என் மலர்
கிருஷ்ணகிரி
- 2 பேரும் மாந்தோப்பில் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டு இருந்தனர்.
- யானை துரத்தியதில் மாரி தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது45). அதே பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரி (40). முருகன் ஏற்கனவே இறந்து விட்டார்.
இதனிடையே உறவின ர்களான அண்ணாதுரையும், மாரியும் தூர்வாசனூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இரவு காவலாளிகளாக பணியாற்றி வந்தனர்.
இவர்கள் 2 பேரும் மாந்தோப்பில் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு யானை திடீரென தூங்கி கொண்டு இருந்த 2 பேரையும் தாக்கியது.
இதில் மாரி தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அண்ணாதுரை படுகாயம் அடைந்தார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அண்ணாதுரையை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானை தாக்கி பெண் இறந்த தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் இறந்த மாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம்தொ டர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாரிக்கு விஜியசாந்தி (19) என்ற மகளும், குள்ளன் (12) என்ற மகனும் உள்ளனர். தந்தை இறந்ததால் தாய் பராமரிப்பில் இருந்து வந்த இவரது மகள், மகன் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.
யானை தாக்கி பலியான மாரியின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதல்கட்டமாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து வனச்சரகர் பார்த்தசாரதி, மாரியின் மகள் விஜியசாந்தியிடம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
அப்போது ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார், வனவர்கள் சரவணன், செந்தில்நாதன், நாராயணன் மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து வனத்துறை யினர் ஒலிப்பெருக்கி மூலம் போடம்பட்டி, கெட்டூர், பூவத்தி, குருதட்டனூர், தொன்னமாரனூர், மூங்கில்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேரத்தில் மாந்தோப்புக்கு காவலுக்கு செல்லவேண்டாம். உடன் நாயை அழைத்து செல்லக்கூடாது. மேலும் விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
- நேற்று இவரது தந்தை ஏன் குடித்துவிட்டுவந்து தினமும் தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார்.
- சத்யராஜ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சத்யராஜ் (வயது23), இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதனால் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இவரது தந்தை ஏன் குடித்துவிட்டுவந்து தினமும் தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார்.
இதனால் மனவேதனையில் விரக்தி அடைந்த சத்யராஜ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அங்கன்வாடி மையங்களிலிருந்து வாங்கி சென்று கால்நடைகளுக்கு போடுவதும் தெரிந்தது.
- இரு மூட்டைகளிலும் இருந்த, 200 சத்துமாவு பாக்கெட்டுகளை சந்திரமோகன் கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவை விற்க முயன்றபோது பிடிபட்டது. கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும், ஆறு மாதம் முதல், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தமிழக அரசு வழங்கும் ஊட்டச்சத்து மாவு பாக்கெட் வழங்கப்படுவதில்லை என பரவலாக புகார் எழுந்தது. இருப்பினும் இது குறித்து எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள அங்கன்வாடியிலிருந்து அதே பகுதியை சேர்ந்தவர்கள், இரு மூட்டைகளில் சத்துமாவு பாக்கெட்டை வாங்கி சென்றனர்.
அப்போது அவ்வழியாக சென்ற சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்க மாநில பொதுசெயலாளர் சந்திரமோகன் அவர்களை தடுத்து விசாரித்த போது தமிழக அரசின் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படும் சத்துமாவு என்பதும் அங்கன்வாடி மையங்களிலிருந்து வாங்கி சென்று கால்நடைகளுக்கு போடுவதும் தெரிந்தது.
இதையடுத்து இரு மூட்டைகளிலும் இருந்த, 200 சத்துமாவு பாக்கெட்டுகளை சந்திரமோகன் கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.ஏழை, எளிய குழந்தைகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் சத்துமாவை கள்ளத்தனமாக விற்பவர்கள் மீது இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேபோல் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் சத்துமாவும் முறையாக வழங்கப்படுவதில்லை என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
- சென்னை எக்ஸ்பிரஸ் வே நான்கு வழிசாலை, ஒசக்கோட்டை-பாலக்கோடு - தர்மபுரி நான்குவழிச்சாலை பணிகள் நடக்கிறது.
- கிருஷ்ணகிரி டோல்கேட் பயனற்ற நிலைக்கு தள்ளப்படும். கட்டண உயர்வால் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டோல்கேட்டை உடனடியாக அகற்ற கோரி கிருஷ்ணகிரி டவுன் லாரி மற்றும் மல்டி ஆக்ஸில் உரியை£ளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்தும், டோல்கேட்டை அகற்ற கோரியும் கிருஷ்ணகிரி டோல்கேட் முன் கிருஷ்ணகிரி டவுன் லாரி மற்றும் மல்டி ஆக்ஸில் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 55 டோல்கேட்களில், 29 டோல்கேட்களுக்கு கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 டோல்கேட்டுகளை காலாவதி ஆனதாக தமிழக அரசு கூறி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அப்படியிருக்க அந்த டோல்கேட்டுகளுக்கும் கட்டணம் உயர்த்தியதை கண்டிக்கிறோம். காலாவதியாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி டோல்கேட்டை அகற்ற வேண்டும். சென்னை எக்ஸ்பிரஸ் வே நான்கு வழிசாலை, ஒசக்கோட்டை-பாலக்கோடு - தர்மபுரி நான்குவழிச்சாலை பணிகள் நடக்கிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால் கிருஷ்ணகிரி டோல்கேட் பயனற்ற நிலைக்கு தள்ளப்படும். கட்டண உயர்வால் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவர். எனவே கிருஷ்ணகிரி டோல்கேட்டை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி டவுன் லாரி மற்றும் மல்டி ஆக்ஸில் உரிமையாளர்கள் சங்க செயலாளர் தண்டபாணி, டெம்போ உரிமையாளர்கள் சங்க தலைவர் டேவிட், ஆலோசகர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- கடந்த, 2021ல் அரசு மருத்துவக்கல்லூரி புதிய கட்டடம் திறக்கப்பட்டு, கடந்தாண்டு முதல் மருத்துவ சேவையும் தொடங்கப்பட்டது.
