என் மலர்
கிருஷ்ணகிரி
- நகை கடையின் சுவற்றில் துளையிட்டு கடையில் இருந்த 25 கிலோ வெள்ளி மற்றும் 30 பவுன் தங்க நகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியில் திருப்பத்தூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேகர் என்பவருக்கு சொந்தமான நகை கடை உள்ளது.
நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த நகை கடையின் சுவற்றில் துளையிட்டு கடையில் இருந்த 25 கிலோ வெள்ளி மற்றும் 30 பவுன் தங்க நகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனை இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கடையின் உரிமையாளருக்கும், ஊத்தங்கரை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கொள்ளை நடந்த நகை கடையை பார்வையிட்டனர். இந்த கடையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நேற்று நடைபெற்றது.
- பேரூர்,பகுதி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நேற்று நடைபெற்றது.
ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, கிழக்கு பகுதி செயலாளர் ராஜி தலைமை தாங்கினார்.மாவட்ட துணை செயலாளர் கே.மதன், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன், முன்னாள் மாநகர செயலாளர் எஸ்.நாராயணன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.
இதில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, கட்சியின் செய்தி தொடர்பாளரும், வக்கீல் பிரிவு இணை செயலாளருமான பாபு முருகவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள்.
மேலும் தலைமைக்கழக பேச்சாளர்கள் கோவை புரட்சித் தம்பி, வெங்கட்ராமன் ஆகியோர் கூட்டத்தில் பேசினார்கள்.
இதில் ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர்,பகுதி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- விவசாயியின் நிலத்தில் இந்த பயிற்சி நடந்தது.
- மண் வளத்தின் முக்கியத்துவம் மற்றும் மண் சேகரிப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டுமாணவிகள், ஊரக வேளாண்மை பயிற்சி அனுபவத்திற்காக, மண் மாதிரி சேகரிப்பு பயிற்சி நடத்தினர்.
இதையொட்டி, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுக்கா சாமிசெட்டிப்பட்டி கிராமத்தில் பச்சையப்பன் என்ற விவசாயியின் நிலத்தில் இந்த பயிற்சி நடந்தது.
பயிற்சியில் வேளாண்மை கல்லூரியின் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் தையல்நாயகி, மற்றும் மாணவிகளான அக்ஷயா பச்சிகலா, கிருத்திலோஷ்னி, பூங்குழலி, பிரகதீஸ்வரி, பிரஷாந்தி மேகலா, பிரசுனா, ராகித்தியா, ரக்ஷனா, வெண்ணிலா, சரிதா, சவுஜன்யா ஆகியோர் விவசாயிகளுக்கு, "மண் வளத்தின் முக்கியத்துவம் மற்றும் மண் சேகரிப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.
- பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
- மறைக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு திட்ட விளம்பரம் மற்றும் அரசு கட்டிட அடிக்கல், அரசு பள்ளி கூட சுற்று சுவர்களில் ரசிகர் மன்றம், பிறந்த நாள், திருமணம்,ஆர்பாட்டம், கட்சி நிகழ்ச்சிகள் ,மரண அறிவிப்பு மற்றும் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
இதனால் அரசு சார்ந்த தகவல்கள் மறைக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் இது யார் தொடங்கி வைத்த கட்டிடம் என்ற வரலாறே மறைக்கப்படுவதாலும், கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் மறைக்கப்படுவதாலும் வெளியூர்,உள்ளுர் வாசிகளுக்கு எந்த தகவலும் தெரியாத நிலை உள்ளது.
இனி வரும் காலங்களில் சுவர் ஒட்டிகளை தடை செய்ய வேண்டும். விதிமீறி ஒட்டுபவர்கள் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- லோடு ஏற்றும் பணியில் செல்வகுமார் ஈடுபட்டிருந்தார்.
- செல்வகுமார் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (எ) இளையவன் (வயது 47). கிளீனராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று சப்பாநிபட்டி பகுதியில் லாரி ஒன்றில் லோடு ஏற்றும் பணியில் செல்வகுமார் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக செல்வகுமார் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில்கிடந்த செல்வகுமாரை தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து செல்வகுமாரின் அண்ணன் ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 5 மணி நேரம் வரை பயணித்து போனால்தான் பெங்களூருவை அடைய முடியும்.
- தனியார் நிறுவனம் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
ஓசூர்,
தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவிற்கு செல்லும் மக்களின் முக்கிய தலைவலி போக்குவரத்து நெரிசல்.
