என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா
- கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
- ஊராட்சி மன்ற துணை தலைவர் பாஸ்கர், நாட்டார் மாது, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் இமாசல பிரதேச காங்கிரஸ் வெற்றி பெற்றதின் விழா ஆகியவை கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, ராகுல் பேரவை தலைவர் குட்டி என்கின்ற விஜயராஜ், நிர்வாகிகள் சரவணகுமார், அஜித் பாஷா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதாம், மாரியப்பன், ஏழுமலை, அமாவாசை, அஜிசுல்லா, பாண்டுரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷபிக் அகமத், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சிவலிங்கம், கமால்கான், நசிம், விஜய், சின்னசாமி, திம்மராயன், அன்வர், ஊராட்சி மன்ற துணை தலைவர் பாஸ்கர், நாட்டார் மாது, உள்பட பலர் கலந்து கொண்டனர்.






