என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • போலீசார் அந்த வாலிபரை பிடித்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் கவுசிக் (வயது21). இவர் அப்பகுதியில் உள்ள 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து கவுசிக்கை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    • இவள் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
    • இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே ஆசியா உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள காலேகுண்டா அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அல்தாமஸ். இவரது மகள் ஆசியா (வயது8). இவள் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே ஆசியா உயிரிழந்தார்.

    இது குறித்து ஓசூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இவர் ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தார்.
    • இதில் மூச்சு திணறி ராஜப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே கவுதாலம் பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா (வயது46). இவர் மீன்பிடிக்கும் தொழிலாளி. நேற்று இவர் ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரிக்குள் அவர் தவறி விழுந்தார். இதில் மூச்சு திணறி ராஜப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தார்சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
    • ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    ஓசூர், 

    ஓசூர் மாநகராட்சி 17-வது வார்டு பகுதியில், சிப்காட் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 கோடி மதிப்பில் சிப்காட் லால் ரோடு மற்றும் சிப்காட் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி பகுதியில் புதிதாக தார்சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    இதில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜா என்ற நாகராஜ், மண்டல குழு தலைவர்கள் ரவி, காந்திமதி கண்ணன், சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடாசலம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை தாங்கினார்.
    • மாவட்டத்தில் 20 லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான தேவைகள் உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பாக மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை தாங்கினார்.

    ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வந்தனா கார்க், மாவட்ட திட்டக்குழு பேராசிரியர் சீனிவாசன், உறுப்பினர் அமலோர் பாவந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை இயக்குனர்(தரம்) மருத்துவர் மீனாட்சி சுந்தரி, இணை இயக்குனர் மருத்துவர் சதீஷ்ராகவன் ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர். இதில், மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    மாவட்டத்தில் 20 லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான தேவைகள் உள்ளது.

    இதனால், தமிழக அரசு மக்களைத் தேடி அனைத்து வசதிகளும் சென்றடைய வேண்டும் என்கிற உயரிய நோக்கில் நமது மாவட்டத்தில் கெலமங்கலம், தளி, மத்தூர், காவேரிப்பட்டணம், சூளகிரி, மேகலசின்னம்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி மற்றும் ஓசூர் ஆகிய 10 வட்டாரங்களில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் கிராம சுகாதாரப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த கிராம சுகாதாரப் பேரவை மூலம் கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, மாவட்ட சுகாதார பேரவையில் விவாதிக்கப்பட்டு, மாநில சுகாதார பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ஆலோசனைகள் செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதே இதன் நோக்கமாகும்.

    நமது மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருந்திருந்தாலும் இன்னும் சில மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக கெலமங்கலம் போன்ற மலை கிராமங்களில் பிரசவம் மற்றும் அவசர சிகிச்சைக்கு போதிய கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது. இது போன்ற சுகாதார சேவைகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மட்டுமே முடிவு எடுத்து வந்தனர்.

    இந்த சுகாதார பேரவையின் மூலம் தங்களது பகுதிக்கு தேவையான சுகாதார வசதிகள் என்ன தேவை என்பதை மக்களால் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களும் அவர்களாலேயே இயற்ற ப்பட்டு, இப்பேரவையின் மூலம் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இதனை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, கலெக்டர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மக்களைத் தேடி மருத்துவம், டெங்கு மற்றும் மலேரியா எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி, தொழுநோய், எய்ட்ஸ் கட்டுப்பாடு, காசநோய், 181 மகளிர் ஹெல்ப்லைன், வளர் இளம் பருவத்தினருக்கான சுகாதார ஆலோசனை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

    • முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்தது.
    • கூலி தொழிலாளி நாராயணன் (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து பழங்கள் ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்றிரவு சென்னையை நோக்கி சென்று கொண்டு இருந்தது.

    அதில் ஒட்டுனர் மற்றும் 5 கூலி தொழிலாளிகள் பயணித்து வந்தனர். சின்னார் பகுதிக்கு வந்தபோது சரக்கு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் மினிலாரியின் மேல்பகுதியில் அமர்ந்து பயணம் செய்த சென்னை மாதவரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நாராயணன் (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    காயம் அடைந்த மேலும் 5 பேரை சூளகிரி போலீசார் மீட்டு அவர்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நாராயணனின் உடலை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்

    .


    • நாட்டின மீன் குஞ்சுக ளான கல்பாசு, சேல் ெகண்டை, கட்லா, ரோகு, மிர்கால் அடங்கிய மீன் குஞ்சுகளை விட்டனர்.
    • மீன்களை அழிவில் இருந்து காப்பாற்றவும், இன பெருக்கத்தை அதிகரிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது

    சூளகிரி,

     கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிஅருகேயுள்ள பீஜேப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பாத்த கோட்டா பகுதி தென்பண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ .3 லட்சத்து 20ஆயிரம் மதிப்பில் 1 லட்சத்து 60 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுக ளான கல்பாசு, சேல் ெகண்டை, கட்லா, ரோகு, மிர்கால் அடங்கிய மீன் குஞ்சுகளை விட்டனர்.

