என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கி, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்.
ஓசூர் அ.தி.மு.கவினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து
- சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ஓசூர்,
ஓசூர் அ.தி.மு.க.வினர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், முன்னா ள் அமை ச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் ஓசூர் அ.தி.மு.க.வினர், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் அவரது வீட்டில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதில், மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர்.வாசுதேவன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story






