என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கற்றல் மற்றும் செயல் விளக்கம் மூலமாக தெரிந்து கொண்டனர்.
    • மாணவிகள் மகாலட்சுமி, நந்தினி, வர்ஷா பரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    திருச்சி அரசு மகளிர் தோட்டக்கலை கல்லூரியிலிருந்து 8 மாணவிகள் ஊரகத் தோட்டக்கலை அனுபவம் சம்பந்தமாக கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராம கவுண்டர் அலுவலகத்தில் களப்பணி மேற்கொண்டனர்.

    தோட்டக்கலை பயிர்கள் மா, வாழை, தென்னை காய்கறி பயிர்கள் உளவு, நடவு, விதைப்பு, உரமிடல், பயிர் பாதுகாப்பு, உற்பத்தி பெருக்கம், சந்தைப்படுத்துதல் சம்பந்தமாகவும் கால்நடைகள் பறவைகள் இடமிருந்து தோட்டக்கலை பயிர்கள் பாதுகாப்பு சம்பந்தமாகவும், கற்றல் மற்றும் செயல் விளக்கம் மூலமாக தெரிந்து கொண்டனர்.

    இதில் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் மகாலட்சுமி, நந்தினி, பூர்ணிமா, சௌபிக்கா உமையாள், வைஷ்ணவி, ரிதுவர்ஷினி, வர்ஷா பரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதற்கு ஏற்பாடுகளை காவேரிப்பட்டினம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவணன் செய்தார்.

    • நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் 40 இடங்களில் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்திட நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மகளிர் இச்சங்கத்தில் உறுப்பி னர்களாகப்படு வார்கள். இதற்கான வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். சங்க உறுப்பினர் குறைந்தபட்சம் ஒரு கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மகளிர் பயன்பெறும் வகையில், ஆதிதிராவிடர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைத்திட தலா 50 உறுப்பினர்களை கொண்ட ஒரு புதிய பால் உற்பத்தியாளர் சங்கம் அமைக்க வேண்டும். அச்சங்கத்தின் தேவைப்படும் பதிவேடு, புத்தகம், பால் கேன்கள் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் வாங்க தலா ரூ.1 லட்சம் பயன்படுத்திடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்கள் அதிகம் பயன்பெற்ற கிராமங்களில் ஆதி திராவிடர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும்.

    எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்தவர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக முதல் மாடி, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
    • கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துறை வாரியாக நடந்து வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களின் மனுக்கள் மீதும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் தொடர்பான பதிவேடுகளை டாக்டர் பீலா ராஜேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் சூளகிரி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் துறை மூலம் பட்டா, சிட்டா, முதியோர் உதவி தொகை, புதிய மின்னணு குடும்ப அட்டை, சான்றிதழ்கள் வழங்கும் பணிகளையும், பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் வந்தனாகார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
    • மர்ம ஆசாமிகள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கலுராம் (வயது 32). இவர் தற்போது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் தங்கி கெலமங்கலம் சாலையில் மின்சார பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்.

    கீழே கடையும், மேலே வீடும் உள்ளது. நேற்று ஒரே மாதிரி உடை அணிந்த 2 மர்ம நபர்கள் மாடியில் இருந்த கலுராம் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது வீட்டில் கலுராம், அவரது மனைவி யசோதா மற்றும் 2 குழந்தைகளும் இருந்துள்ளனர்.

    அந்த மர்ம ஆசாமிகளை கண்டதும் கலுராமும் , அவரது மனைவியும் சத்தம் போட்டுள்ளனர்.உடனே அந்த ஆசாமிகள் குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

    பின்னர் கத்தி முனையிலேயே வீட்டின் பீரோவிலிருந்த பணத்தை எடுத்து கொடுக்கும்படி மிரட்டினர். இதில் பயந்துபோன கலுராம் பீரோவில் இருந்த ரூ.4.5 லட்சம் ரொக்கப்பணத்தை எடுத்து அந்த மர்ம ஆசாமிகளிடம் கொடுத்தார்.

    இதையடுத்து மர்ம ஆசாமிகள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசில் கலுராம் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.

