என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை பகுதியில் கரும்பு விளைச்சல் அமோகம்

- விலை நிர்ணயம் செய்து அரசானை வெளியிட்ட வேண்டுமெனவும் அதே விலைக்கு மாற்றமில்லாமல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும்.
- இல்லை யென்றால் ஏக்கருக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விடும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 100 ஏக்கருக்கு மேல் பனிகரும்பு விவசாயம் செய்து உள்ளனர்.
மேலும் வருகின்ற பொங்கல் திருநாளில் ரேசன் கார்டு உள்ளவர்களுக்கு 5 அடி அளவு கொண்ட ஒரு முழு நீள கரும்பு இலவசமாக வழங்குவதாக அரசு இன்னும் அறிவிப்பானை வெளியிடவில்லை.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச பொருட்களை வழங்கும்போது கடந்த ஆண்டு போல முழு நீள கரும்பு ஒன்றையும் வழங்கிட அறிவிப்பானை வெளியிட வேண்டும் எனவும் அதை நம்பி தான் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேலாக கரும்பு பயிரிடப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் கடந்த ஆண்டு போலவே ஒரு முழு நீள கரும்புக்கு ரூபாய் 33 விலை நிர்ணயம் செய்து அரசானை வெளியிட்ட வேண்டுமெனவும் அதே விலைக்கு மாற்றமில்லாமல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். இல்லை யென்றால் ஏக்கருக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விடும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு முழு நீள கரும்பு ஒன்றுக்கு ரூ. 21, 22, 23, தனித்தனி விலைகளை அரசு அதிகாரிகள் நிர்ணயம் செய்து கொடுத்ததாகவும் இதனால் பெரும்பாலான விவசாயிகள் நட்டம் ஏற்பட்டதாகவும் புழம்புகின்றனர்.
மேலும் இந்த ஆண்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எங்கள் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகளையே கொள்முதல் செய்து அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு பனி கரும்புகளை கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடவில்லை என்றால் அடுத்த கட்டமாக இப்பகுதி விவசாயிகள் சார்பாக கையில் கரும்புகளை ஏந்தி ஊத்தங்கரை தாலுக்கா ஆபீஸ் முன்பு போராட்டம் நடத்துவதாக கூறினர்.