என் மலர்
கிருஷ்ணகிரி
- அந்த யானை விவசாய நிலத்திலேயே நின்றது. இதைகண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- அந்த யானையை பட்டாசு வெடித்து திம்மசந்திரம் காட்டுக்குள் விரட்டினர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தளி, ஜவளகிரி, ஊடேதுர்கம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிகின்றன.
இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் திம்மசந்திரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மேகலகவுண்டனூர், கோட்டட்டி கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்தது.
அந்த யானை விவசாய நிலங்களில் புகுந்து ராகி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தது. பின்னர் அந்த யானை விவசாய நிலத்திலேயே நின்றது. இதைகண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் பட்டாக வெடித்தும், சத்தம் போட்டும் யானையை விரட்டினர். இதனால் அந்த யானை கோட்டட்டி கிராமத்தில் தார்சாலையில் ஓய்யாரமாக நடந்து சென்றது.
இந்த யானையை வாலிபர்கள் பின் தொடர்ந்து சென்று செல்போன்களில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விரைந்து சென்றனர்.
அவர்கள் அந்த யானையை பட்டாசு வெடித்து திம்மசந்திரம் காட்டுக்குள் விரட்டினர்.
- வாகன ஓட்டிகள் மீது விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- போக்குவரத்து விதிகளை கடை பிடித்து வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ஒரே நாளில் என்பத்தைந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் மூன்று பேர் அமர்ந்து பயணம் செய்த வழக்கில் பதினைந்து வாகனங்கள் மீதும், செல்போன் பேசியபடி ஒட்டியதாக பத்து வாகனங்கள் மீதும், நோ என்ட்ரி பகுதில் சென்றதாகமுப்பது வாகனங்கள் மீதும், ஹெல்மட் அணியாமல் பயணம் செய்ததாக பத்து வாகனங்கள் மீதும், அதிக வேகத்தில் சென்றதாக ஐந்து வாகனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நேற்று ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்கில் சிக்கிய வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் போக்குவரத்து விதிகளை கடை பிடித்து வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டது.
- கோதண்டராம சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமூட்லு கிராமத்தில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ராமர், சீதை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு கோலத்தில் காட்சியளித்தனர்.
இந்த சிறப்பு பூஜையில் பஜனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் பழமை வாய்ந்த பச்சை மலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்களும் அபிஷேகங்களும் செய்து சிறப்பு வெண்ணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் பெருமான் காட்சியளித்தார்.
இந்த சிறப்பு பூஜையில் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- கடந்த 26-ந் தேதி அனுராதா மற்றும் கடை ஊழியர்கள் பிரபு, ரவிச்சந்திரன் ஆகியோர் கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர்.
- ரூ.5 கோடி கேட்டு பெண் உள்பட 3 பேரையும் காரில் கடத்திய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி அனுராதா (வயது 36). இவர் கர்நாடக மாநிலம் ஒசகோட்டாவில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி அனுராதா மற்றும் கடை ஊழியர்கள் பிரபு, ரவிச்சந்திரன் ஆகியோர் கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர்.
அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார் ஓசூர் அருகே ஏ.செட்டிப்பள்ளி-சூளகிரி சாலையில் ஜாகீர்பாளையம் பகுதியில் வந்தது. அப்போது பின்னால் காரில் வந்த நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அனுராதா சென்ற காரை முந்தி சென்று வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய 7 பேர் அனுராதா, பிரபு, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரையும் வலுகட்டாயமாக இழுத்து தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர். அங்கிருந்து சேலம் சென்ற அந்த நபர்கள் ரூ.5 கோடி கொடுத்தால் ஊழியர்கள் 2 பேரையும் விட்டு விடுவதாக அனுராதாவிடம் கூறினர். அவ்வளவு தொகை என்னால் கொடுக்க முடியாது என அனுராதா கூறி உள்ளார்.
பின்னர் ரூ.1 லட்சம் தருவதாக அவர் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் அனுராதா தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி ரூ.1 லட்சத்தை எடுத்து அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அனுராதா, பிரபு, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரையும் அந்த நபர்கள் சேலம் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.
பின்னர் அங்கிருந்து சூளகிரி சென்ற அனுராதா நடந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரூ.5 கோடி கேட்டு பெண் உள்பட 3 பேரையும் காரில் கடத்திய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ஓசூர்,
ஓசூர் அ.தி.மு.க.வினர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், முன்னா ள் அமை ச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் ஓசூர் அ.தி.மு.க.வினர், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் அவரது வீட்டில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதில், மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர்.வாசுதேவன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
- ரூ. 5 கோடி பணம் கொடுத்தால்தான் உங்களை விடுவிப்போம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.