    கலுராம் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்கள் 2 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். கத்தி முனையில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • விவசாய நிலங்களில் புகுந்து விளை பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
    • தோட்டத்தில் சென்று பார்த்த போது பசப்பா மயக்க நிலையில் இருந்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனசரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் பல குழுக்களாக பிரிந்து முகாமிட்டு விவசாய நிலங்களில் புகுந்து விளை பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் தேன்கனி கோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தை சேர்ந்த சித்தூரப்பா என்ற பசப்பா (வயது 60) தன் தோட்டத்தில் உள்ள ராகிபயிர்களை அறுவடை செய்து களத்தில் குவித்துள்ளார்.

    அதனால் நேற்றிரவு காவலுக்கு சென்று மரத்தின் மேல் அமைத்திருந்த குடிசை அமர்ந்து காவலுக்கு இருந்துள்ளார் .அதிகாலை மரத்திலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார் .அங்கு ஒற்றை யானை நின்று கொண்டிருந்ததை பார்த்து பசப்பா ஒடி உள்ளார்.

    அந்த யானை பசப்பாவை துரத்திக் கொண்டு துதிக்கையால் தூக்கி வீசி உள்ளது. இதில் கிழே விழுந்து கை, இடுப்பு, பகுதியில் படுகாயம் மயக்க நிலையில் இருந்துள்ளார்.

    காவலுக்கு சென்றவர் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் தோட்டத்தில் சென்று பார்த்த போது பசப்பா மயக்க நிலையில் இருந்துள்ளார்.

    அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த தேனகனிக்கோட்டை வன சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று தாரை, தப்பட்டை அடித்து, பட்டாசு வெடித்து, அதிக ஒலி எழுப்பி ஒற்றை யானையை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். வனத்துறையினர் அங்கே முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மரகட்டாவை சுற்றியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • யானை பசப்பாவை துரத்திக் கொண்டு துதிக்கையால் தூக்கி வீசி உள்ளது.
    • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தை சேர்ந்தவர் சித்தூரப்பா என்ற பசப்பா (வயது60). இவர் தனது தோட்டத்தில் உள்ள ராகிபயிர்களை அறுவடை செய்து களத்தில் குவித்துள்ளார்.

    அதனால் நேற்றிரவு காவலுக்கு சென்று மரத்தின் மேல் அமைத்திருந்த குடிசையில் அமர்ந்து காவலுக்கு இருந்துள்ளார். அதிகாலை மரத்திலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது அங்கு ஒற்றை யானை நின்று கொண்டிருந்ததை பார்த்து பசப்பா ஒடி உள்ளார்.

    அந்த யானை பசப்பாவை துரத்திக் கொண்டு துதிக்கையால் தூக்கி வீசி உள்ளது. இதில் கீழே விழுந்து கை, இடுப்பு, பகுதியில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்ததது.
    • கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (28) தீபன் (37) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஓசூர் முனீஸ்வரன் கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்ததது.

    இதனையடுத்து கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (28) தீபன் (37) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 12,000 மதிப்புள்ள மருந்துகளை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 20 -ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜாத்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். வழக்கம் போல் கடந்த 20 -ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து பெற்றோர்கள் ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    • பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
    • இது குறித்து காவேரிப்பட்டனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 51) விவசாயி.

    இவருக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்து உள்ளார்.

    பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

    தீராத வயிற்று வலியால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மனவேதனையில் இருந்த பரசுராமன் கடந்த 20-ஆம் தேதி விஷம் குடித்து உள்ளார்.

    உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் சைக்கிள் மீது மோதியது.
    • போலீசார் சீனப்பா (52), பாப்பம்மா (40), முனிராஜ் (25), முருகேசன் (30), சந்திரகலா (34) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே உள்ள கூச்சனூரை சேர்ந்தவர் காந்தம்மா (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் சீனப்பா (52). உறவினர்கள். கடந்த 15-ந் தேதி காந்தம்மாவின் மகனான 9-ம் வகுப்பு மாணவர் கோகுல் (16) என்பவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சீனப்பா மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அந்த நேரம் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் சைக்கிள் மீது மோதியது. இதில் கோகுல் காயம் அடைந்தார்.

