என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய தேருக்கு சிறப்பு பூஜை
    X

    புதிய தேருக்கு சிறப்பு பூஜை

    • தேர்திருவிழாவை முன்னிட்டு புதிய தேருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சிறப்பு பூஜை செய்து, தேர்கட்டும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூன துர்கம் மலைக்கோவிலில் தேர்திருவிழாவை முன்னிட்டு புதிய தேருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூன துர்கம் மலைக்கோவி ல் தேர்த்திருவிழாவை யொட்டி, வருகிற 3-ம் தேதி கும்பாபிஷேகம், 4-ம் தேதி தேர்த்திருவிழா, 5-ம் தேதி எருதாட்டம் மற்றும் பல்லக்கு ஊர்வலம், வான வேடிக்கை நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு புதிதாக செய்யப்பட்ட தேருக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. அர்ச்சகர்கள் அக்னி குண்டம் வளர்த்து, புதிய தேருக்கு சிறப்பு பூஜை செய்து, தேர்கட்டும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் கோயில் விழா கமிட்டியினர் மற்றும் அந்தேவனப்பள்ளி, குந்துக்கோட்டை, காரண்டப் பள்ளி ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×