என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வாஸ்து ஹோமம், விஷ்ணு ஹோமம், காயத்ரி ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடந்தன.
    • மகா கும்பாபிஷேகமும், மகா மங்களாரத்தியும் நடந்தன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை ஸ்ரீசீதாராம வீர ஆஞ்சநேய சமேத ஸ்ரீராகவேந்திர சாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை, 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து ஹோமம், சுதர்சன ஹோமம், விஷ்ணு ஹோமம், காயத்ரி ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து, 12 மணிக்கு மகா பூஜை, நெய் வேத்தியம், மகா மங்களாரத்தி மற்றும் தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.

    நேற்று காலை 6 மணிக்கு ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும், மகா மங்களாரத்தியும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வீராமலையில் உள்ள கோழிப்பண்ணை கடந்த 6 மாதங்களாக செயல்படவல்லை.
    • கோழி பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள நெடுங்கல்லை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 36). ராணுவ வீரர். இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை வீராமலையில் உள்ளது. அந்த கோழிப்பண்ணை கடந்த 6 மாதங்களாக செயல்படவல்லை. இந்த நிலையில் நேற்று முனதினம் அந்த பண்ணைக்கு யாரோ தீ வைத்து சென்றனர்.

    இதில் அந்த பண்ணை முழுமையாக எரிந்தது. இது குறித்து விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள சிவக்குமார் நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இரவு இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு தூங்கினார்.
    • காலையில் எழுந்து பார்ததால் வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் அருகே உள்ள மோட்டுகொள்ள கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 28). இவர் இரவு இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு தூங்கினார். காலையில் எழுந்து பார்ததால் வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து காவேரிபட்டினம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • முன்னால் சென்ற பிக்கப் வேன் எந்த சிக்னலும் இல்லாமல் திரும்பியது.
    • பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீதர் கட்டுபாட்டை இழந்து பிக்கப் வேன் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம்,போச்சம்பள்ளி அருகே உள்ள குப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (27). இவர் போச்சம்பள்ளி அருகே புளியூர்- குள்ளனூர் சாாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது முன்னால் சென்ற பிக்கப் வேன் எந்த சிக்னலும் இல்லாமல் திரும்பியது.

    இதன் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீதர் கட்டுபாட்டை இழந்து பிக்கப் வேன் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கண்டெய்னர் லாரி எந்த வித சிக்னலும் இல்லாமல் லாரியை சாலையில் பிரேக் போட்டு நிறுத்தினார்.
    • லாரிக்கு பின்னால் வந்த கணேஷ் லாரியின் மீது மோதி பலத்த காயமடைந்தார்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 33). இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்போது முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி எந்த வித சிக்னலும் இல்லாமல் லாரியை சாலையில் பிரேக் போட்டு நிறுத்தினார்.

    இந்நிலையில் லாரிக்கு பின்னால் வந்த கணேஷ் லாரியின் மீது மோதி பலத்த காயமடைந்தார். அந்த சாலை வழியாக சென்றவர்கள் கணேசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வங்கி கணக்கிற்கு கூகுல்-பே மூலம் ரூ.3லட்சத்து 10 ஆயிரம் அனுப்பி உள்ளார்.
    • தான் ஏமாற்ற பட்டதை அறிந்த ஜனனி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் இளம்பருதி. இவருடைய மனைவி ஜனனி (வயது 32). இவருக்கு இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலையில் நல்ல வருமானம் கிடைப்பதாக குறுஞ்செய்தி வந்தது.

    இதனை நம்பி ஜனனி அவருடைய வாட்ஸ்-அப் எண் மூலம் தொடர்பு கொண்டு மர்ம நபர் வங்கி கணக்கிற்கு கூகுல்-பே மூலம் ரூ.3லட்சத்து 10 ஆயிரம் அனுப்பி உள்ளார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட போது எந்த பதிலும் கிடைக்கவில்லை.

    பின்னர், தான் ஏமாற்ற பட்டதை அறிந்த ஜனனி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தடகள போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவி கீர்த்தி, வெள்ளி பதக்கம் வென்ற மாணவர் டீலக்ஸ் சச்சின் மற்றும் குழு போட்டியான கபடியில் பங்கு பெற்றனர்.
    • இந்த மாணவர்களை தம்பிதுரை எம்பி பாராட்டினார்.

    ஓசூர்,

    21- வது அகில இந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளம் மற்றும் குழு போட்டிகள், அரியானா மாநிலம் நூசாக்கிலுள்ள சவுத்ரி சரண்சிங் அரியானா வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் பங்கு பெற்றனர்.

