என் மலர்
கிருஷ்ணகிரி
- புளிய மரத்தில் ஏறி கோபாலப்பா புளியம்பழம் பறித்துள்ளார்.
- தகராறில் ஈடுபட்டுள்ளார் பின்னர் கையாலும், கற்களாலும் தாக்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள சி.ஆர். பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலப்பா. இவரது அண்ணன் ஜெய்கிருஷ்ணப்பா.
இவர்களுக்கு சொந்தமான புளிய மரத்தில் ஏறி கோபாலப்பா புளியம்பழம் பறித்துள்ளார். இதை அவரது அண்ணன் கண்டித்து பறிக்க கூடாது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் கையாலும், கற்களாலும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கோபாலப்பா தேன்கனி கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
து குறித்து கோபாலப்பா தந்த புகாரின்பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய் கிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.
- உறவினர் பழனிசாமி என்பவரது வீட்டில் தங்கி இருந்தார்.
- வெளியில் சென்ற குமரேசன் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
கிருஷ்ணகிரி,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள ராசி கவுண்டனூரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 24).
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கருக்கம்பட்டியில் உள்ள தனது உறவினர் பழனிசாமி என்பவரது வீட்டில் தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று தனது செலவுக்கு பணம் வேண்டும் என்று பழனிசாமியிடம் குமரேசன் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று பழனிச்சாமி கூறியுள்ளார்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியில் சென்ற குமரேசன் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
இது குறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான குமரேசனை தேடி வருகின்றனர்.
- சில ஆண்டுக்கு முன்பே இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
- கலெக்டர் தீபக் ஜேக்கப் கடந்த 21-ம் தேதி நேரில் வந்து பார்வையிட்டார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், கோனேரி பள்ளி ஊராட்சி, குண்டு குறுக்கி சுற்று வட்டார பகுதி யில் மூன்றாவது சிப்காட் அமைக்க சில ஆண்டுக்கு முன்பே இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை குருபராத்தப் பள்ளியில் இருந்து குண்டு குறுக்கி செல்லும் சாலை மிக பழுதாகி இருந்தது. இதனை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கடந்த 21-ம் தேதி நேரில் வந்து பார்வையிட்டார்.
சிப்காட் பகுதியையும் பார்வையிட்டு தற்போது இந்த சாலையை தரமான சாலையாக அமைத்து தரவேண்டும் என மாவட்ட பொறியாளர் மாதுவையும், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கோபாலகிருஷ்ணன் பொறியாளர்கள் சுமதி சியாமளா ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
உடன் கோனேரிப் பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோபம்மா சக்கரளப்பா, துணைத் தலைவர் புஷ்ப்பராஜ், மேற்பார்வையாளர்கள் சிற்றரசு, மற்றும் ஊராட்சி செயலாளர் விஜி மற்றும் பலர் இருந்தனர்.
இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ரூ.98 லட்சத்து 850 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஓதுக்கிடு செய்து சில தினத்தில் தார்சாலை அமைத்து தந்ததால் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- நோட்டுப் புத்தகம், திருக்குறள் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.
- தலைமை ஆசிரியர் ரத்தினவேல் தலைமை தாங்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் சந்திரப்பட்டி பஞ்சாயத்து வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இருளர் இன மாணவ ர்களுக்கு கல்வி உபகரண ங்கள் நோட்டுப் புத்தகம், திருக்குறள் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினவேல் தலைமை தாங்கினார்.
இதில் அண்ணாமலை, ராமு, கீதா, சத்தியவாணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, துணைத்தலைவி சரண்யா, இல்லம் தேடி கல்வி ஆசிரியர் சரண்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பள்ளி ஆசிரியை நதியா நன்றி கூறினார்.
- மதுபான பாக்கெட்டுகள் குவியல், குவியலாக அழிக்கப்பட்டன.
- குழி தோண்டி அதில் மதுபானங்களை கொட்டியும், காலி பாக்கெட்டுக்களும் புதைக்கப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு கைப்பற்றப்பட்ட கர்நாடக மதுபான பாக்கெட்டுகள் குவியல், குவியலாக அழிக்கப்பட்டன.
ஓசூர் அருகே சானமாவு பகுதியில் மினி வேன் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த மது பாக்கெட்டுகள், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சானமாவு கிராம நிர்வாக அலுவலர் வெண்மதி ஆகியோர் முன்னிலையில் உடைக்கப்பட்டு, பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி அதில் மதுபானங்களை கொட்டியும், காலி பாக்கெட்டுக்களும் புதைக்கப்பட்டன.
