பாஸ்போர்ட் வாங்க போலி ஆவணம் தாக்கல் - வாலிபர் மீது வழக்கு

பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்திருந்தார்.சிவன் மீது மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாஸ்போர்ட் வாங்க போலி ஆவணம் தாக்கல் - வாலிபர் மீது வழக்கு
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள பள்ளத்து கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சிவன் (வயது 31). இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்திருந்தார்.

இது தொடர்பாக அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலித்தபோது சிவன் தனது பிறந்த சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலி ஆவணம் தாக்கல் செய்தது தொடர்பாக சிவன் மீது மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com