search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அதியமான் கல்வி நிறுவனத்தில் விளையாட்டு தின விழா
    X

    ஓசூர் அதியமான் கல்வி நிறுவனத்தில் விளையாட்டு தின விழா

    • வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை விடுத்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க விளையாட்டு முக்கியமாகும்.
    • விளையாட்டிற்கு முடிவு என்பதே இல்லை. வேலைக்குச் சென்றாலும் சிறிது நேரமாவது நேரம் ஒதுக்கி விளையாட வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், விளையாட்டு தின விழா, கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு, அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத் தலைமை தாங்கினார். இதில் அதியமான் கல்விக்குழும நிறுவனர் டாக்டர் தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு வாழ்த்திப்பேசுகையில், வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை விடுத்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க விளையாட்டு முக்கியமாகும்.

    விளையாட்டிற்கு முடிவு என்பதே இல்லை. வேலைக்குச் சென்றாலும் சிறிது நேரமாவது நேரம் ஒதுக்கி விளையாட வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் வாழ்க்கையும் ஆரோக்கியமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், சிறப்பு விருந்தி னராக உலககோப்பை கால்பந்து மற்றும் ஒலிம்பிக் போட்டி முன்னாள் நடுவர் சங்கர் கோமலேஸ்வரன் கலந்துகொண்டு பேசுகையில்,"ஒவ்வொரு துறை வெற்றிக்கும் விளை யாட்டே முக்கியமானதாகும்.

    குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே விளையாட்டு என்பது இல்லை. மருத்துவரை விட விளையாட்டுத்துறையில் தான் அதிக வருமானம் உண்டு.

    உடல் தகுதியிருந்தால் தான் மன ஆரோக்கியமாக இருக்கும். மன ஆரோக்கியமே வாழ்வின் வெற்றியாகும். மேலும், மாலை நேரங்களில் சிறிது நேரமாவது விளையாடுவது, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றார்.

    விளையாட்டுத்துறை சார்பில், விளையாட்டுத் துறை இயக்குநர்கள் ஆண்டறிக்கை வாசித்து, மாணவர்கள் நிகழ்த்திய சாதனைகளைப் பட்டிய லிட்டு காட்டினர். தொடர்ந்து, மாநில அளவிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கப் பட்டன.

    இதில், எம்.ஜி.ஆர்.கல்லூரி முதல்வர் முத்துமணி, அதியமான் தொழில் நுட்பக்கல்லூரி முதல்வர்கள், அனைத்துத் துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர். விழா விற்கான ஏற்பாடுகளை, கல்லூரி நிர்வாகம் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×