- தேர்திருவிழாவை முன்னிட்டு புதிய தேருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- சிறப்பு பூஜை செய்து, தேர்கட்டும் பணிகளை தொடங்கி வைத்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூன துர்கம் மலைக்கோவிலில் தேர்திருவிழாவை முன்னிட்டு புதிய தேருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூன துர்கம் மலைக்கோவி ல் தேர்த்திருவிழாவை யொட்டி, வருகிற 3-ம் தேதி கும்பாபிஷேகம், 4-ம் தேதி தேர்த்திருவிழா, 5-ம் தேதி எருதாட்டம் மற்றும் பல்லக்கு ஊர்வலம், வான வேடிக்கை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு புதிதாக செய்யப்பட்ட தேருக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. அர்ச்சகர்கள் அக்னி குண்டம் வளர்த்து, புதிய தேருக்கு சிறப்பு பூஜை செய்து, தேர்கட்டும் பணிகளை தொடங்கி வைத்தனர்.
விழாவில் கோயில் விழா கமிட்டியினர் மற்றும் அந்தேவனப்பள்ளி, குந்துக்கோட்டை, காரண்டப் பள்ளி ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- போட்டிகளில் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்களைவழங்கி கவுரவித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பர்கூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி மாணவர்கள் 60 பேர் கலந்து கொண்டனர். அதில் பொதுவான முறையில் யோகா, சிறப்பு வகையில் யோகா என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேளாங்கண்ணி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன், பள்ளியின் முதல்வர் மஞ்சுளா ஆகியோர் பாராட்டினார்கள்.
மேலும் முதலிடம் பிடித்த 10 மாணவர்களுக்கு கேடயமும், சான்றிதழும், 2-ம், 3-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயமும், சான்றிதழும் மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்க ங்களையும் வழங்கி மாணவர்களை கவுரவித்தனர்.
- ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், பொதுக்கூட்டங்களும் நடைபெற உள்ளது.
- தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான நாளை (புதன்கிழமை) கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், பொதுக்கூட்டங்களும் நடைபெற உள்ளது.
பர்கூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம் சார்பில், தளிஅள்ளி ஊராட்சியில் 70 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கப்படுகிறது.
போச்சம்பள்ளியில், 700 தூய்மைப் பணியாளர் களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் உள்ள கட்சி கொடி ஏற்றி, அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும் கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் கொடி ஏற்றி ரூ.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி, 700 மரக்கன்றுகள் நடும் விழாவும், கிட்டம்பட்டியில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தில் 700 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் 700 மரக்கன்றுகள் நடப்படுகிறது. இந்நிகழ்ச்சி களில், அனைத்து ஒன்றியம், நகரம், பேரூர் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
- ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.
இதில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 317 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 29 பேருக்கு ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வாழ்வாதாரம் மற்றும் மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினை பொருட்கள் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவு, உலர்பழங்கள் மற்றும் மசாலா பாக்கெட் விற்பனை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) செண்பகவள்ளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஓசூர் பகுதியில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.
- தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காமாட்சி (வயது 40). தற்போது ஓசூர் பகுதியில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த காமாட்சி வீட்டில் யாருமில்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது கணவர் முருகன் கொடுத்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மருதா னபள்ளி பகுதியை சேர்ந்த முத்தப்பா (54) என்பவர் அப்பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் மீன்பிடிக்க சென்றார். எதிர்பாரத விதமாக தவறி விழுந்த அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி அந்தோணி மேரி தந்த புகாரின்பேரில் தேன்கனி கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
- மகாதேவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியை சேர்ந்தவர் மகாதேவசாமி (வயது 26). இவர் தனது சொந்த வேலையாக கிருஷ்ணகிரிக்கு வந்தார்.
வழியில் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த மகேஷ் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் கார் ஷோரூம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளானது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மகாதேவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வண்டியை ஓட்டி வந்த மகேஷ் படுகாயம் அடைந்தார்.
அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஹட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்திருந்தார்.
- சிவன் மீது மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள பள்ளத்து கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சிவன் (வயது 31). இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்திருந்தார்.
இது தொடர்பாக அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலித்தபோது சிவன் தனது பிறந்த சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலி ஆவணம் தாக்கல் செய்தது தொடர்பாக சிவன் மீது மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