    இதில், தடகள போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவி கீர்த்தி, வெள்ளி பதக்கம் வென்ற மாணவர் டீலக்ஸ் சச்சின் மற்றும் குழு போட்டியான கபடியில் பங்கு பெற்ற மாணவர் நிர்மல் தீபக் ஆகியோரையும், கல்லூரியின் உடற்கல்வி உதவி பேராசிரியர் வினிக்கர்ராஜ் ஆகியோரை, அதியமான் வேளாண்மைக் கல்லூரி நிறுவனர் டாக்டர் மு. தம்பிதுரை எம்.பி மற்றும் கல்லூரியின் அறங்காவலர் சுரேஷ் பாபு, கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதரன், மேலாளர் சுப்பிரமணி, மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர் குப்புசாமி, ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 19 ஆம் தேதி முதல் யாக வேள்விகள் நான்கு காலங்களாக நடைபெற்றது
    • வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண வடிவம் நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கல்லாவி மெயின் ரோட்டில் உள்ள வள்ளி தெய்வநாயகி சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 19 ஆம் தேதி முதல் யாக வேள்விகள் நான்கு காலங்களாக நடைபெற்றது. கோபூஜை கஜ பூஜை நடைபெற்று ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது.

    கோவிலில் உள்ள கணபதிகள் பரிவார தேவதைகள் ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் விமானம் ராஜகோபுரம் ஆகியவைகளுக்கு சிவாச்சாரியார்கள் சர்வ சாதகம் சிவசுப்பிரமணிய சிவம் சிவப்பிரசாத்சிவம் மணிகண்ட சிவம் ஆகியோர் அபிஷேகம் செய்தார்கள்.

    சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண வடிவம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளில் ரத்தினகிரி பாலமுருகன் சுவாமிகள் கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்க வாசகர் சுவாமிகள், எலவனாசூர் கோட்டை பகவதி சுவாமிகள், கந்திகுப்பம் பைரவ சாமிகள் ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.

    • மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த கல்வியை கற்க வேண்டும்.
    • மாணவர்கள் நன்றாக படித்து நுழைவுத்தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெற வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் மறுமலர்ச்சி தடம் மற்றும் தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகத்துடன் இணைந்து நடத்தும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான 'விழுதுகளை வேர்களாக்க" என்கிற உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    இதை கலெக்டர் கே.எம்.சரயு தொடங்கி வைத்து பேசியதாவது:-

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களில் குறைவான மாணவர்களே உயர்கல்விக்கு செல்கின்றனர். நன்றாக படித்த, தனித்திறமைகள் உள்ள பல மாணவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். அத்தகைய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    இதன் மூலம் என்னென்ன படிப்புகள் உள்ளன, அந்த படிப்புகளை படித்த பின் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும். மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த கல்வியை கற்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படித்து நுழைவுத்தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெற வேண்டும்.

    முதல் முயற்சி தோல்வி அடைந்தாலும் கவலைப்படாமல், தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். இக்காலகட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவது என்பது கடுமையாக உள்ளதால் மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கான திட்டங்கள், தங்களுக்கான தனித்திறமைகளை கண்டறிந்து அதற்கான படிப்புகளை படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், ஒருங்கிணைப்பாளர் (மக்கள் மறுமலர்ச்சி தடம்) சங்கர்,

    கல்வி ஆலோசகர்கள் அமுதவள்ளி, இளையராஜா, தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலத்துறை) கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இடி தாக்கியதில், சோலார் உருளைகள் வெடித்து சிதறியது தெரியவந்தது.
    • அவரைகுடும்பத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தினர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே பழைய மத்திகிரி பகுதியில் உள்ள பொதிகை நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் யேசுபாண்டியன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் சூர்யா, சினேகா என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஓசூர் பகுதியில் சூறாவளி காற்று இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது, மத்திகிரி பகுதியில் பயங்கர சத்தம் காணப்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டதில், யேசுபாண்டியன் வீட்டின் மேல் தளத்தில் உள்ள உருளை சோலார் வாட்டர் ஹீட்டரில் இடி தாக்கியது தெரியவந்தது.

    இடி தாக்கியதில், சோலார் உருளைகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. மேலும், வீட்டின் மேல் தளத்தில் ஓட்டை விழுந்து முதல் மாடியில் தனது அறையில் இருந்த பட்டதாரி சினேகா (22) மீது சிமெண்ட் கல் விழுந்து படுகாயமடைந்தார்.

    உடனடியாக, அவரைகுடும்பத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தினர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    • 15 நாட்கள் மாணவர்களுக்கு அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டது.
    • கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

    கடந்த 10.05.2023 முதல் 24.05.2023 வரை நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் கூடைப்பந்து, சிலம்பம் மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள் முறையாக பயிற்றுவிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி முகாமில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறைந்தது 6 மாத கால பயிற்சி முறைகளை காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் இந்த 15 நாட்கள் மாணவர்களுக்கு அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கும், மேலும் கபடி மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தன.
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் ஜோடுகுண்டுபள்ளம் ஸ்ரீராஜகணபதி நகரில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு வேதபாராயணம், கோ பூஜை, கணபதி பூஜை, மகா சங்கல்பம், நவகிரக ஹோமம், ருத்ர ஹோமம் ஆகியவை நடந்தன. காலை 9 மணிக்கு தீபாராதனையும், கடம் புறப்பாடும், 9.45 மணிக்கு வரசித்தி விநாயகருக்கு கலசாபிஷேகம் ஆகியவை நடந்தன.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. மாலை 6 மணிக்கு வரசித்தி விநாயகருக்கு சகஸ்ரநாமம், அதனை தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வினியோகம் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×