- பணம் கேட்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலம் ஹொசகட்டா பகுதியில் மாளிகைப்பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருபவர் பிரகாஷ் மனைவி அனுராதா (வயது 36).
இவர் தனது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் பிரபு, ரவிச்சந்திரன் ஆகியோருடன் காரில் கடந்த 26-ந்தேதி சூளகிரிக்கு வந்து கொண்டிருந்தார்.
சூளகிரி அருகேயுள்ள ஏ.செட்டிபள்ளி ஜாஹீர்பாளையம் என்ற இடத்தருகே அவர்கள் சென்றபோது 7 பேர் கொண்ட மர்ம கும்பல் காரை வழிமறித்து எறியுள்ளனர்.
பின்னர் காரை சேலத்தை நோக்கி விடச்சொன்ன அவர்கள் அனுராதாவிடம் ரூ. 5 கோடி பணம் கொடுத்தால்தான் உங்களை விடுவிப்போம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.
ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று அனுராதா கூறியுள்ளார்.பின்னர் நீண்ட நேரமாக மர்ம கும்பல் அனுராதாவிடம் பணத்துக்காக மல்லுக்கட்டி உள்ளது. இறுதியாக ரூ.1 லட்சத்தையாவது தங்களது வாங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து அனுராதா தனது வங்கி கணக்கிலிருந்து மர்ம கும்பல் சொன்ன வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்தை அனுப்பியுள்ளார்.
சேலத்திற்கு சென்றதும் ஒரு ஏ.டி.எம்.அருகே காரை நிறுத்த சொல்லி அந்த கும்பல் இறங்கி தப்பி விட்டனர்.
இது குறித்து சூளகிரி போலீசில் அனுராதா புகார் செய்துள்ளார்.அதன்பேரில் பணம் கேட்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- நிலம் வாங்கி தருவதாக கூறி மணியிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
- கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 26). இவரது நண்பர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் .
இவர் சென்னையை சேர்ந்த கருணாகரன் என்பவரிடம் இருந்து நிலம் வாங்கி தருவதாக கூறி மணியிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் நிலத்தை வாங்கி தரவில்லை. இதையடுத்து தனது பணத்தை திருப்பி கொடுக்கும்படி மணி கேட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ரூ.5 லட்சம் பணத்தை மணியிடம் ரமேஷ் கொடுத்துள்ளார். ஆனால் மணியிடம் வாங்கிய ரசீதில் ரூ.10 லட்சத்தையும் பெற்றுக்கொண்டு விட்டதாக நிரப்பி மணியிடம் கையெழுத்து வாங்கி ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து மணி கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்தூர் போலீசில் சிறுமியின் தந்தை அசோகன் புகார் செய்தார்.
- போலீசார் வழக்கு பதிந்து மயமான அர்ச்சனாவை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள வாலிபட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 29-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார்.
எங்கு தேடியும் அவரை பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மத்தூர் போலீசில் சிறுமியின் தந்தை அசோகன் புகார் செய்தார்.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டபெல கொண்டலப்பள்ளி பகுதியை சேர்ந்த நாராயணரெட்டி என்பவரது மனைவி அர்ச்சனா (வயது 26) என்பவர் கடந்த 30-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
அவர் எங்கே சென்றார் என்பது குறித்து அந்த விதமான தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது கணவர் நாராயணரெட்டி மத்திகிரி போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மயமான அர்ச்சனாவை தேடி வருகின்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 30-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவர் எங்கே சென்றார் என்பது குறித்து அந்த விதமான தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து அவரது தந்தை மார்ட்டின் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- மகளிர் சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை அமைச்சர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கூட்டுறவுத்துறை சார்பாக 1046 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.42 கோடியே 44 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம் திட்ட விளக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி பேசியதாவது:-
கூட்டுறவு நிறுவனங்கள் முலம் வழங்கப்பட்டு, கடந்த மார்ச் 31ம் தேதியில் நிலுவையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு மாநிலம் முழுவதும் அசல் ரூ.2459 கோடியே 57 லட்சமும், வட்டி ரூ.215 கோடியே 7 லட்சமும் என மொத்தம் ரூ.2,674 கோடியே 64 லட்சம் தள்ளுபடி செய்து அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 1046 மகளிர் குழுக்களை சேர்ந்த 10,159 மகளிர் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு கடந்த மார்ச் 31ம் தேதியில் நிலுவையில் இருந்த அசல் ரூ.38 கோடியே 32 லட்சமும், வட்டி ரூ.4 கோடியே 12 லட்சமும் என மொத்தம் ரூ.42 கோடியே 44 லட்சம் மதிப்பில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தகுதிவாய்ந்த குழுக்களுக்கும் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தள்ளுபடி சான்று விரைந்து வழங்கப்படும். தள்ளுபடி கிடைக்கப்பட்ட அனைத்து குழுக்களுக்கும் மீண்டும் கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியின் போது, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சுந்தரம், செல்வம், முன்னாள் எம்எல்ஏ,. செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மத்திய கூட்டுறவு வங்கி மேலா ளர்கள், கூட்டுறவு த்துறை சார் பதிவாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் செயலா ளர்கள், பதிவாளர்கள் கலந்துகொண்டனர்.