    அந்த நேரம் சீனப்பா கோகுலை தாக்கினார். இது குறித்து காந்தம்மா கேட்டார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் கோகுல், அவரது தரப்பை சேர்ந்த சைத்ரா (22), பவானி (24) ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.

    அது குறித்து காந்தம்மா பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சீனப்பா (52), பாப்பம்மா (40), முனிராஜ் (25), முருகேசன் (30), சந்திரகலா (34) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    அதே போல சீனப்பா ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது தரப்பில் தானும், பாப்பம்மா (40), முனிராஜ் (25) ஆகிய 3 பேர் காயமடைந்ததாக புகார் செய்துள்ளார்.

    அந்த புகாரின் பேரில் பிரவீன்குமார் (25), ராஜீவ்காந்தி (30), பவானி (24), காந்தம்மா (36), ராஜப்பா (37) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அனைவரையும் ஆசிரியர் பயிற்றுநர் வைத்தியநாதன் வரவேற்று பேசினார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா சூளகிரி கோட்டை தெருவில் அமைந்து உள்ள வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஜார்ஜ் மற்றும் வட்டார வள மைய பொறுப்பு மேற்பார்வை யாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினர்.

    இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியர் பயிற்றுநர் வைத்தியநாதன் வரவேற்று பேசினார்.

    உதவி உபகரணங்களாக வாக்கர், ஏர்பெட், இரண்டு வித கை தசை பயிற்சி உபகரணங்கள், பேச்சு பயிற்சி உபகரணங்கள், யோகா மேட், பேலன்ஸ் போர்டு ஆகியவை வழங்கப்பட்டது. இந்த உதவி உபகரணங்கள் 34 மாணவர்களுக்கு நான் அலிம்கோ மூலமாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வாயிலாக வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் மற்றும் கணினி பதிவாளர் ஆகியோர் பங்கேற்றனர். பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் உதவி உபகரணங்களை பெற்றுக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் வித்யாலட்சுமி செய்திருந்தார்.

    • விலை நிர்ணயம் செய்து அரசானை வெளியிட்ட வேண்டுமெனவும் அதே விலைக்கு மாற்றமில்லாமல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும்.
    • இல்லை யென்றால் ஏக்கருக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விடும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 100 ஏக்கருக்கு மேல் பனிகரும்பு விவசாயம் செய்து உள்ளனர்.

    மேலும் வருகின்ற பொங்கல் திருநாளில் ரேசன் கார்டு உள்ளவர்களுக்கு 5 அடி அளவு கொண்ட ஒரு முழு நீள கரும்பு இலவசமாக வழங்குவதாக அரசு இன்னும் அறிவிப்பானை வெளியிடவில்லை.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச பொருட்களை வழங்கும்போது கடந்த ஆண்டு போல முழு நீள கரும்பு ஒன்றையும் வழங்கிட அறிவிப்பானை வெளியிட வேண்டும் எனவும் அதை நம்பி தான் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேலாக கரும்பு பயிரிடப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

    மேலும் கடந்த ஆண்டு போலவே ஒரு முழு நீள கரும்புக்கு ரூபாய் 33 விலை நிர்ணயம் செய்து அரசானை வெளியிட்ட வேண்டுமெனவும் அதே விலைக்கு மாற்றமில்லாமல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். இல்லை யென்றால் ஏக்கருக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விடும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறிப்பாக கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு முழு நீள கரும்பு ஒன்றுக்கு ரூ. 21, 22, 23, தனித்தனி விலைகளை அரசு அதிகாரிகள் நிர்ணயம் செய்து கொடுத்ததாகவும் இதனால் பெரும்பாலான விவசாயிகள் நட்டம் ஏற்பட்டதாகவும் புழம்புகின்றனர்.

    மேலும் இந்த ஆண்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எங்கள் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகளையே கொள்முதல் செய்து அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த ஆண்டு பனி கரும்புகளை கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடவில்லை என்றால் அடுத்த கட்டமாக இப்பகுதி விவசாயிகள் சார்பாக கையில் கரும்புகளை ஏந்தி ஊத்தங்கரை தாலுக்கா ஆபீஸ் முன்பு போராட்டம் நடத்துவதாக கூறினர்.

    ×