    பின்னர் கலெக்டர் இது குறித்து கூறிய போது நாட்டின மீன்களை அழிவில் இருந்து காப்பாற்றவும், இன பெருக்கத்தை அதிகரிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மண்டல மீன்வளம் மற்றும் துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் ரத்தினம், சூளகிரி தாசில்தார் அணிதா,பொது பணி துறை சிவசங்கர், ஆய்வாளர் கள் முருகேசன், மூத்து வினாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், பீர்ேஐப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா சுப்பிரமணி, துணை தலைவர் நவ்சாத், மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வந்தன.
    • லாரிகளை இயக்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து தங்களது போராட்டத்தை கிரஷர் லாரி உரிமையாளர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கொரட்டகிரி கிராமத்தில் 6 ஜல்லி கிரஷர் குவாரிகள் உள்ளன. கிரஷரில் கொரட்டகிரி கிராமம் வழியாக இருந்து எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வந்தன.

    குவாரிகளால் வீடுகள் விரிசல் ஏற்படுவதாகவும், சாலைகள், விலைநிலங்கள் பாதிப்படைவதாக எதிர்ப்பு தெரிவித்து கடந்த 8 மாதங்களாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் லாரிகள் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டன.

    இந்நிலையில் குவாரி உரிமையாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சென்னை உயர் நீதிமன்றம் கொரட்டகிரி கிராமம் வழியாக டிப்பர் லாரிகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி கலெக்டர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

    கடந்த 29-ம்தேதி கிரஷர் உரிமையாளர்கள் டிப்பர் லாரிகளை இயக்கிய போது மீண்டும் கிராம மக்கள் லாரிகளை இயக்கவிடாமல் தடுத்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி கடந்த ஐந்து நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கிரஷர் உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் சம்பங்கி,மாவட்ட செயலாளர் பிரேம்நாத், துணை செயலாளர் மது, சர்வேஸ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வேறு மாற்று வழியில் கிரஷர் லாரிகளை இயக்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து தங்களது போராட்டத்தை கிரஷர் லாரி உரிமையாளர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

    • 41 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • புதிய கதிரடிக்கும் களத்திற்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய் சாலை வசதிகள், பேருந்து நிழல் கூடம், சிமெண்ட சாலை அமைத்தல், மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் என மொத்தம் சுமார் 41 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வேப்பனப்பள்ளி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளருமான பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பச்சைமலை முருகன் கோவில் அருகில் ரூ. 3.5 லட்சத்தில் புதிய பேருந்து நிழல் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் நாச்சிகுப்பம் கிராமத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கதிரடிக்கும் களத்திற்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். பின்னர் நேரலகிரி கிராமத்தின் அருகே உள்ள கே.ஜி.எப். ஜங்ஷனில் ரூபாய் 3.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழல் கூடம் அமைக்க பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    • மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
    • மாணவரின் நிலை குறித்து மொபைல் ஆப்பில் பதிவு மேற்கொண்டு வருகின்ற னர்.

    சூளகிரி,

    சூளகிரி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வர் உத்தரவிற்கிணங்க பள்ளி செல்லா இடைநின்ற மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

    காளிங்காவரம் குடியிருப்பு பகுதியை சார்ந்த சிம்பல்திராடி, பஸ்தலப்பள்ளியில் பகுதியில் இப் பணியை தலைமையாசிரியர்கள் சண்முகம், ராஜேந்திரன், ஆசிரியர் பயிற்றுநர் வைத்தியநாதன், ஆசிரியர்கள் நிர்மலா, அனுராதா ஆகியோர் நேரடியாக களப்பயணம் மேற்கொண்டு பார்வையிட்டு மாணவரின் நிலை குறித்து மொபைல் ஆப்பில் பதிவு மேற்கொண்டு வருகின்ற னர்.

    தலைமையாசிரியர் சண்முகம் இப்பணி குறித்து கூறியபோது, கொரோனா காலத்தில் கல்வியை தொடர முடியாத மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறும், தங்கள் பகுதியில் பள்ளி செல்லா இடைநின்ற மாணவர்கள் எவரேனும் இருப்பின் பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அவர்களை பள்ளியில் சேர்க்க சம்மந்தப்பட்ட பள்ளிகளை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • இறந்த நாராயணனின் உடலை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து பழங்கள் ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்றிரவு சென்னையை நோக்கி சென்று கொண்டு இருந்தது.

    அதில் ஒட்டுனர் மற்றும் 5 கூலி தொழிலாளிகள் பயணித்து வந்தனர். சின்னார் பகுதிக்கு வந்தபோது சரக்கு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் மினிலாரியின் மேல்பகுதியில் அமர்ந்து பயணம் செய்த சென்னை மாதவரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நாராயணன் (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    காயம் அடைந்த மேலும் 5 பேரை சூளகிரி போலீசார் மீட்டு அவர்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நாராயணனின் உடலை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சந்திரனும், அவரது மகன், மகள் ஆகியோர் படுகாயத்துடன் காரின் இடி பாடுகளுக்குள் சிக்கி கிடந்தனர்.
    • விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது47). இவர் தனது மனைவி நாகரெத்தினா (42), மகள் சோவிதா (14), மகன் லட்சுமண சிவசுப்ரமணியன் (8) ஆகியோருடன் ஒரு காரில் கிருஷ்ணகிரி வந்து விட்டு நேற்று மீண்டும் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். காரை சந்திரன் ஓட்டி வந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை-கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் நாகரெத்தினா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். சந்திரனும், அவரது மகன், மகள் ஆகியோர் படுகாயத்துடன் காரின் இடி பாடுகளுக்குள் சிக்கி கிடந்தனர்.

    இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகரெத்தினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் மூலம் கார் சாலை ஓரமாக அப்புறப்படுத்தப்பட்டது.

    இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×