என் மலர்
நீங்கள் தேடியது "மாணவிகள் களப்பணி"
- கற்றல் மற்றும் செயல் விளக்கம் மூலமாக தெரிந்து கொண்டனர்.
- மாணவிகள் மகாலட்சுமி, நந்தினி, வர்ஷா பரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
திருச்சி அரசு மகளிர் தோட்டக்கலை கல்லூரியிலிருந்து 8 மாணவிகள் ஊரகத் தோட்டக்கலை அனுபவம் சம்பந்தமாக கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராம கவுண்டர் அலுவலகத்தில் களப்பணி மேற்கொண்டனர்.
தோட்டக்கலை பயிர்கள் மா, வாழை, தென்னை காய்கறி பயிர்கள் உளவு, நடவு, விதைப்பு, உரமிடல், பயிர் பாதுகாப்பு, உற்பத்தி பெருக்கம், சந்தைப்படுத்துதல் சம்பந்தமாகவும் கால்நடைகள் பறவைகள் இடமிருந்து தோட்டக்கலை பயிர்கள் பாதுகாப்பு சம்பந்தமாகவும், கற்றல் மற்றும் செயல் விளக்கம் மூலமாக தெரிந்து கொண்டனர்.
இதில் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் மகாலட்சுமி, நந்தினி, பூர்ணிமா, சௌபிக்கா உமையாள், வைஷ்ணவி, ரிதுவர்ஷினி, வர்ஷா பரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கு ஏற்பாடுகளை காவேரிப்பட்டினம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவணன் செய்தார்.






