என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிசாராயம் ஏலம்"

    • எரிசாராயத்தினை கைப்பற்றி கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • தொழிற்சாலை பயன்பாட்டிற்கு உகந்தது என ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட எரிசாராயத்தினை கைப்பற்றி கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த எரிசாராயத்தினை சென்னை

    தடய அறிவியல் துறை யினரால் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு உகந்தது என ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, கிருஷ்ணகிரி ஆயுதபடை வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 42 ஆயிரத்து 273 லிட்டர் எரிசாராயத்தினை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு,

    விலை நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு குறையாமல் பொது ஏலம் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற 15-ந் தேதி காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி ஆயுதபடை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×