என் மலர்
நீங்கள் தேடியது "சத்துமாவு பாக்கெட்டுகள் கடத்தல்"
- அங்கன்வாடி மையங்களிலிருந்து வாங்கி சென்று கால்நடைகளுக்கு போடுவதும் தெரிந்தது.
- இரு மூட்டைகளிலும் இருந்த, 200 சத்துமாவு பாக்கெட்டுகளை சந்திரமோகன் கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவை விற்க முயன்றபோது பிடிபட்டது. கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும், ஆறு மாதம் முதல், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தமிழக அரசு வழங்கும் ஊட்டச்சத்து மாவு பாக்கெட் வழங்கப்படுவதில்லை என பரவலாக புகார் எழுந்தது. இருப்பினும் இது குறித்து எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள அங்கன்வாடியிலிருந்து அதே பகுதியை சேர்ந்தவர்கள், இரு மூட்டைகளில் சத்துமாவு பாக்கெட்டை வாங்கி சென்றனர்.
அப்போது அவ்வழியாக சென்ற சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்க மாநில பொதுசெயலாளர் சந்திரமோகன் அவர்களை தடுத்து விசாரித்த போது தமிழக அரசின் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படும் சத்துமாவு என்பதும் அங்கன்வாடி மையங்களிலிருந்து வாங்கி சென்று கால்நடைகளுக்கு போடுவதும் தெரிந்தது.
இதையடுத்து இரு மூட்டைகளிலும் இருந்த, 200 சத்துமாவு பாக்கெட்டுகளை சந்திரமோகன் கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.ஏழை, எளிய குழந்தைகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் சத்துமாவை கள்ளத்தனமாக விற்பவர்கள் மீது இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேபோல் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் சத்துமாவும் முறையாக வழங்கப்படுவதில்லை என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.