ஓசூர் வழியாக சாலையில் சென்றால் 3 முதல் 5 மணி நேரம் வரை பயணித்து போனால்தான் பெங்களூருவை அடைய முடியும். பெங்களுருவில் இருந்து விமானம் ஏற வேண்டும் என்றால் கூடுதலாக 5 மணிநேரம் முன்னரே புறப்பட வேண்டும்.
ஆனால் ஹெலிகாப்டர் மூலம் 20 நிமிடங்களில் போக முடியும் என்றால் மகிழ்ச்சி தானே? ஒரு தனியார் நிறுவனம் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
ஓசூரில் இருந்து பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் இந்த சேவை மற்றும் வரும் பயணிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை, புனே மற்றும் ஷீரடி இடையே முதல் ஹெலிகாப்டர் சேவைகளை தொடங்கிய இந்த நிறுவனம் தற்போது கர்நாடகா மாநிலத்தில் கூர்க், ஹம்பி மற்றும் கபினி மற்றும் கோவாவிற்கு விரிவுபடுத்தியது.
தற்போது பெங்களூ ருவிற்கு வந்துள்ளது. முதல் கட்டமாக தற்போது காலையில் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து, ஓசூர் நகரத்திற்கும் மாலையில் ஓசூரில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கும் சேவைகள் தொடங்கப்படுகிறது.
சாலையில் 3 மணிநேரம் பயணிக்க வேண்டிய தூரத்தை இந்த ஹெலிகாப்டர் சேவையின் மூலம் 20 நிமிடங்களுக்குள் அடையலாம்.
வணிக ரீதியில் பயணத்தில் ஈடுபடும் ஒருவருக்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.பயணத்தில் பல மணிநேரங்களை இது மிச்சப்படுத்தும்.மேலும் குறைந்த செலவில் ஹெலிகாப்டரில் பயணிக்க விரும்பும் மக்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இந்த ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஒரு நபருக்கு 6000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
- விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
- கணக்காளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை, கிருஷ்ணகிரி வட்டார வளமையம் மற்றும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
இதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சீனிவாசன், தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக், பள்ளியின் தலைமை ஆசிரியர் சூசைநாதன், ஆசிரியர் பயிற்றுநர்கள், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலம் குப்பம் சாலை, மீன் மார்கெட், நேதாஜி சாலை வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. அப்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியதுடன், கல்வி கற்க வயது தடையில்லை. 15 வயதிற்கு மேல் கல்வி கல்லாதோர் இத்திட்டத்தில் சேரலாம். ஆண்கள், பெண்கள் சேர்ந்து பயன்பெறலாம். சிறந்த தன்னார்வலர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
ஆண்டு இறுதியில் கற்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். கற்போருக்கு ஏற்ற இடத்தில், ஏற்ற நேரத்தில் வகுப்புகள் நடத்தப்படும். நம் நாட்டில் கல்லாதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
- யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருவது வழக்கம்.
- போடிச்சி ப்பள்ளி, ஜக்கேரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர்.
தேன்கனிகோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருவது வழக்கம்.
ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரும் இந்த யானைகள் 4 மாதங்கள் இந்த பகுதியில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இதேபோல இந்த ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டு இருந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் முகாமிட்டிருந்த யானைகள் 2 குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் சானமாவு காட்டிற்கு வந்தன.
குட்டிகளுடன் 56 யானைகள் சானமாவு காட்டில் முகாமிட்டு பகல் நேரத்தில் வனப்பகுதிக்கு ள்ளும், இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களு க்குள் சென்று பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் சானமாவு காட்டில் முகாமிட்டு இரு ந்த யானைகளையும் ஓசூர் வனச்சரகர் ரவி தலைமை யில் வன ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் தேன்கனி க்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து யானைகள் போடிச்சி ப்பள்ளி, ஜக்கேரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த யானைகள் குட்டி களுடன் அடர்ந்த வனப்பகு திக்குள் சென்றன. தற்போது ஓசூர் சானமாவு காட்டில் ஒரு யானை மட்டும் உள்ளது.
அந்த யானையையும் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஓசூர் சானமாவு காட்டில் ஒரு யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் வனப்ப குதிக்குள் ஆடு, மாடுகளை மேய்க்க செல்ல வேண்டாம் என்றும், விறகுகளை எடுக்க செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
- வெற்றி பெறும்அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், 2022-2023 என்ற பெயரில், மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப்பிரிவு ஆண்கள், பெண்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து, கையுந்து பந்து கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, கபடி, சிலம்பம், தடகளம், தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. 17 முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, கபடி, சிலம்பம், தடகளம், தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடக்கிறது. மாற்றுத்திறனாளி ஆண்கள், பெண்களுக்கு, ஓட்டம், இறகுப்பந்து, எறிபந்து, கபடி ஆகிய போட்டிகள் நடக்கிறது.
