என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
- வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- அனைவரையும் ஆசிரியர் பயிற்றுநர் வைத்தியநாதன் வரவேற்று பேசினார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா சூளகிரி கோட்டை தெருவில் அமைந்து உள்ள வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஜார்ஜ் மற்றும் வட்டார வள மைய பொறுப்பு மேற்பார்வை யாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினர்.
இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியர் பயிற்றுநர் வைத்தியநாதன் வரவேற்று பேசினார்.
உதவி உபகரணங்களாக வாக்கர், ஏர்பெட், இரண்டு வித கை தசை பயிற்சி உபகரணங்கள், பேச்சு பயிற்சி உபகரணங்கள், யோகா மேட், பேலன்ஸ் போர்டு ஆகியவை வழங்கப்பட்டது. இந்த உதவி உபகரணங்கள் 34 மாணவர்களுக்கு நான் அலிம்கோ மூலமாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வாயிலாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் மற்றும் கணினி பதிவாளர் ஆகியோர் பங்கேற்றனர். பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் உதவி உபகரணங்களை பெற்றுக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் வித்யாலட்சுமி செய்திருந்தார்.






