என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • குறைதீர் கூட்டத்திலேயே விண்ணப்பங்கள் இல்லாமல் உபகரணங்களை வழங்க வேண்டும்.
    • காலதாமதம் இன்றி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். நேற்று இந்த கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்க வந்த பார்வையற்ற மாற்று திறனாளிகள் கூறியதாவது:-

    அரசு சார்பில் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு கண்ணாடிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க ப்படுகின்றன.ஆனால் அதற்கு விண்ணப்பம் நிரப்பி கொடுக்க வேண்டியுள்ளது. எங்களால் அதை நிரப்ப முடியாது என்பதால் மற்றவர்கள் உதவியை நாடவேண்டியுள்ளது.

    மேலும் இந்த விண்ணப்பங்களை நிரப்பி தர சிலர் ரூ.20 முதல் ரூ.50 வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்துகொடுத்து அவற்றை பரிசீலித்து பொரு ட்கள் வழங்கப்படுகின்றன.

    இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே திங்கள்கிழமைகளில ்நடைபெறும் குறைதீர் கூட்டத்திலேயே விண்ணப்பங்கள் இல்லாமல் உபகரணங்களை வழங்க வேண்டும்.

    இவ்வாறு பார்வையற்ற மாற்று திறனாளிகள் கூறினர்.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட பார்வையற்ற மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரி செண்பகவள்ளி கூறுகையில் விண்ண ப்பங்கள் பெறுவதன் மூலம் பயனாளிகளின் பட்டியலை பராமரிப்பது எளிதாகும்.

    ஆதார் உள்ளிட்ட வைகளை பெறுவதால் பயனாளிகளை அடையாளம் காணுவதும் எளிதாகும். அவர்களுக்கு காலதாமதம் இன்றி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    • மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
    • இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டரை பறிமுதல் செய்து மீட்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள கொடமண்டபட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 45).

    இவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்த போது மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

    வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து தங்கவேல் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தங்கவேல் வீட்டில் கைவரிசை காட்டியது சேகர் (எ) சொட்ட சேகர், குமார் (எ) புட்டன் குமார் என்பது தெரிய வந்தது.

    இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டரை பறிமுதல் செய்து மீட்டனர்.

    • சிறுவர்கள் கல்லை கொண்டு தேன் கூடுகள் மீது வீசியுள்ளனர்.
    • பத்திற்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகேயுள்ள தொப்படிகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரது வீட்டின் முன்பு பழமையான புளியமரம் இருந்துள்ளது.

    இந்த புளியமரத்தில் கடந்த சில மாதங்களாக தேனீக்கள் கூடுகட்டி வசித்து வந்துள்ளது. இந்த தேனீ கூடுகள் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் கல்லை கொண்டு தேன் கூடுகள் மீது வீசியுள்ளனர்.

    இதில் கூடுகள் கலைந்து பறக்க ஆரம்பித்த தேனீக்கள் அருகிலிருந்தவர்களை கொட்ட ஆரம்பித்தது. இதில் முனுசாமி மற்றும் அவர்களது குடும்பத்தாரை கடித்துள்ளது.

    இதில் படுகாயடைந்த நான்கு பேரும் அலறியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அவர்களை காப்பாற்ற வந்த முதியவர் மகேந்திரன் என்பவரையும் தேனீக்கள் கடித்தன. பின்னர் அருகே இருந்த பத்திற்கும் மேற்பட்டோரையும் கடித்தன.

    இதில் காயடைந்த அனைவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு இருசக்கர வாகனங்களில் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சந்தூர் அருகே பத்திற்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

    • பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்து தொடர் ஆய்வு நடந்தது.
    • நகர்புறத்தில் 243 வீடுகளும், கிராமபுறங்களில் 264 வீடுகள் என மொத்தம் 507 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட வீரப்பநகரில் நேற்று மாவட்ட புள்ளியியல் துறை சார்பில், பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்து தொடர் ஆய்வு நடந்தது.

    இந்த பணிகளை புள்ளியியல் ஆய்வாளர்கள் கிருத்திகா, பார்த்திபன் ஆகியோர் மேற்கொண்டனர். இந்த பணிகளை மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குநர் குப்புசாமி ஆய்வு செய்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஆய்வு தமிழகத்தில் புள்ளியியல் துறை மற்றும் எம்.ஐ.டி.எஸ். எனப்படும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

    தமிழகத்தில் நகர்புறம், கிராமபுறங்களில் 20,539 வீடுகள் மக்களின் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு 12,632 வீடுகளில் ஆய்வு முடிவடைந்துள்ளது.