அரசு ஊழியர்கள் ஆண்கள், பெண்களுக்கு கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ் ஆகிய போட்டிகள் நடக்கிறது. அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் தங்கள் பெயரை ஆடுகளம் என்ற இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.அதன்பின்னர் முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்திட வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்ய வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். வெற்றி பெரும் அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாவட்ட விளையாட்டு அரங்கில் 26-ந் தேதி நடைபெறுகிறது.
- ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி,
நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 26-ந் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், உதவி கலெக்டர் சதீஷ்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இந்த சேவைக்காக 80 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
- திட்ட மதிப்பீட்டு அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லகுமார் எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரியில் கடந்த 1942-ம் ஆண்டு வரையில் ரெயில் சேவை இருந்தது. பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த சேவைக்காக 80 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம் தொடர்ந்து கொடுத்த மனுக்களின் காரணமாக தற்போது இந்த திட்டத்திற்கு திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்ய ரூ.2.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
மேலும் இந்த திட்டத்தை 101கிலோ மீட்டர் இருந்ததை 98 கிலோ மீட்டராக குறைக்கவும் திட்டம் வழங்கப்பட்டது. மேலும் 7.75 கிலோ மீட்டர் குகை பாதையை முக்கால் கிலோ மீட்டராக குறைக்கவும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 46 கோடியாக இருந்த திட்ட
மதிப்பீட்டு தொகை ரூ.1,496 கோடியாக குறைக்கப்பட்ட உத்தேச திட்ட மதிப்பீடு அறிக்கை ரெயில்வே நிர்வாகத்திடம் நாங்கள் கொடுத்துள்ளோம்.
ஜோலார்பேட்டை- குப்பம்- பெங்களூர் ரெயில்வே பாதையில் கூட்டங்கள் அதிகரித்தாலோ, அல்லது இயற்கை சீற்றங்களால் விபத்து ஏற்பட்டாலோ, மாற்றுவழிப்பாதையாக கிருஷ்ணகிரி வழியாலான ரெயில்பாதை திட்டம் அமையும்.
இதனால், 20 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே அதிகமாகும்.
இந்த திட்டத்திற்கு திட்ட மதிப்பீட்டு அறிக்கைக்கு டெண்டர் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஜனவரி 2-ந் தேதி ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி-ஓசூர் ரெயில் பாதை திட்டத்திற்கு திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக சர்வே, வரைபடங்களுடன் இறுதி மதிப்பீட்டு பணிகள் தொடங்கி உள்ளது. 3 மாதத்தில் இந்த பணிகள் முடிந்து இறுதி செய்யப்பட்ட திட்ட மதிப்பீட்டு அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்படும்.
அதன்படி வருகிற பட்ஜெட்டிலோ அல்லது அடுத்த பட்ஜெட்டிலோ கிருஷ்ணகிரி ரெயில் பாதை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் ஜேசுதுரை மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
- அடுத்தடுத்து 3 பேர் மாடு முட்டியதில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சென்றாயன் கவுண்டனூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). விவசாயி. இவர் ஊர்கவுண்டராக இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த கிராமத்தின் அருகே உள்ள புலியரசி கிராமத்தில் கடந்த 17-ந் தேதி எருது விடும் விழா நடந்தது. அதை பார்க்க ராமசாமி சென்றார்.
அந்த நேரம் ஓடி வந்த மாடு ஒன்று ராமசாமியை முட்டி தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி நேற்று இறந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 17-ந் தேதி வேப்பனப்பள்ளி அருகே ராமச்சந்திரம் கிராமத்தில் மாடு முட்டியதில், ராஜி (72) என்ற மூதாட்டி படுகாயம் அடைந்து இறந்தார். அதன் தொடர்ச்சியாக அதே நாளில் வி.மாதேப்பள்ளியில் எருது விடும் விழாவில் மாடு முட்டியதில், நாடுவனப்பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் பவன்குமார் (11) பரிதாபமாக இறந்தான்.
அதே போல தற்போது புலியரசியில் மாடு முட்டியதில் விவசாயி ராமசாமி பலியாகி உள்ளனர். வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து 3 பேர் மாடு முட்டியதில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