- கலந்துரையாடல் மற்றும சிறுதானிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- உழவர் உற்பத்தியாளர் குழு முன்னேறுவதற்கான தேவவயான வழிமுறைகள் கூறினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் பொருட்டு, விவசாயிகள் உற்பத்தி குழுவுடன் கலந்துரையாடல் மற்றும சிறுதானிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியை பேராசிரியர் மற்றும் தலைவர் பரசுராமன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசுகையில், வேளாண் உற்பத்தி குழுவில் உள்ள உறுப்பினர்கள், தங்களுக்கு தேவையான தொழில்நுட்பகளை 2023 உலக சிறுதானிய ஆண்டாக உள்ளதால், சிறுதானியம் சாகுபடி செய்வதோடல்லாமல் அதனை மதிப்பு கூட்டி அதிக லாபம் பெற வேண்டும் என்றார்.
கூட்டத்தில், வேளாண்மை அறிவியல் முதுநிலை விஞ்ஞானி மற்றும் முன்னாள் தலைவர் சுந்தர்ராஜ் பங்கேற்று, வேளாண் பெருமக்கள் இயற்கை வேளாண்மையை கடைபிடிக்க வேண்டும். குறைந்த அளவு ரசாயனத்தை பயன்படுத்த வேண்டும். உழவியல் பேராசிரியர் சிவக்குமார் கலந்துகொண்டு, உழவர் உற்பத்தியாளர் குழு முன்னேறுவதற்கான தேவவயான வழிமுறைகள் கூறினார்கள்.
மண்ணியல் இணை பேராசிரியர் சங்கீதா கலந்துகொண்டு, மண்வளத்தை பாதுகாத்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும் என்றார்.
விஞ்ஞானி பூமதி, சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பற்றி விவரித்தார்கள். மேலும், இந்நிகழ்ச்சியில், உற்பத்தி குழுவில் செயல் அலுவலர் சிலம்பரசன் மற்றும் தலைவர் பெரியண்ணன் கலந்துகொண்டு, ஸ்ரீமதி உழவர்கள் உற்பத்தி குழுவின் ஆண்டு அறிக்கையை விவரித்தனர்.
- விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதையொட்டி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
- வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்திட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 2022-23ம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதையொட்டி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-23 என்ற பெயரில், மாநிலம் முழுவதும் வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி தாங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கும் வகையி, மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்கவிரும்பும் வீரர், வீராங்கனைகள் தங்கள் பெயரினை இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்திட வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.1000 மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் கபடி, கூடைப்பந்து, கையுந்து பந்து முதல் பரிசு ரூ.36 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.24 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரம், கால்பந்து, ஹாக்கி போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.54 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.36 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.18 ஆயிரம் வீதம் ஒவ்வொரு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
மேற்கண்ட போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703487 மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பெற்றிடலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
- மஞ்சள் அறுவடைக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
- வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் மஞ்சள் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் அறுவடைக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதில் போச்சம்பள்ளி, பண்ணந்தூர், பெரிய புளியம்பட்டி, மைலம்பட்டி, பெரமகவுண்டனூர், கண்ணுகானூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மஞ்சள் பயிரிட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
சூரிய பொங்கல் , மாட்டுப் பொங்கல் மற்றும், காணும் பொங்கலின்போது வைக்கப்படும் படையலில் கரும்பு, பூசணி, மொச்சை அவரை இவைகளுடன், முக்கிய பொருளாக பச்சை செடியுடன் மஞ்சள் வைத்து, பொங்கலிட்டு கடவுளை வழிபாடு செய்வது தமிழர்களின் வழக்கம்.
இதனால் இப்பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் ஓரிரு நாட்களில் அறுவடை செய்து, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்க, விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
மேலும் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர்.
மேலும் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மஞ்சள் விலை கடுமையாக குறைந்த நிலையில் இந்த ஆண்டு விவசாயிகள் எதிர்ப்பார்க்கும் விலை கிடைக்கும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.






