அன்வர், ஊராட்சி மன்ற துணை தலைவர் பாஸ்கர், நாட்டார் மாது, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்,
காவேரிப்பட்டனம்,
காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ,விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தி.மு.க. அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்,நகர செயலாளர் விமல் வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் வாசுதேவன் ,முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சுந்தரேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன் , மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார், பேரூர் கிளைச் செயலாளர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர இணை செயலாளர் மதனகோபால் நன்றி கூறினார்.
- காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா அருகில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர், மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு
முன்னாள் மாவட்ட தலைவர் அக. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். முன்னதாக மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், தர்கா, தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திர வர்மா, மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், கவுன்சிலர் விநாயகம், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் கமலக்கண்ணன், நகர துணை தலைவர்கள் பிலால், மரிய இருதயம், வட்டார தலைவர்கள் மாது, கோபால், அமல்ராஜ், முன்னாள் நகர தலைவர் முபாரக், காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எரிசாராயத்தினை கைப்பற்றி கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
- தொழிற்சாலை பயன்பாட்டிற்கு உகந்தது என ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட எரிசாராயத்தினை கைப்பற்றி கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த எரிசாராயத்தினை சென்னை
தடய அறிவியல் துறை யினரால் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு உகந்தது என ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி ஆயுதபடை வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 42 ஆயிரத்து 273 லிட்டர் எரிசாராயத்தினை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு,
விலை நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு குறையாமல் பொது ஏலம் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற 15-ந் தேதி காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி ஆயுதபடை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்
- இதனால் மனமுடைந்து காணப்பட்ட சத்யா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மேல்சாமல்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷன். இவரது மகன் சத்யா (வயது14). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பல்ேவறு மருத்துவனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சத்யா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர்.
- கஞ்சா வைத்திருந்த ஓடிசா மாநிலம், குறிகுடா பகுதியை சேர்ந்த நோயல் பெடரிடா (வயது25) என்பவரை போலீசார் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 800 கிராம் கஞ்சா வைத்திருந்த ஓடிசா மாநிலம், குறிகுடா பகுதியை சேர்ந்த நோயல் பெடரிடா (வயது25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்யப்பட்டது.
- வீட்டை வெளியே சென்ற பின் மாலையில் வீடு திரும்பவில்லை.
- எனது மகளை அதே பகுதியை சேர்ந்த பீரேஷ் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்துள்ள கொட்டபெல்லூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி. இவர் நேற்று வீட்டை வெளியே சென்ற பின் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்து கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் பெற்றோர் எனது மகளை அதே பகுதியை சேர்ந்த பீரேஷ் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலைக்கு சென்ற இவர் மாலையில் வீடு திரும்பவில்லை.
- இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ராஜண்ணா (வயது56). இவர் ஓசூர் அரசு போக்குவரத்து கழக பஸ் டெப்போவில் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற இவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ராஜண்ணாவை தேடி வருகின்றனர்.
- கடையில் இருந்த 6 செல்போன்களை மர்ம நபர் ஒருவர் திருடிவிட்டு சென்றுள்ளார்.
- செல்போன் திருடியதாக சானசந்திரம் பகுதியை சேர்ந்த அப்பு (20) என்பவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜாபர்தெருவை சேர்ந்தவர் ஜாபர்உேஷன் (வயது29). இவர் தாலுகா அலுவலகம் சாலையில் செல்போன் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கடையில் இருந்த 6 செல்போன்களை மர்ம நபர் ஒருவர் திருடிவிட்டு சென்றுள்ளார்.
இது குறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் திருடியதாக சானசந்திரம் பகுதியை சேர்ந்த அப்பு (20) என்பவரை கைது செய்தனர்.
- வாகனத்தை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட 162 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
- குட்கா கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடியில் சிப்காட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை போலீசார் மறித்தனர். வண்டியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார்.
வாகனத்தை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட 162 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன்மதிப்பு ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர். தப்பியோடி டிரைவர் கர்நாடகா மாநிலம், கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த நிஜாம் (வயது38) என்பது தெரியவந்தது. குட்கா கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெக்குந்தி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த சென்னப்பன், அவதானப்பட்டியை சேர்ந்த அரவிந்த், ரகு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, டிச.9-
கிருஷ்ணகிரி டேம் அருகே நெக்குந்தி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த சென்னப்பன், அவதானப்பட்டியை சேர்ந்த அரவிந்த், ரகு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 400 பணம் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- யானைகளை வனத்து றையினர் பட்டாசுகள் வெடித்து காட்டிற்குள் விரட்டினார்கள்.
- ஒன்றன் மீது மற்றொன்று துதிக்கையால் தண்ணீரை அடித்து விளையாடியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வனச்ச ரகத்திற்கு உட்பட்ட ஊடே தூர்க்கம் வனப்பகுதியில் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 ஆண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை என மூன்று காட்டு யானைகள் இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் சுற்றி வருகிறது. இந்த யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே முகாமிட்டிருந்தன. அந்த யானைகளை வனத்து றையினர் பட்டாசுகள் வெடித்து காட்டிற்குள் விரட்டினார்கள்.
இந்த நிலையில் 3 யானைகளும் நேற்று காலை கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள பாலகுறி கிராமம் அருகில் வந்தன. அந்த பகுதியில் பாறையூர் ஏரிக்கு சென்ற 3 யானைகளும் ஏரியில் இறங்கி நீண்ட நேரம் ஆனந்த குளியல் போட்டன.
ஒன்றன் மீது மற்றொன்று துதிக்கையால் தண்ணீரை அடித்து விளையாடியது. மேலும் தண்ணீரில் விளையாடிய சோர்வில் சிறிது நேரம் ஏரிக்கரையையொட்டி தண்ணீரில் யானைகள் படுத்துக் கொண்டன. இதை அந்த பகுதி பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். நேற்று காலை 11 மணி அளவில் ஏரிக்குள் சென்ற யானைகள், மாலை வரை ஏரியை விட்டு வெளியே வரவில்லை. அந்த யானைகளை மாலை வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் முடிவு செய்தனர். மேலும் பாலகுறி மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், ஏரிக்கரையோரம் வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.