    மீதமுள்ள 7,907 வீடுகளில் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்புறத்தில் 243 வீடுகளும், கிராமபுறங்களில் 264 வீடுகள் என மொத்தம் 507 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதில், நகர்புறத்தில் 95, கிராமபுறத்தில் 126 வீடுகளில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளில் மக்களின் குடும்ப சூழ்நிலை, வறுமை, வேலைவாய்ப்பு, மருத்துவ செலவு, கல்வி, உணவு செலவு மற்றும் பிற அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

    தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆய்விற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிசையிட்டு மழை, வெயிலில் ஆபத்தான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
    • குடியிருப்பில் குடியிருக்காமல் அருகே உள்ள தேவாலயத்தின் முன் பகுதியில் இரவு தங்கி கொள்வதாக கூறினர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி பகுதியான ராயக்கோட்டை-ஒசூர் சாலை ஒரமாக இருளர் இனத்தவர்கள் 300 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த 19 வருடத்திற்கு முன்பு 20 தொகுப்பு குடியிருப்புகளை அரசு சார்பில் கட்டி கொடுத்தனர். அந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    தற்போது பல குடியிருப்புகள் பழுதாகி குடிருப்பு கூரையின் மேல் பகுதியில் உள்ள கான்கிரீட் பெயந்து இடிந்து விழும்நி லை உள்ளதால் அந்த குடியிருப்பில் குடியிருக்காமல் அருகே உள்ள தேவாலயத்தின் முன் பகுதியில் இரவு தங்கி கொள்வதாக கூறினர்.

    மேலும் தற்போது குடும்பங்கள் பெருகிவிட்டதால் அப்பகுதியிலே சிறிய, சிறிய குடிசையிட்டு மழை, வெயிலில் ஆபத்தான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

    இதை அறிந்த உத்தன ப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த் நேரில் சென்று பார்வை யிட்டு அரசு அதிகாரிகளுக்கு நிறை, குறைகளை எடுத்து கூறி ஆவண செய்வதாக கூறி உள்ளார். 

    • 3 லட்சத்து 56 ஆயிரத்து 606 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது.
    • கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி காட்டிநாயனப் பள்ளி ஊராட்சி அருந்ததியர் காலனியில், மேம்பட்ட உலகளாவிய உற்பத்தி தொழில்நுட்பங்கள் (ஏ.ஜி.எம்.டி.) திட்டத்தின் கீழ், 9 லட்சத்து 50 ரூபாய் ரூபாய் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது.

    அதே போல் இதே திட்டத்தில், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி ஆர்.பூசாரிப்பட்டி கிராமத்தில், 3 லட்சத்து 56 ஆயிரத்து 606 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார்,

    ஒன்றிய துணை செயலாளர் கலாகுமரேசன், ஆவின் துணை செயலாளர் அருணாசலம், மாணவரணி ஒன்றிய செயலாளர் முருகன், முன்னாள் கவுன்சிலர் அசோகன், ஒன்றிய துணை செயலாளர் சரவணன், ஒன்றிய பொருளாளர் சரவணன், பெரியமுத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணகுமார், வேலன், ஊர்கவுண்டர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள் சத்யா, சூர்யா, குமாரி, அலமேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
    • இந்த விவகாரத்தில் அக்ஸா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ்மல். இவர் தற்போது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள உளிபெண்டா பகுதியில் தாகி வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் அக்ஸா (வயது 17). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் அக்ஸா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணேஷ்மல் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தேன்கனி கோட்டை அருகேயுள்ள டி. புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி காளியப்பன் என்பவர் குடிபழக்கத்தை வீட்டில் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகள் மோனிஷா தந்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனரக லாரிகளை சுமார் 3கி.மீ. தூரத்திற்கு சாலையோரமாக அணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.
    • இரு தரப்பும் பிடிவாதமாக நடத்தி வரும் தொடர் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேன்கனிகோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கொரட்டகிரி கிராமத்தில் உள்ள 7 கல்குவாரி கனரக வாகனங்கள் ஊருக்குள் செல்ல கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடிய நிலையில் கிராமத்திற்குள் கல்குவாரி லாரிகள் செல்ல உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆனாலும் கிராம மக்கள் லாரிகளை அனுமதிக்க மறுத்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் 2,000 பேர் உண்ணாவிரத போரட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    கொரட்டகிரி கிராமத்திற்கு முன்பாக கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களது கனரக லாரிகளை சுமார் 3கி.மீ. தூரத்திற்கு சாலையோரமாக அணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.