- மருத்துவக்கல்லூரி டீனாக நான்கு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக கடந்த, இரு மாதங்களுக்கு முன் ராஜஸ்ரீ என்பவர் நியமிக்கப்பட்டார். இவர், தற்போது திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த, 2021ல் அரசு மருத்துவக்கல்லூரி புதிய கட்டடம் திறக்கப்பட்டு, கடந்தாண்டு முதல் மருத்துவ சேவையும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், மருத்துவக்கல்லூரி டீனாக நான்கு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது நியமிக்கப்படும் மருத்துவக்கல்லூரி முதல்வரையாவது குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் பணியிட மாற்றம் செய்யாமல் இருந்தால் மட்டுமே திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியும் என மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.
- வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை விடுத்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க விளையாட்டு முக்கியமாகும்.
- விளையாட்டிற்கு முடிவு என்பதே இல்லை. வேலைக்குச் சென்றாலும் சிறிது நேரமாவது நேரம் ஒதுக்கி விளையாட வேண்டும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், விளையாட்டு தின விழா, கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத் தலைமை தாங்கினார். இதில் அதியமான் கல்விக்குழும நிறுவனர் டாக்டர் தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு வாழ்த்திப்பேசுகையில், வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை விடுத்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க விளையாட்டு முக்கியமாகும்.
விளையாட்டிற்கு முடிவு என்பதே இல்லை. வேலைக்குச் சென்றாலும் சிறிது நேரமாவது நேரம் ஒதுக்கி விளையாட வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் வாழ்க்கையும் ஆரோக்கியமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், சிறப்பு விருந்தி னராக உலககோப்பை கால்பந்து மற்றும் ஒலிம்பிக் போட்டி முன்னாள் நடுவர் சங்கர் கோமலேஸ்வரன் கலந்துகொண்டு பேசுகையில்,"ஒவ்வொரு துறை வெற்றிக்கும் விளை யாட்டே முக்கியமானதாகும்.
குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே விளையாட்டு என்பது இல்லை. மருத்துவரை விட விளையாட்டுத்துறையில் தான் அதிக வருமானம் உண்டு.
உடல் தகுதியிருந்தால் தான் மன ஆரோக்கியமாக இருக்கும். மன ஆரோக்கியமே வாழ்வின் வெற்றியாகும். மேலும், மாலை நேரங்களில் சிறிது நேரமாவது விளையாடுவது, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றார்.
விளையாட்டுத்துறை சார்பில், விளையாட்டுத் துறை இயக்குநர்கள் ஆண்டறிக்கை வாசித்து, மாணவர்கள் நிகழ்த்திய சாதனைகளைப் பட்டிய லிட்டு காட்டினர். தொடர்ந்து, மாநில அளவிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கப் பட்டன.
இதில், எம்.ஜி.ஆர்.கல்லூரி முதல்வர் முத்துமணி, அதியமான் தொழில் நுட்பக்கல்லூரி முதல்வர்கள், அனைத்துத் துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர். விழா விற்கான ஏற்பாடுகளை, கல்லூரி நிர்வாகம் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் செய்திருந்தனர்.
- நேற்றிரவு சோமநாதபுரம் மேம்பாலம் அருகே வந்த போது, சாலையின் நடுவே கிடந்த சக்கரத்தின் மீது லாரி ஏறியது.
- நிலை தடுமாறி, லாரி கவிழ்ந்து 30 ஆடுகளும் பலியாகின.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பாப்பா ரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (31). லாரி ஓட்டுநர். அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (32), ரமேஷ் (31). இவர்கள் மூவரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 30 ஆடுகளை விலைக்கு வாங்கி, ஒரு லாரியில், பாப்பாரப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு சோமநாதபுரம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையின் நடுவே கிடந்த சக்கரத்தின் மீது லாரி ஏறியது. இதில் நிலை தடுமாறி, லாரி கவிழ்ந்தது.
