search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5.59 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு-கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்
    X

    5.59 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு-கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்

    • முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • இந்த பணிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    தை பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி தை பொங்கலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,094 ரேஷன் கடைகளில் 5,58,934 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பொருட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று டோக்கன் வழங்க உள்ளனர்.

    மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1000 ஆகியவை வழங்கப்பட உள்ளது.

    தரமான அரிசி, 6 அடிக்கும் குறையாத கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×