    இரு தரப்பும் பிடிவாதமாக நடத்தி வரும் தொடர் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
    • சொர்க்கவாசல் வழியாக வரதராஜ பெருமாள் வெளி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    தருமபுரி, 

    தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தருமபுரி கோட்டை பரவாசு தேவ சுவாமி கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

    பூக்கலால் அலங்க ரிக்கபட்ட பல்லக்கில் பரவாசுதேவர் தம்பதி சமேத பரமபத சொர்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவாறு நீண்ட வரிசையில் சென்று பரவாசுதேவ சுவாமியை வனங்கி வழிபட்டனர்.

    அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கபட்டது.

    தருமபுரி சுற்றுள்ள கிராமங்களில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர்.

    சொர்க்க வாசல் திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் இந்து சமய அறநிலைய துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல காரிமங்கலத்தில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    காரிமங்கலம் கடைவீதி, அக்ரஹாரம் லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை, 3.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.

    பின்னர் 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து அருள் பெற்று சென்றனர்.

    மேலும் இன்று மாலை 6 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும், நாளை துவாதசி சிறப்பு பூஜையும் நடக்கிறது.

    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவி ற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    அரூர்

    அரூர் பரசுராமன் தெருவில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

    ஆண்டுதோறும் பிரதானமாக இருப்பது வைகுண்ட ஏகாதசி விழா. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

    இன்று அதிகாலை சொக்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் 5 மணிக்கு வரதராஜ பெருமாளுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றன.

    மேலும் சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் சாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    இதைத்தொடர்ந்து வரதராஜ பெருமாளை பக்தர்கள் தூக்கி கோவிலை சுற்றி வந்து சொர்க்கவாசல் வழியாக வரதராஜ பெருமாள் வெளி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    தருமபுரி மாவட்டம், அதகப்பாடி ஸ்ரீ லட்சுமி நாராயணா சுவாமி கோவில் சொர்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

    பூக்கலால் அலங்கரிக்கபட்ட பல்லக்கில் ஸ்ரீ லட்சுமி நாராயணார் தம்பதி சமித பரமபத சொர்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டவாறு நீண்ட வரிசையில் சென்று பரவாசு சுவாமியை வனங்கி வழிபட்டனர். அதனை தொடர்ந்து திருவீதி உலா நடைபெறுகிறது.

    அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கபட்டது. அதகபாடியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். 

    • ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
    • நோமல் திமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நோமல் திமாரி (வயது 29) .இவர் தனது உறவினர்கள் சிலருடன் ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று தனது இருசக்கர வாகனத்தில் முஹம்மத் இஸ்மாயில் என்பவருடன் பெங்களூரு-ஓசூர் சாலையில் ஜுஜுவாடி அருகேயுள்ள வங்கி ஒன்றின் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஓசூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த சண்முகம் என்பவர் மோதி விட்டார்.

    இதில் நோமல் திமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவருடன் வந்த முஹம்மத் இஸ்மாயில் காயமடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சிப்காட் போலிசார்விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள முதுகம்பட்டியை சேர்ந்த பழனி என்பவர் மோட்டார் சைக்கிளில் முனியப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தருமபுரி நகர போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • இந்த பணிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    தை பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி தை பொங்கலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,094 ரேஷன் கடைகளில் 5,58,934 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பொருட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று டோக்கன் வழங்க உள்ளனர்.

    மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1000 ஆகியவை வழங்கப்பட உள்ளது.

    தரமான அரிசி, 6 அடிக்கும் குறையாத கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆங்கில புத்தாண்டு முதல் நாளன்று கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டிக்கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் ராஜகணபதி நகரில் ஸ்ரீ ராஜகணபதி ஸ்ரீ வரசித்தி ஆஞ்சநேயசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு முதல் நாளன்று கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில், 65-ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி முன்னதாக சிறப்பு ஹோமங்களும், சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.

    பின்னர், சாமி முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த கடலைக்காய் குவியலுக்கு பூஜைகள் நடத்தி மகாதீபாராதனை செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கடலைக்காயை ஆஞ்சநேயர் மீது வீசி, நூதன வழிபாடு நடத்தி உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டிக்கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு, சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    விழாவில் கோவில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, முனிசந்திரா, ஜெய்சங்கர், மாமன்ற உறுப்பினர் குபேரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×