என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் சாதனை
    X

    பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் சாதனை

    • போட்டிகளில் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்களைவழங்கி கவுரவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் பர்கூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி மாணவர்கள் 60 பேர் கலந்து கொண்டனர். அதில் பொதுவான முறையில் யோகா, சிறப்பு வகையில் யோகா என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேளாங்கண்ணி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன், பள்ளியின் முதல்வர் மஞ்சுளா ஆகியோர் பாராட்டினார்கள்.

    மேலும் முதலிடம் பிடித்த 10 மாணவர்களுக்கு கேடயமும், சான்றிதழும், 2-ம், 3-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயமும், சான்றிதழும் மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்க ங்களையும் வழங்கி மாணவர்களை கவுரவித்தனர்.

    Next Story
    ×