என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டை-ஓசூர் இடையே ரெயில் பாதை -செல்லகுமார் எம்.பி. தகவல்
    X

    ஜோலார்பேட்டை-ஓசூர் இடையே ரெயில் பாதை -செல்லகுமார் எம்.பி. தகவல்

    • இந்த சேவைக்காக 80 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
    • திட்ட மதிப்பீட்டு அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லகுமார் எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரியில் கடந்த 1942-ம் ஆண்டு வரையில் ரெயில் சேவை இருந்தது. பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த சேவைக்காக 80 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

    இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம் தொடர்ந்து கொடுத்த மனுக்களின் காரணமாக தற்போது இந்த திட்டத்திற்கு திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்ய ரூ.2.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    மேலும் இந்த திட்டத்தை 101கிலோ மீட்டர் இருந்ததை 98 கிலோ மீட்டராக குறைக்கவும் திட்டம் வழங்கப்பட்டது. மேலும் 7.75 கிலோ மீட்டர் குகை பாதையை முக்கால் கிலோ மீட்டராக குறைக்கவும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 46 கோடியாக இருந்த திட்ட

    மதிப்பீட்டு தொகை ரூ.1,496 கோடியாக குறைக்கப்பட்ட உத்தேச திட்ட மதிப்பீடு அறிக்கை ரெயில்வே நிர்வாகத்திடம் நாங்கள் கொடுத்துள்ளோம்.

    ஜோலார்பேட்டை- குப்பம்- பெங்களூர் ரெயில்வே பாதையில் கூட்டங்கள் அதிகரித்தாலோ, அல்லது இயற்கை சீற்றங்களால் விபத்து ஏற்பட்டாலோ, மாற்றுவழிப்பாதையாக கிருஷ்ணகிரி வழியாலான ரெயில்பாதை திட்டம் அமையும்.

    இதனால், 20 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே அதிகமாகும்.

    இந்த திட்டத்திற்கு திட்ட மதிப்பீட்டு அறிக்கைக்கு டெண்டர் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஜனவரி 2-ந் தேதி ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி-ஓசூர் ரெயில் பாதை திட்டத்திற்கு திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக சர்வே, வரைபடங்களுடன் இறுதி மதிப்பீட்டு பணிகள் தொடங்கி உள்ளது. 3 மாதத்தில் இந்த பணிகள் முடிந்து இறுதி செய்யப்பட்ட திட்ட மதிப்பீட்டு அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்படும்.

    அதன்படி வருகிற பட்ஜெட்டிலோ அல்லது அடுத்த பட்ஜெட்டிலோ கிருஷ்ணகிரி ரெயில் பாதை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் ஜேசுதுரை மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×