என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானை தாக்கி பெண் பலி
    X

    யானை தாக்கி பெண் பலி

    • 2 பேரும் மாந்தோப்பில் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டு இருந்தனர்.
    • யானை துரத்தியதில் மாரி தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது45). அதே பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரி (40). முருகன் ஏற்கனவே இறந்து விட்டார்.

    இதனிடையே உறவின ர்களான அண்ணாதுரையும், மாரியும் தூர்வாசனூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இரவு காவலாளிகளாக பணியாற்றி வந்தனர்.

    இவர்கள் 2 பேரும் மாந்தோப்பில் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு யானை திடீரென தூங்கி கொண்டு இருந்த 2 பேரையும் தாக்கியது.

    இதில் மாரி தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அண்ணாதுரை படுகாயம் அடைந்தார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அண்ணாதுரையை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானை தாக்கி பெண் இறந்த தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் இறந்த மாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம்தொ டர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாரிக்கு விஜியசாந்தி (19) என்ற மகளும், குள்ளன் (12) என்ற மகனும் உள்ளனர். தந்தை இறந்ததால் தாய் பராமரிப்பில் இருந்து வந்த இவரது மகள், மகன் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    யானை தாக்கி பலியான மாரியின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதல்கட்டமாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து வனச்சரகர் பார்த்தசாரதி, மாரியின் மகள் விஜியசாந்தியிடம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

    அப்போது ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார், வனவர்கள் சரவணன், செந்தில்நாதன், நாராயணன் மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து வனத்துறை யினர் ஒலிப்பெருக்கி மூலம் போடம்பட்டி, கெட்டூர், பூவத்தி, குருதட்டனூர், தொன்னமாரனூர், மூங்கில்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேரத்தில் மாந்தோப்புக்கு காவலுக்கு செல்லவேண்டாம். உடன் நாயை அழைத்து செல்லக்கூடாது. மேலும் விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×