என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
- ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், பொதுக்கூட்டங்களும் நடைபெற உள்ளது.
- தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான நாளை (புதன்கிழமை) கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், பொதுக்கூட்டங்களும் நடைபெற உள்ளது.
பர்கூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம் சார்பில், தளிஅள்ளி ஊராட்சியில் 70 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கப்படுகிறது.
போச்சம்பள்ளியில், 700 தூய்மைப் பணியாளர் களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் உள்ள கட்சி கொடி ஏற்றி, அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும் கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் கொடி ஏற்றி ரூ.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி, 700 மரக்கன்றுகள் நடும் விழாவும், கிட்டம்பட்டியில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தில் 700 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் 700 மரக்கன்றுகள் நடப்படுகிறது. இந்நிகழ்ச்சி களில், அனைத்து ஒன்றியம், நகரம், பேரூர் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