இந்த விபத்தில், லாரி ஓட்டுனர் சங்கர், நாகராஜ், ரமேஷ் ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. 30 ஆடுகளும் பலியாகின. இதனால், ஓசூர் - கிருஷ்ணகிரி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்த போலீசார், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்துக்குள்ளான லாரி, ஆடுகளை அப்புறப்படுத்தினர். போக்குவரத்தை சீர்படுத்தினர். இந்த விபத்து குறித்து, குருபரப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- சுங்கச்சாவடியில் வாகனங்கள் சென்று வருவதற்கான கட்டணம் இன்று (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
- இலகு ரக வணிக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், சிற்றுந்து ஒரு முறை பயணிக்க ரூ.140 (130), ஒருநாளில் ஒரு முறை சென்று திரும்ப ரூ.205 (195)
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச்சாவடி வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஓசூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றன.
அதே போல வட மாநிலங்களில் இருந்தும், பெங்களூரு, ஓசூரில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் சென்று வருவதற்கான கட்டணம் இன்று (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய கட்டணம் விவரம் வருமாறு (வாகனங்களுக்கான பழைய கட்டணம் அடைப்பு குறிப்புக்குள் காட்டப்பட்டுள்ளது):-
அதன்படி கார், ஜீப் வேன், இலகு ரக மோட்டார் வாகனம் ஒரு முறை பயணிக்க ரூ.85 (80), ஒருநாளில் ஒரு முறை சென்று திரும்ப ரூ.130 (120), மாதாந்திர கட்டண பாஸ் 50 தடவை பயணிக்க ரூ.2,855 (2,715) வசூலிக்கப்படுகிறது.
அதே போல இலகு ரக வணிக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், சிற்றுந்து ஒரு முறை பயணிக்க ரூ.140 (130), ஒருநாளில் ஒரு முறை சென்று திரும்ப ரூ.205 (195), மாதாந்திர கட்டண பாஸ் 50 தடவை பயணிக்க ரூ. 4,610 (4,390).
மேலும் பஸ், டிரக் ஒரு முறை பயணிக்க ரூ.290 (275), ஒருநாளில் ஒரு முறை சென்று திரும்ப ரூ.435 (415), மாதாந்திர கட்டண பாஸ் 50 தடவை பயணிக்க ரூ.9,660 (9,195) வசூலிக்கப்படுகிறது.
அதே போல கனரக கட்டுமான எந்திரம், மண் அள்ளும எந்திரம், பல்வை அச்சுகளை கொண்ட வாகனம் ஒரு முறை பயணிக்க ரூ.455 (435), ஒருநாளில் ஒரு முறை சென்று திரும்ப ரூ.680 (650), மாதாந்திர கட்டண பாஸ் 50 தடவை பயணிக்க ரூ.15,150 (14,420) வசூலிக்கப்படுகிறது.
இதே போல மிகவும் பெரிய வாகனம், 7 அல்லது அதற்கு மேல் அச்சுகள் உள்ளது ஒரு முறை பயணிக்க ரூ.555 (525) ஒருநாளில் ஒரு முறை சென்று திரும்ப ரூ.830 (790), மாதாந்திர கட்டண பாஸ் 50 தடவை பயணிக்க ரூ.18,440 (17,550) வசூலிக்கப்பட உள்ளது.
- குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கடந்த 13 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
- எதிர்பாரதவிதமாக கிணற்றில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பெரிய தள்ளப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது43), மேஸ்திரி. இவருக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கடந்த 13 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள ஆறுமுகத்திற்கு சொந்தமான விவசாய கிணறு அருகே போகும்போது எதிர்பாரதவிதமாக கிணற்றில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- சதீஷ் அவர்களிடம் மெதுவாக செல்லவேண்டியது தானே என கேட்டுள்ளார்.
- இதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள் அகரம்முருகன் கோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதீஷ் (வயது23). இவரும், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (23),சபரி(19), வேல்முருகன்(19), அம்ப்ரீஷ் (26) ஆகிய 4 பேரும் கெலமங்கலம் மின்வாரியம் அலுவலகம் அருகே காரில் சென்றுள்ளனர். அப்போது சதீஷ் அவர்களிடம் மெதுவாக செல்லவேண்டியது தானே என கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சதீஷ் உத்தனப்பள்ளி போலீசில் கொடுத்த புகார்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 4பேரையும் கைது செய்தனர்.
- பள்ளி மாணவர்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தனியாக பிரிக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
- பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு முகாம் நடத்துவது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தனியாக பிரிக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு முகாம் நடத்துவது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தெளிவாக செயல் விளக்கம் மூலம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. மாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்ப பேரணி வழியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் மஞ்சப்பை களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நகர பிரமுகர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கலந்து கொண்டு இந்த ஒரு நாள் பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார். இம்முகாமில் சுமார் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் பேரூராட்சியின் சார்பில் கவுன்சிலர்கள் ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பள்ளியின் சார்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் சார்பில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த ஒரு நாள் பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
- கடந்த 15 வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிபட்டு வந்துள்ளார்.
- மன விரக்தியடைந்த மகாலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மூக்கண்டப்பள்ளி அருகே உள்ள வேணுகோபால் சாமி தெருவை சேர்ந்த கெம்பன்னா மகள் மகாலட்சுமி (வயது33). இவர் கடந்த 15 வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் மன விரக்தியடைந்த மகாலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.






