என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரிபட்டினத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்,
காவேரிப்பட்டனம்,
காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ,விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தி.மு.க. அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்,நகர செயலாளர் விமல் வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் வாசுதேவன் ,முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சுந்தரேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன் , மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார், பேரூர் கிளைச் செயலாளர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர இணை செயலாளர் மதனகோபால் நன்றி கூறினார்.






